Wednesday, May 25, 2011

பழனியில் நடக்கும் கொள்ளை



கடந்த மாதம் என் நண்பன் ஒருவன் பழனி முருகர் கோயிலுக்கு போயிருந்தான். மனம் உருகி இறைவனை வேண்ட போயிருந்தவனுக்கு அங்குள்ள வியாபரிகள் தந்த தொல்லையில் மனம் நொந்து வந்தான். கோயிலுக்கு போகும் வழியெல்லாம் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களால் தொல்லை ஏற்பட்டதாக மன வருத்தத்துடன் தெரிவித்தான். அங்கு கோயிலுக்கு வரும் நபர்களை முதலில் காலனிகளை விடச்சொல்லுவது பிறகு அவர்களிடன் அர்ச்சனை தட்டு 290 ரூபாய் என்று விற்பது. பிறகு அதற்கு ஒரு ரசிது தந்துவிடுவது. அதற்கு பிறகு அதே போல செருப்பு விடச்சொல்லுபவர்களிடன் அந்த ரசிதைகாட்டவேண்டும் இல்லையேல் மேலும் ஒரு அர்ச்சனை தட்டு வாங்க சொல்லுவது என ஒரே கொள்ளை

அது மட்டும் இல்லாமல் கோயிலுக்கு போகும் வழியில் உள்ள இடங்களிலும் உள்ள சிறு சிறு கோயில்களின் பூசாரிகளும் மக்களை மிரட்டி பணம் கேட்கும் நிலைமை அங்கு உள்ளதாக என் நண்பன் மன வருத்தத்துடன் கூறினான். இது இல்லாமல் நடக்கும் போது ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை போன்ற பொருட்களை மக்களின் விருப்பம் இல்லாமல் அவர்களின் தோலில் போட்டுவிட்டு அதற்கு காசு கேட்பது அங்கு இருப்பதாக தெரிகிறது.

பழனி கோயிலுக்கு சென்றால் நிச்சயம் 500 முதல் 1000 ரூபாய் வரை தேவையில்லாமல் செலவாகும் நிலை உள்ளது. மன சாந்தி அடைய கோயிலுக்கு வரும் பக்தர்களிடத்தில் இது போல செய்வதால் அவர்களின் நிம்மதி குறைந்து மீண்டும் இந்த கோயிலுக்கு வர வேண்டும் என்கின்ற எண்ணமும் அவர்களுக்கு வராது. மேலும் பலரிடம் இதைப்பற்றி சொன்னால் அவர்களும் அங்கு சொல்லும் எண்ணத்தை கைவிட நேரலாம். இதை கோயில் நிர்வாகம் கவனித்து சரி செய்யுமா?. இதுபோல தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றுவார்களா???

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Monday, May 23, 2011

எங்க ஊருக்கு வந்த காதல் சின்னம்


     காதல் சின்னம்னு சொன்னா எல்லாருக்கு நினைவுக்கு வருவது தாஜ்மகாலும் ரோஜாவும் (நான் ரோஜாபூவ சொன்னேன். யாராவது வேர நினைசீங்கன்னா அதுக்கு கம்பனி பொறுப்பாகாது). ரோஜா எல்லா ஊரிலேயும் இருக்கும் ஆனா தாஜ்மகால் ஆக்ராவில் மட்டும் தான் இருக்கும். ஆனா இப்ப அது வேலூருக்கும் வந்துருச்சி



     வேலூர் கோட்டையில் ஒரு பெரிய மைதானம் இருக்கு. எப்ப எந்த கட்சி கூட்டம் வேலூர்ல நடந்தாலும் அது அங்க தான் நடக்கும். சாதாரணமா அங்க எப்ப இந்த பள்ளிக்கூட லீவு விடுர நாள் வந்தாலும் பொருட்காட்சி வச்சிடுவாங்க. ஆனா இந்த முறை அங்க கூடுதலா தாஜ்மகால் மாதிரிய செஞ்சி வச்சியிருக்காங்க. நல்லா இருக்குங்க. உண்மையான தாஜ்மகால நான் எப்ப பார்ப்பேன்னு தெரியாது. ஆனா அது வரைக்கும் இந்த தாஜ்மாகலின் நினைவு இருக்குங்க. என்ன சாதாரனமா 5 ரூபா வாங்குர துக்கு பதிலா இப்ப முப்பது ரூபா வங்குராங்க அது தான் வருத்தமா இருக்கு. பரவாயில அப்படியோ நானும் தாஜ்மகால பாத்துட்டேன். அது பக்கத்துல இருந்து போட்டோ எடுத்துக்கிட்டேன். இது போல வரலாற்று சிறப்புமிக்க தலங்களின் மாதிரிகளை செய்து வைப்பது சிறப்பான ஒரு ஐடியா தான். நிச்சயமா இதுவரை சம்பாதித்ததில் இந்த முறை தான் அந்த நிர்வாகம் அதிகமான லாபம் ஈட்டியிருக்கும். இதே போல மற்ற இடங்களிலும் பொருட்காட்சி போடுபவர்கள் பின்பற்றலாம்.



அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி.
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி