Tuesday, August 30, 2011

தடுக்கப்படவேண்டிய தற்கொலைகள்



எல்லாவற்றிற்கும் தற்கொலை பதிலாகாது. மற்றவரின் பார்வையை, ஆதரவை தன் பக்கமும் தன் கோரிக்கையின் பக்கமும் திருப்ப இது போல தவறான எண்ணங்களை நாம் ஆதரிக்ககூடாது. முன்னர் முத்துக்குமரன், இப்பொழுது செங்கொடி. நாளை???
.
எதையும் சட்டரீதியாக சந்திக்கவேண்டும். இறந்த அந்த இரண்டு பேருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர்கள் செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் என்ன பாடுபடும்?

இவர்களின் இந்த முடிவு தவறானது என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை. இதை போல அடுத்த சில தற்கொலைகள் ஏற்படும் முன் நாம் இதை தடுத்தாகவேண்டும். இது போல எண்ணங்கள் இளைஞர்களுக்கு வரக்கூடாது.

தற்கொலை செய்து கொள்வது சட்டபடி தவறு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி அது ஒரு குற்றம். இவ்வாறு தற்கொலைக்கு முயல்பவர்களை காவல்துறை கைது செய்துவிடும். இப்பொழுது கூட மதுரையில் பேரரிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுதலை செய்ய சொல்லி மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு முயல அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

வாழ வேண்டிய வயதில் பிரச்சனைகளுக்கு போராடாமல் இது போல தற்கொலைக்கு முயல்வது ஒரு மூடத்தனம். இதை நாம் ஆதரிக்கவே கூடாது. எதையும் சட்டபடி செய்யவேண்டும். நம் செய்கைகள் மற்றவர்களை நல்வழியில் கொண்டு செல்லவேண்டுமே தவர அவர்களியும் தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது. இறந்து போன ஆன்மாக்கள் சாந்தியடைய நாம் பிராத்தனை செய்யும் இந்த நேரத்தில், இது போல எண்ணங்கள் என்றும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதிகொள்ளவேண்டும்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.  

Monday, August 29, 2011

முதலில் நாம் மாறுவோமா?



இன்னைக்கு நம்ம நாட்டுல ரொம்ப முக்கியமான நிகழ்வு அன்னா ஹசாரேவின் போராட்டம். ஒரு வழியா அது முடிஞ்சிபோச்சி. இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவு. சாதாரண மக்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை எல்லோரும் இதற்கு ஆதரவு. எதோ ஊழல ஒழிக்கனும் ஒழிக்கனும்னு கத்திக்கிட்டு இருக்கோம். லஞ்சமா வாங்கின கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வரனும். அதுக்கு வேற ரமணா மாதிரி கணக்கு தராங்க. அந்த பணம் வந்துட்டா நமக்கு 10 வருசம் வரி தேவையில்லையாம், பெட்ரோல் 25 ரூபாய்க்கு தருவாங்கலாம். என்னமா சொல்லுராங்க. சொல்லுரவங்கலை எல்லாம் நான் கேட்டுரேன்(என்னையும் சேர்த்துதான்), நாம எத்தன பேர் இதுவரைக்கு லஞ்சம் வாங்குனதோ கொடுத்ததோ இல்லை. சத்தியமா சொல்லுங்க. குழந்தைகிட்ட கூட நீ இத பண்ணா நான் இதை செய்வேனு சொல்லி எல்லாத்துக்கும் எதாவது கிடைக்கும்னு எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

நம்ம ரேஞ்சுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் வாங்குனா, நம்மள மாதிரி லட்சம் பேரு ஓட்டு போட்டு MLA, MP ஆகுறவங்க அவங்க ரேஞ்சுக்கு கோடியில வாங்குராங்க. அதுக்கும் யார் காரணம். நாமதான். அவனுக்கு ஓட்டு போட கூட நாம அவங்ககிட்ட இருந்து பணம், பொருள்னு எவ்வளவு வாங்கியிருக்கோம். அப்புறம் அவன் எங்க பணத்த சுருட்டிட்டான், முழுங்கிட்டான் அப்படினு போலம்பரது. முதலில் நாம சுத்தமா இருக்கனும்., அப்புறம் மத்தவங்கல பத்தி பேசனும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துல அவருக்கு ஆதரவு தரோம்னு போய் இருந்தவங்கல்ல பலபேருக்கு ஜன் லோக்பால் பத்தி பாதி தெரியாது. அரசாங்கம் என்ன சொல்லியிருக்காங்க, அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால்ல என்ன இருக்கு எதுவுமே தெரியாது. அதனாலதான் அவங்கலே அதை மக்களுக்கு விளக்கி சொன்னாங்க.(எனக்கும் எதுவும் தெரியாது என்பது உண்மை). சும்மா நாமும் அதரவு தரோம்னு சீன் போட்டுகிட்டு போய் உட்கார்ந்துகிறது.

எத்தனபேர் பொறியியல் கல்லூரியிலேயோ, மருத்தவ கல்லூரியிலேயோ, அல்லது வேறு ஏதாவது படிக்கவோ CAPITATION அதாவது DONATION தந்திருக்கோம். நாம மட்டும் தப்பு செய்யலாம் ஆனா மத்தவன் செய்தா நமக்கு வலிக்குது. அது கூட ஏன்னா அவன் நிறைய சம்பாதிக்குறான். நமக்கு கொஞ்சமா கிடக்குதுங்கிற வயித்தெறிச்சல். அதான் காரணம்.. வேர ஒன்னும் இல்லை

இறுதியா நான் என்ன சொல்லுரேன்னா நானும் அன்னா ஹசாரே சொல்லுர மாதிரி ஊழல் ஒழியனும் என்பதை ஒத்துகிறேன். ஆனா அதுக்கு முதலில் நாம மாறனும். அப்புறம் மத்தவங்களுக்கு நாம சொல்லலாம். எல்லாம் மாற்றமும் வீட்டில் இருந்து தான் என்பது என் கருத்து.

ஜெய் ஹிந்த்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மோசடிகள் சில


இது எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது

அமைதியின் நாடாக இருந்த நம் இந்திய நாடு இப்பொழுது மோசடிகளின் நாடாக மாறிவிட்டது.
இங்கே நம் இந்தியாவில் நடந்த  சில மோசடிகள் உங்களுக்காக

இந்த தொகையை பார்த்தால் எனக்கு மயக்கமே வருகிறது. நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி