Saturday, January 1, 2011

என் சபதங்கள்

முதலில் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் பலர் தங்களுடைய சபதங்களை தங்கள் வலைப்பூவில் வெளியிட்டிருந்தார்கள். மேலும் சில நண்பர்கள் அதை பற்றி என்னிடம் நேரடியாகவும் பேசினார்கள். சரி நாமும் இந்த புத்தாண்டு முதல் சில சபதங்களை எடுக்கலாம் என்று எண்ணினேன்(முதல் முறையாக சில சபதங்கள். இதற்கு முன்பு பலமுறை நினைத்திருக்கிறேன் ஆனால் செய்ததில்லை.இப்பொழுதாவது பாக்கலாம். சும்மா உருப்படியா ஏதாவது செய்யணும்ல அதான் )

முதலில் என்ன சபதம் எடுப்பது என்று தெரியவில்லை. நீண்ட நேர யோசனைக்குப்பிறகு  சில விசயங்களை முடிவு செய்தேன். பாக்கலாம் ஏதாவது மாற்றம் வருதான்னு

முதலில் வலைப்பூவை பற்றி- கடந்த ஏப்ரல் மாதம் இணைந்த நான் என் முதல் பதிவையே கடந்த டிசம்பர் மாதம் தான் பதிவு செய்தேன். இனி வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து பதிவுகளை போடவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.
அடுத்து தூக்கம் நான் நிறைய நேரம் தூங்குவதாக பலர் என்னிடம் சொல்லியுள்ளார்கள். அதனால் அதை மாற்றவேண்டும்
அடுத்து கோபம் சில நேரங்களில் நான் மிகவும் கோபப்படுவேன் அதை குறைக்கவேண்டும். இது பலருக்கு உள்ள பழக்கம் தான். கோபம் நண்பர்களையும் பிரித்துவிடும். அதனால் அதை குறைக்கவேண்டும்.
அடுத்து ஏதாவது நல்லவேலையில் சேரவேண்டும். எத்தனை நாளைக்குதான் இப்படி படிக்கிற மாதிரியே திரியறது. யார் பாத்தாலும் கேக்குற முதல் கேள்வி இன்னமும்மா படிக்குற. ரொம்ப அசிங்கமா இருக்கு அதனால எப்படியாவது ஒரு வேல வாங்கிடனும். அதுவும் placement முலமாக வாங்கிடனும்.

சரி எப்படியோ சில விஷத்தை ரெடி பண்ணி ஒரு சில சபதங்களை எடுத்துவிட்டேன். பாக்கலாம் ஏதாவது உருப்பிடியா ஏதாவது நடக்குதானு பார்க்கலாம்.


முடிக்கும் முன்பு அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

4 comments:

  1. @கலாநேசன்- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Wishing you to keep your Ooath's on New Year!
    Pl visit my blog regularly for Jobs
    http://saigokulakrishna.blogspot.com
    and share the Job details to ur friends to get good Job.
    Best Wishes!
    Sai Gokulakrishna

    ReplyDelete
  3. Just now I saw your profile,
    I am also from Arcot(Vellore Dist), so hope keep in touch.
    Neenga thaana antha pachai thamizhan??? unga freind netre ungalai intro. seithirun

    ReplyDelete
  4. @Sai Gokula Krishna.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....ஆமங்க...நான் தாங்க அந்த பச்சைத்தமிழன்...ஊர்காரனாய்டீங்க....கண்டிப்பா வரோம் அங்க...நீங்களும் இங்க வந்துட்டு பொங்க......

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி