Sunday, February 27, 2011

இன்ப அதிர்ச்சி



      கடந்த வெள்ளிக்கிழமை மதியம் என்னுடைய மின்னஞ்சலை திறந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. திரு சீனா ஐயா அவர்கள் 28 ஆம் தேதி முதல் துவங்கும் வாரத்திற்கு என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். முதலில் பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு கூட நான் வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரி வந்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.

     ஒத்துக்கொண்ட பின்பு தான் எனக்கு ஒருவித பயம். ஏனெனில் இதுவரை எழுதியவர்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இப்பொழுது எழுதி முடித்த நண்பன் பிரபாகரனும் பிரமாதமாக கலக்கி இருந்தார். நான் இதையெல்லாம் கெடுத்துவிடுவேனோ என்று ஒரு பயம். சரி எல்லா பாரத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்துள்ளேன்.

     ஆகையால் உங்களின் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தவறுகளே அல்லது ஆலோசனைகளோ எதாவது  இருந்தால் சுட்டுக்காட்டவும். என் மின்னஞ்சல் முகவரி- tpari88@gmail.com
பி.கு:- வலைச்சரத்தில் எழுதுவதால் இந்த வாரம் நான் இங்கு எழுதமுடியுமா என்று தெரியவில்லை. ஆதலால் Operation ஆரியபட்டா அடுத்த திங்கள் முதல் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
பாரி தா


Friday, February 25, 2011

Operation ஆரியபட்டா



நான் தூக்கத்தில் கண்ட கனவில் என் கற்பனையையும் சேர்த்து இப்பொழுது உங்கள் முன் கதையாக.

2040 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அந்த நிகழ்வு நடந்தால் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய நாடாக மாறும். அழிக்க முடியாத, மறுக்க முடியாத சக்தியாக ஆகும். பல நாடுகள் இது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு பொறாமை இந்தியா உலக அளவில் மிகச்சிறந்த நாடாக மாறிவிடும் என்று.

அந்த நிகழ்வு, நம் பூமியை போலவே உள்ள வேறு கிரகத்திற்கு நாம் விண்கலம் அனுப்புகிறோம். அந்த விண்கலத்தின் பெயர் ஆரியபட்டா. அதுவும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான விண்கலம் மூலமாக நம் விஞ்ஞானிகள் அங்கு செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக சில நாடுகள் இந்த முயற்சி எடுத்தும் அது தோல்வியில் போய் முடிந்துவிட்டது. அதனால் அந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் முயற்சியும் தோல்வியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் இந்தியாவும் 20 ஆயிரம் கோடி செலவு செய்து அந்த விண்கலத்தை தயார் செய்துகொண்டிருக்கிரார்கள். அந்த விண்கலத்தை தயார் செய்ய எட்டு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படுகிறார்கள். அவர்களில் இருவர் இயற்பியல் வல்லுனர்கள், இருவர் வானவியலில் வல்லுனர்கள், இருவர் பொறியியல் வல்லுனர்கள், ஒரு கணித வல்லுனர். இவர்களுக்கு ஒரு தலைவர்.

பணிகள் சரியாக சென்றுகொண்டிருந்தது. இரவு பகல் எனப்பார்க்காமல் உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வருட உழைப்பிற்கு பிறகு அனைத்தும் செய்தாகிவிட்டது. எல்லா பகுதிகளும் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும் பணி நடந்தது. அதுவும் முடிந்தவுடன் மிக பெருமையாக இந்திய அரசு அந்த விண்கலத்தை விண்ணில் ஏவ ஆகஸ்டு 15ஆம் தேதியை முடிவு செய்தது. இந்தியாவைவிட மற்ற நாடுகள் இதை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.  இதில் மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் பயணம் செய்கிறார்கள்.

எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. உலகமே இந்தியாவை பார்த்துக்கொண்டிருந்தது. பிரதமர் தன்னுடைய சுதந்திர தின விழா உரையை முடித்துவிட்டு அங்கிருந்த படியே பெருமையாக விண்கலத்தை ஏவ signal  கொடுக்கிறார்.

விண்கலமும் புறப்பட்டு விட்டது. முதல் கட்டத்தை தாண்டியது ஆனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடந்தார்கள். அப்பொழுது அந்த நிகழ்வு நடந்தது........
                                        தொடரும்......
*****************************************************************************************

என்றும் அன்புடன்,
பாரி.தா

பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்......

Thursday, February 24, 2011

முடியாதது எதுவும் இல்லை-2


சென்ற வாரம் FACEBOOK இல் ஒருவரைப்பற்றி படித்தேன். அதை உங்களுடன் நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

நாகா நரெஷ் கருடுர(Naga Naresh Karutura) என்னும் மாணவரைப் பற்றிய பதிவு இது. இவர் சென்னை IIT யில் பயின்று கூகுளில்(Google) வேலை செய்ய தேர்வாகியுள்ளார். இது பெரிய சாதனையா என்று நீங்கள் கேட்கலாம். பலர் இதை செய்திருக்கமுடியும்.

இவரின் பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள். தங்கள் மகன் படிக்கவேண்டும் என்று அவருக்கு முழு துனையாக இருப்பவர்கள். இதுவும் பெரிய சாதனை இல்லை. ஏனெனில் பல படிப்பறிவில்லாதவர்கள் இதை செய்துள்ளார்கள்.

இவர் அடிக்கடி சொல்வது ”இறைவன் எனக்கு எல்லாம் சரியாக செய்து கொடுத்துள்ளார். எனக்கு என்ன தேவையோ அதை அவர் சரியான நேரத்தில் தந்துள்ளார்” என்பது தான்.

இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். சிறுவயதில் மற்ற பிள்ளைகளைப்போல இவரும் ஓடியாடி விளையாடியவர்தான். ஆனால் விதி லாரி ரூபத்தில் வந்தது. ஒரு நாள் இவரின் தந்தையின் நன்பரின் லாரியில் சென்றுகொண்டிருக்கும் போது கதவை இவர் சரியாக மூடாததால், லாரியின் வேகத்தில் அது திறந்து இவர் வெளியே வீசி எரியப்பட்டார். அப்போது அந்த வண்டியில் பின்னே இருந்த கம்பி இவரின் காலை தாக்கியது. உடனே அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர்கள் இதை விபத்து என்று கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

     அங்கிருந்து வேறு ஒரு மருத்துமனைக்கு எடுத்து செல்லும் முன் அவரின் கால் செல்கள் உயிரிழந்துவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அதை அகற்றிவிட்டார்கள்.

முதலில் இவர் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் மனம் தளரவில்லை. அவருக்கு தன்னை யாராவது பரிதாபமாக பார்த்தால் பிடிக்காது. பெற்றோர் மற்றும் சகோதரியின் உதவியோடு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் IIT-JEE கோசிங் படித்தார். பின்னர் தேர்வில் வெற்றிபெற்று இவர் IIT-Chennai யில் சேர்ந்தார். அங்கு உள்ள மாணவர்களின் உதவியுடன் தன் படிப்பை தொடர்ந்தார். இவரின் சீனியர் மானவர்கள் இவருக்காகவே ஒரு விஷேச wheelchair ஒன்றை செய்து தந்தார்கள். விடாமுயற்சியுடன் படித்து இப்போது கூகுளில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். கால்கள் இல்லை என்று முடங்கிப்போகாமல் உழைத்து வளர்ந்துள்ள இவர் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துவோமாக…

என்றும் அன்புடன்
பாரி. தா

பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை முன்னேற உதவும்....

Tuesday, February 22, 2011

அரசியல் படங்கள் சில

 நன்றி : தினமணி, கூகுள், tamilmakkalkural.blogspot.com

நம்ம பிரதமர் ரொம்ப அப்பாவிங்க....


 ஆட்சி மாறினால் கண்டிப்பா கைது தான்... அதான் நம்ம CM ஒரு Practice


தேர்தலுக்கு பின்னாடி எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு வாய்ப்பு உண்டு



என்ன சொல்லுறதுனே தெரியல 
  
என்றும் மாறா கூட்டணி


இவங்களுக்கு மானம் இருக்குற மாதிரி கேக்குறாங்க


தலைவர்கள் இப்படி தான் நினைப்பார்கள்


இறுதியாக ஒன்று

Spectrum ராஜா Facebook இல் Account வைத்திருந்தால் இப்படிதான் இருந்திருக்கும்




என்றும் அன்புடன்
பாரி . தா

பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்......


Friday, February 18, 2011

மு.க. குடும்பம்


இனையதளத்தில் நான் எனக்கு தேவையான படங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு நம் தமிழக முதல்வரின் குடும்ப படம் கிடைத்தது.

சரி அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.


தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் இவர்களை…. தமிழகத்தை ஆட்சி செய்ய (கடவுளே காப்பாத்து) இவர்களுக்கு வாய்ப்பு உண்டு.
 என்றும் அன்புடன்,
     பாரி.தா

Wednesday, February 16, 2011

Spectrum-நடந்தது என்ன? பாகம்-2

  நேற்றையா பதிவின் தொடர்ச்சி.


முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும்




துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டியமக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. 

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்டகைபற்றபட்ட ஆவணங்கள்,சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்புசட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள்சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும்குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள்பள்ளிகள்பாலங்கள்மருத்துவமனைகள்தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்புஅடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படிஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. 

ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். 

வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள்ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழைபணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkutஎன்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

Tuesday, February 15, 2011

spectrum-நடந்தது என்ன??? பாகம் 1



நண்பர்களே, இது எனக்கு வந்த மின்னஞ்சல். நீங்களும் இதை படிக்கவேண்டும் என்று நான் நினத்தேன். சிலருக்கு இது கிடைத்திருக்கலாம். கிடைக்காதவர்கள், இதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நீலம் அதிகமாக இருப்பதால் இதை இரண்டு பதிவாக போட உள்ளேன்.

********************************************************************************
இனி எனக்கு வந்த மின்னஞ்சல்

நண்பர்களே!!!

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம்அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லைஅதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம்அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டதுஇனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக்ஆர்குட்ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.


மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.


1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.


நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
 

இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.


நியாயக் கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY)பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
 

அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள்.2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
 

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
 

மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
 

ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.


மக்களுக்கு நடந்த துரோகங்கள் நாளை

பிடித்திருந்தால் செய்தி பர உதவி செய்யுங்கள்… அப்படியே உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கள்…..


Monday, February 14, 2011

வகுப்பறையில் இன்று


"Rich get richer and poor get poorer" - இது சிவாஜி படத்தில் ரஜினி அவர்கள் பேசிய வசனம். அவர் மட்டும் அல்ல நான் படிக்கும் கல்லூரியில் வேலை செய்யும் ஒரு பேராசிரியரும்  சொல்லும் வசனமும் கூட.

இது பாடங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனிலும் அவர் பல முறை கூரியவை. அவர் எங்களுக்கு பாடங்கள் கற்பித்ததைவிட வெளியெ போன பிறகும் நாங்கள் வாழும் வாழ்க்கையை பற்றி கூறியது அதிகம்.

குறிப்பாக அவர் இன்று(14-2) வகுப்பறையில் அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

முடியாதவர்களை பார்த்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்வார்களா என்று நாம் எதிர்பார்கிறோமே ஒழிய நாம் உதவுவதில்லை.(அதற்கு அவரது வாழ்விலேயே ஒரு உதாரணம் சொன்னார்.) அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

     நாமெல்லாம் 2020இல் இந்தியா வல்லரசாகும், 2050 பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலாவதாக இருக்கும் இரண்டாவதாக இருக்கும் என்று பேசுகிறோம். அதற்கான முயற்சிகளை செய்வதாக அரசாங்கள் சொல்கிறது. ஆனால் இன்றைய நிலைமையை மறந்துவிடுகிறோம். தினமும் இரண்டு வேலை உணவில்லாமல் பலர் உள்ளார்கள். அவர்களை மறந்து விடுறோம். அவர்களுக்கு நம் உதவி தேவை.

     நாம் அரசாங்கத்திற்கு கட்டிய வரிகள் நமக்கு நல்லதை செய்ததைவிட பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளூக்கு சென்றது அதிகம். அவர்களுக்கு நல்லது செய்தது அதிகம். நாம் மிகச்சிறிய அளவில் தவறு செய்தால் தண்டிக்க ஆயிரம் சட்டங்கள். அதுவும் உடனுக்குடன் பெரும்பாலும் கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் ஊழல், லஞ்சம் செய்யும் ஆரசியல் வியாதிகளை தண்டிக்க பல தடைகள். அவர்களைக்காக்க பல பெருந்தலைகள் பல வழிகளில் செயல்படுகிறார்கள்.

     அவர் இன்று சொன்ன ஒவ்வொரு கருத்தும் உண்மை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள். அப்படியே உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்கள்.
      

Thursday, February 10, 2011

முடியாதது எதுவும் இல்லை


நேற்று இரவு வழக்கம் போல சாப்பாடு முடிந்துவிட்டு மடிக்கணிணியை எடுத்துவைத்து உட்கார்ந்தேன். நான் முன்பே சொன்னது போல எங்கள் கல்லூரியில் உள்ள இனையதள வறைமுறை தூதுவர் மூலமாக ஒரு நன்பனிடமிருந்து ஒரு வீடியோ வந்தது. அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     சரி அப்படி என்ன அதில் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அதை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். பார்த்தவுடன் அதை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். நிக் வுஜிசிக்(NICK VUJICIC) என்பவரின் வீடியோ அது. 

நிக் வுஜிசிக்(NICK VUJICIC):

நிக் வுஜிசிக் பிறக்கும் போதே டெட்ரா அமீலியா(Tetra Amelia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் இல்லாமல் பிறந்தார். நல்ல திடமான உடம்புடன் பிறந்தவர்களுக்கே வாழ்க்கயில் பல பிரச்சனை. அப்படியிருக்க இவரை நினைத்துப்பாருங்கள். 

சிறு வயதில் இவர் வாழ்க்கையை நொந்து பல முறை தற்கொலைக்கு முயன்றவர். பிறகு தன்னை பார்த்து பலர் மாறுவதைக்கண்ட அவர் அந்த முயற்சியை கைவிட்டார். தன்னைபோல உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடிவுசெய்தார். 



வளர்ந்த பிறகு LIFE WITHOUT LIMBS என்னும் தன் ஆர்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பல இடங்களுக்கு சென்று மக்களால் செய்யமுடியும் என்று ஊக்கபடுத்துகிறார். குறிப்பாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடம் முடியும் என்னும் தன்னம்பிக்கையை வளர்த்துவருகிறார்.

மேலும் அவரை பற்றி படிக்க

சினிமா நடிகர்களை பற்றி தெரிந்துகொண்டுள்ள நாம் இதுபோல சாதிக்கும் சிலரை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமே. இவரின் சில கருத்துக்கள் உங்களுக்கு பிடிகாமலிருக்கலாம் ஆனால் கை, கால் இல்லை என்று மனம் தளராமல் சாதிக்கும் இவரின் மனவலுவை நிச்சயம் பாராட்டதான் வேண்டும்…


பிடித்திருந்தால் பலரை சென்றடைய உங்கள் ஓட்டை போடவும். அப்படியே உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டுபோகவும்…
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி