Monday, March 21, 2011

OPERATION ஆரியபட்டா இறுதி பாகம்
மேலும் விசாரித்த பொழுது  ராஜெஷுக்கு தெரியவந்த ஒரு விஷயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது


அது தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட குழு தலைவர் திரு. திலிப் அவர்கள் கையில் மணிகட்டில் ஒரு தழும்பு உள்ளது என்னும் விஷயம். அதிர்ச்சியில் உறைந்தே போனது ஒட்டுமொத்த சி.பி.ஐ யும். எதற்காக அவர் அப்படி செய்தார். அப்பொழுதுதான் ஒரு விஷயம் ராஜேஷின் கண்ணுக்கு தெரிந்தது. தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட திலீபின் உடல் முற்றிலும் எரிந்து விட்டதால் அதை யாரும் சோதனை செய்யமுடியவில்லை. அங்கே இருந்த ஒரு கடிதத்தில் விண்கலம் வெடித்து விட்டதால் தன்னால் வருத்தம் தாங்க முடியவில்லை என்றும் அதனால் தான் தற்கொலை செய்து கொல்வதாகவும் எழுதியிருந்ததைக்கண்டு தான்  அது திரு திலீப் என்று அனைவரும் முடிவு செய்தார்கள்.

உடனே விரைந்து செயல் பட்ட ராஜேஷ், விண்கலம் வெடித்த அந்த கால கட்டத்தில் அதாவது திலீப் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு போன அனைவரையும் விமானதளத்தில் வைக்கப்பட்டிருந்த காமிராவில் பதிவான வீடியோவில் சோதனை செய்தார். அப்பொழுது அதில் திரு திலீப்பின் உருவம் தெரியவர அவர் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

மேலும் விசாரனையில் அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளது தெரியவர அங்குள்ள காவலர்கள் உதவியுடன் திலீப்பை கைது செய்தார்கள். இந்த செயலை செய்ய அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. தான் இறந்து விட்டது போல ஒரு மாயையை உருவாக்கி ஆஸ்திரேலியாவில் வந்து தங்கி சந்தோஷமாக இருக்க நினைத்தார். இது போல விசாரனை வராமல் இருக்க திலிப்பே கணித வல்லுநர் திரு சாமியின் பெயரில் பல கோடி மதிப்புள்ள சொத்தை அமரிக்காவில் வாங்கியுள்ளார். உண்மை குற்றவாளி பிடிபட்டவுடன் சிறையில் இருந்து கணித வல்லுநர் திரு சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.

சிறப்பாக செயல் பட்ட சி.பி.ஐ அதிகாரி திரு. ராஜேஷ் அவர்கள் இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டார். மேலும் திரு சாமி அவர்களிடம் இந்திய அரசும், ஓய்வு பெற்ற நீதிபதியும் தண்டனை தந்தவருமான திரு ராதாராமன் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தனர்.

இத்துடன் இந்த கதை முடிந்தது.
        *********************************************************************************************

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

முந்தைய பதிவு
55 தொகுதி கொடுத்தாலும் வேண்டாம்...
படிச்சிட்டு சும்மா போன எப்படி....அப்படியே உங்க ஓட்ட போட்டுட்டு போங்க....கருத்தும் சொல்லுங்க.....Saturday, March 19, 2011

55 தொகுதி கொடுத்தாலும் வேண்டாம்

இன்னைக்கி நகைச்சுவையா எதாவது சொல்லலாமுனு பார்த்தேன். அத விட நீங்க வீடியோவா பார்த்த நல்லா இருக்கும்னு தான் சில வீடியோக்களை சேர்த்திருக்கிறேன்.

தாங்க முடியலடா சாமிஅப்படியே இவரையும் பாருங்க.....அப்புறம் அந்த தலைப்பு பத்தி சொல்லவே இல்லையேனு நீங்க நினைக்கலாம்.

அட அது நம்ம கார்த்திக் சாரு(!!!) கொடுத்த பேட்டியில அ.தி.மு.க 55 தொகுதி கொடுத்தாலும் அவர்களோட நாங்க கூட்டணி வச்சிக்க மாட்டோம் அப்பிடினு சொல்லியிருக்கிறார். (கூடவே கோ.பா.சே வா இருந்த வைகோவிற்கே ஒண்ணும் தரல. இவருக்க 55...அவருக்கு மனசாட்சியே இல்லாம எப்படிதான் பேசிராரோ???......)

வைகோ அவர்களின் கதி???

தினமலர்


                                                                அன்புடன்
                                                  பாரி தாண்டவமூர்த்தி


படிச்சிட்டு அப்படியே போகாம, உங்க கருத்தையும் சொல்லிட்டு 
போங்க.....அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க......


Monday, March 14, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 4


இதன் முதல் பாகம் படிக்க இங்கேவும், இரண்டாம் பாகம் படிக்க இங்கேவும் மூன்றாம் பாகம் படிக்க இங்கேவும் அழுத்தவும்

அந்த குழுவில் மொத்தம் எட்டு பேரில் நான்கு பேர் இடது கை பழக்கம் உடையவர்கள். அவர்களில் ஒருவர் அந்த குழுவில் தலைவர். அவர் விண்கலம் வெடித்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆக மீதி உள்ள மூன்று பேருடன் விசாரனையை துவங்குகிறார் சி.பி.ஐ. அதிகாரி ராஜெஷ்.

அதில் முதலில் இயற்பியல் வல்லுனர் திரு. டிசௌசா அவர்கள். அவர் குறிபிட்ட அந்த காலகட்டத்தில் தன்னுடைய வேலை முடிந்துவிட்டதால் தன்னுடைய மகனின் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றுவிட்டார் என்பது விசாரனையில் தெரியவருகிரது. அதனால் அவர் அந்த சந்தேக பட்டியலில் இருந்து விலக்கப்பட்டார்.

அடுத்து வானவியல் வல்லுநர் திரு. அருண் அவர்கள். அவர் அறிவாளி. ஆனால் அப்பாவி. இன்னமும் வாடகை வீட்டில் உள்ளார். இந்த விண்கல முயற்சி வெற்றி அடைந்தால் இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் இவரைப்பற்றி விசாரித்ததில் இவர் யாருக்கு எந்த வகையிலும் தொந்தரவு செய்யாத மனிதர் என்று தெரியவருகிறது. மேலும் இவர் அந்த காலகட்டத்தில் வலது கரத்தில் ஒரு விபத்தில் அடிபட்டு ஒரு கட்டுடன் இருந்துள்ளார். ஆனால் அந்த வீடியோவில் வந்த அப்படி எந்த கட்டும் இல்லாததால் இவரும் இல்லை என்றூ ஆகிவிட்டது.

அடுத்து மிச்சம் உள்ள ஒருவர் பொறியியல் வல்லுநரான திரு இம்ரான் அவர்கள். இவர் தன் கண்டுபிடிப்புகளை நாட்டுக்காக அர்பணித்தவர். தனக்கு என்று எதுவும் வைத்துக்கள்ளாமல் தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு கொடுத்தவர். திருமணமாகாதவர். இவர் ஆள் கொஞ்சம் குட்டை. ஆனால் அந்த வீடியோ பதிவில் உள்ளவர் நல்ல உயரமான ஆசாமி. அதனால் இவரும் இல்லை என்று ஆகிவிட்டது.

ஆக அந்த மூன்று பேரும் இல்லை என்று ஆகிவிட்டது. அந்த கோப்புகளை வைத்திருந்த இடத்திற்கு அந்த அவர்களைத்தவிர உள்ளே நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. அகையால் சி.பி.ஐ. யே குழம்பிவிட்டது. அப்பொழுது தான் ராஜெஷ் ஒரு விஷயத்தை கவனித்தார். அந்த வீடியோவில் உள்ள நபருக்கு வலது கை மணிகட்டில் ஒரு தழும்பு இருந்ததை. மிகவும் சிறியதாக இருந்ததால் அதை யாரும் இத்தனை நாள் கவனிக்கவில்லை.

     மேலும் விசாரித்த பொழுது ராஜெஷுக்கு தெரியவந்த ஒரு விஷயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
                                  தொடரும்


   
                               அன்புடன்


                          பாரி தாண்டவமூர்த்திSaturday, March 12, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 3


முதல் பாகம் படிக்க இங்கேவும் இரண்டாம் பாகம் படிக்க இங்கேவும் அழுத்தவும்.

அவருக்கு அளிக்கப்பட்ட அந்த தண்டனையால் அவருடைய குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. அதற்கு முன் அவர்கள் அந்த கணித மேதை நிச்சயம் தவறு செய்திருக்கமாட்டர் என்று எழுதிவைத்துவிட்டு அவர்கள் மடிந்துவிடுகிறார்கள்.

அடுத்தடுத்து வந்த அதிர்ச்சியில் அந்த கணித வல்லிநரும் உடைந்து போய்விடுகிறார். சிறைச்சாலையில் உள்ள அவர் காண அவரின் நெருங்கிய நண்பரும் சி.பி.ஐ அதிகாரியுமான டிடெக்டிவ் ராஜேஷ் வருகிறார். அவரிடம் கணித வல்லிநர் அந்த தவறை தான் செய்யவில்லை என்று அழுகிறார். ராஜேஷும் பல நாளாக இவரை அறிந்திருப்பதால் இவர் இதை செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறார்.

அதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முரையீடு செய்கிறார். மேலும் இந்த விசாரனையை செய்ய சி.பி.ஐ க்கு உத்தரவிடும்படி வேண்டுகோண்டிடுக்கிறார். அவரது வேண்டுகோலை ஏற்று சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடுகிறது உச்சநீதிமன்றம்.

சி.பி.ஐ யும் இந்த விசாரனைக்கு ராஜேஷை தலைமை தாங்கி நடத்தவிடுகிறது. அதற்கு அவர்கள் வைத்த பெயர் ”OPERATIONS ஆரியபட்டா”. முதல் கட்ட விசாரனையில் தவறு என்று சொல்லப்பட்ட கணக்கீடுதல் (calculation) பகுதியை சோதனை செய்தபோது அதில் சில இடங்களில் சில எண்கள் பின்னாளில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனாலும் வேறு எதுவும் சரியாக இல்லை என்பதால் அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அந்த கணித வல்லுநரே பின்னாளில் அதை செய்திருக்கலாம் என்று ஒரு வாதம் வருகிறது. எழுத்துக்களை ஆராய்ச்சி செய்யும் நிபுனரின் உதவியுடன் அதை எந்த நாளில் எழுதியிருக்கலாம் என்று ஒரு தோராயமான ஒரு கால கட்டம் கண்டுபிடிக்கப்படுகிறது.

அடுத்த கட்ட விசாரனைக்கு அந்த கால கட்டத்தில் விண்கலம் தயார் செய்ய வரைப்படத்தை வரைந்து முடித்து பத்திரமாக வைத்திருந்த இடத்தில் உள்ள காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சி.பி.ஐ.க்கு கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட காலத்தில் அங்கு ஒரு உருவம் வந்து வரைபடத்தில் எதையோ எழுதுவது தெரிகிறது. அந்த முகம் மூடியிருப்பதால் அது யார் என்று தெரியவில்லை. ஆனால் அது நிச்சயம் அந்த கணித மேதையில்லை என்று உறுதியாகிறது, ஏனெனில் அந்த உருவம் எழுத இடது கையை உபயோகப்படுத்துகிறது ஆனால், அந்த கணித மேதை வலது கை பழக்கம் உடையவர். அப்பொழுது விசாரனை சூடிபிடிக்கிறது.

                                       தொடரும்...
                                       அன்புடன்
                                 பாரி தாண்டவமூர்த்தி

பிடித்திருந்தால் ஓட்டு போடவும். அப்படியே உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கள்.....

Wednesday, March 9, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 2


முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும்
சென்ற பாக தொடர்ச்சி.....
விண்கலம் வெடித்து சிதறியது. ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்தது. பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன பயன் முடிந்தது முடிந்து விட்டது. அதை மாற்றமுடியாது. அந்த விண்கலத்தை தயார் செய்த குழுவின் தலைவர் அதிர்ச்சியில் எண்ணை ஊற்றி தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். இது மேலும் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது. உலக நாடுகள் வாயலவில் வருத்தம் தெரிவித்துவிட்டு தங்களுக்குள் கொண்டாடினார்கள்.
   

இந்திய அரசு இதைப்பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி திரு ராதாராமன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 20 ஆயிரம் கோடி ரூபாய், 12 வீரர்கள், ஒரு விஞ்ஞானி ஆக இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. விசாரனையை விரைவில் முடிக்க இந்திய அரசு அந்த குழுவை வற்புறுத்தியது. அவர்களும் விசாரனையை வேகப்படுத்தினார்கள்.

அப்பொழுது விசாரனையில் அவர்கள் விண்கலம் செய்ததில் தவறு நடந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள். மேலும் விசாரனையில் அவர்கள் செய்தபொழுது விண்வெளியில் இருந்து அந்த வீரர்கள் சாகும் முன் இந்தியாவில் இருந்த குழுவுடன் பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் விண்கலத்தில் திடீரென சத்தம் வரத்துவங்கியதாக கூறியது பதிவாகி இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது.

அவர்கள் சொன்னதை விசாரிக்க ஆரம்பித்ததில் அதில் உள்ள சில பகுதிகளை(PARTS) தயார் செய்ததில் தவறு இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. மேலும் இதில் வெளிநாட்டு சதி இருக்குமோ என்னும் சந்தேகமும் வந்தது அந்த குழுவிற்கு.

விசாரனையில் விண்கலத்தை தயார் செய்ய கொடுத்த அந்த விண்விளியின் வரை படத்தை சோதனை செய்தார்கள். அப்பொழுது அதில் சில இடங்களில் கணக்கீடுதல் (calculation) தவறுதலாக நடந்துள்ளது கண்டுபிடிக்கப்படுகிறது. அதைப்பற்றி அந்த உருவாக்கும் குழுவில் இருந்த கணித வல்லுனருடன் விசாரைனை மேற்கொள்ளப்படுகிறது. அவர் தான் அந்த தவறு செய்யவில்லை எனறு கூறுகிறார்.

விசாரனையில் அவருடைய பெயரில் அமரிக்காவில் 100கோடி மதிப்புள்ள ஒரு சொத்து சமீபத்தில் அவருடைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது தெரியவருகிறது. அதைக்கேட்டு அந்த கணித வல்லுநர் அதிர்ச்சியாகிறார். அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். மேலும் சில ஆவனங்கள் அவருக்கு எதிராக இருக்க அவர் தான் தவறு செய்தார் என்று குற்றம் சாட்டி அவருக்கு தேச துரோகத்திற்காக தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது

ஆனால் தான் அந்த குற்றம் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார். தனக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் அதிர்ச்சியாயிருந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது.


                                              தொடரும்

                                  அன்புடன் 

                             பாரி தாண்டவமூர்த்தி


பிடித்திருந்தால் ஓட்டு போடவும். அப்படியே உங்க கருத்தையும் சொல்லிவிட்டு போங்க......

Sunday, March 6, 2011

பெயர் சரித்திரம்


போன் வாரம் என்னையும் மதிச்சி தொடர்பதிவு எழுத நம்ம தம்பி கூர்மதியன்(பேரில் மட்டுமே தம்பி. உண்மையில் நானே சின்ன பையன், அவரு பெரிய பையன்)

அதாவது எதுக்காக எனக்கு இந்த பேர வச்சாங்க அப்படினு கேட்டிருந்தார். அதாங்க என் பேரோட தரித்திரம் சரி சரித்திரம்.

என்னோட பெற்றோர் தமிழ் ஆசிரியர்கள். அதானலேயே எங்கள் வீட்டில் எல்லோர் பெயரும் தமிழிலேயே இருக்கும்.

நான் பிறந்தவுடன் ஜாதகப்படி எனக்கு ”ப” வில் ஆரம்பமாகும் பெயர் வைக்கவேண்டும் என்பதால் பல பெயர்கள் யோசிக்கப்பட்டது. பின்னர் பாரி என்று வைக்கப்பட்டுவிட்டது

ஆரம்பத்துல எனக்கு என் பெரு பிடிக்கவே இல்லங்க. காரணம். எங்க வீட்டுல எல்லோருக்கும் பெரிய பெரிய பேரு. எனக்கு மட்டும் பாரினு சின்னதா வச்சுட்டங்களேனு கோபம் வருத்தம் எல்லாம். வீட்டுல கூட இத அடிக்கடி கேட்டிருக்கேன். அவங்க எல்லோருக்கும் பெரிய பேரு இருக்கேனு எனக்கு சின்ன பேரு இருக்கட்டும்னு இத வச்சதா சொல்லுவாங்க

சரி அது போகட்டும்னு அப்பிடியே வருசம் கடந்து பொறியியல் மூனாவது வருசம் வந்த பிறகு என்னோட அப்பா பேரான தாண்டவமூர்த்தி ய என் பேருக்கு பின்னால initial இல்லாம பேராவே சேத்துக்கிட்டேன்.

அப்புறம் எனக்கு என் பேரு ரொம்ப பிடிச்சிடிச்சி. சரி அப்படியே நானும் என் பேர தமிழில் எழுதும்போது பாரி தாண்டவமூர்த்தினும், இங்லீஷ்ல எழுதுனா Pari T Moorthy னும் எழுத ஆரம்பிச்சுட்டேன். இதுதாங்க என் பாருக்கு சாரி பேருக்கு பின்னால இருக்குற சரித்திரம்(!!!)…..

சரி இது ஒரு தொடர் பதிவு. அதனால இத தொடர நம்ம Sakthisatudycenter-கருன் அவர்களையும், தமிழ்வாசி பிரகாஷ் அவர்களையும் கூப்பிடுறேன்.

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி