Friday, December 31, 2010

புலம்பல்

நாளை புத்தாண்டு என்பதால் இன்றே புலம்பிவிடலாம் என்று நினைத்தேன். அநேகமாக நெறைய பேர் இது போல புலம்பியிருப்பிர்கள்.......அதான் இந்த பதிவு........

மொதல்ல தேர்தல பத்தி பாப்போம். இன்னும் அஞ்சு மாசத்துல வர போது. வழக்கம் போல எல்லா தலைவர்களும் நான் இதை செய்றேன் எனக்கு வோட்டு போடுங்க நான் அதை செய்றேன் எனக்கு வோட்டு போடுங்க நு சொல்லுவாங்க. நாமளும் அதை நம்பி வோட்டு போட்டுகிட்டு தான் வரோம் ஆனாலும் எதுவும் நடக்கறது இல்ல. சரி இந்த கட்சி தான் ஒன்னும் செய்யலன்னு இன்னொரு கட்சிக்கு வோட்டு போட்ட அவிங்களும் ஒன்னும் செய்றது இல்ல. கேட்ட போன ஆட்சி எல்லாத்தையும் காலி பணிடாங்க. நாங்க இனிமே தான் எல்லாம் உருவாக்கி உங்களுக்கு செய்யணும் நு சொல்றாங்க. ஆனா எல்லோரும் ஒன்னு மட்டும் ஒழுங்க செய்றாங்க அதாங்க  ஊழல் சொன்னேன். அதுக்கு மட்டும் எப்படி காசு எங்கிருந்து வருதுன்னு தான் தெரியமாட்டேன்குது. எப்படித்தான் செயரான்கனே தெரிய மாட்டேங்குது. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம செய்றானுங்க. முன்பெல்லாம் லட்சத்துல பண்ணவங்க பின்னாடி கோடியில பண்ண ஆரம்பிச்சானுங்க அப்புறம் ஆயிரம் ரெண்டாயிரம் கோடின்னு செய்தானுங்க இப்ப லட்சம் கோடின்னு போய்டாங்க . ஆனா நாம மட்டும் இனாமும் பிச்ச தான் எடுக்குறோம். இந்த கட்சி வந்த அந்த கட்சியா திட்றாங்க அவிங்க வந்த இவிங்கள திட்றாங்க. அவங்களுக்கு நடுவுல வோட்டையும் போட்டு நாமதான் ஏமாந்து கிடகுறோம்

அடுத்து இந்த விலைவாசி உயர்வு. இத பத்தி சொல்லவே தேவை இல்ல. தினமும் வெல வாசி ஏறுது கால் கிலோ அர கிலோ வாங்கிகிட்டு இருந்த மக்கள்  இப்ப நுறு கிராம் அம்பது கிராமுனு வாங்குறாங்க. பாக்கவே கொடுமையா இருக்கு. போற போக்குல பாத்தா மக்கள் ஒரு காய் ரெண்டு காய்னு வாங்க வேண்டியதுதான். கொடுமையிலும் கொடுமை. கடவுளே இந்த அரசியல்வாதிங்க தான் காப்பாத்த மாட்டேன்குறாங்க நீங்களாவது எங்க மக்களை காப்பாத்தனும்.

 அடுத்து லஞ்சம்.. ஏற்கனவே சொன்ன ஊழல் போல தான் இதுவும்.நம்ம நாட்டையே அழிசிட்டு இருக்கு எல்லாத்திலேயும் லஞ்சம். என்ன பண்றதுனே தெரியல வெவஸ்தேயே இல்லாம எல்லோரும் வாங்குறாங்க. அஞ்சாயிரம் சம்பளம் வாங்குரவங்களிருந்து  அஞ்சு லட்சம் வாங்குறவன் வரைக்கும் எல்லோரும் வெட்கமே இல்லாம வாங்குறாங்க. என்னத்த பண்றது. என்ன பன்னாலும் இது மட்டும் நம்மள விடு போக மாட்டேங்குது. நமக்கு சாபக்கேடு மாதிரி நம்மகுடையே சுத்துது.
 
கடவுளே இந்த மக்களை நீங்கதான் காப்பாத்தணும். வர போற புது வருசமாவது எல்லாம் மாறி மக்களுக்கு ஒரு நல்லவருடமா இற்கு நீங்க தான் ஒரு வழி செய்யணும் 
வருஷ வருஷம் தவறாம நாம புலம்பரதுதான் ஆனா ஒண்ணுமே நடக்காதுகிறது வேற விஷயம் இருந்தாலும் நம்ம கடமை. நாம கடமையிலிருந்து தவறியதா சரித்திரமே கிடையாது.. தெரியுமில்ல...

Thursday, December 30, 2010

இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள்

ராஜாவின் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்


 பாபர் மசூதி வழக்கிற்கு திர்ப்பு வழங்கியது

சச்சின் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவித்தது மற்றும் டெஸ்ட் போட்டியில் ஐம்பதாவது சதம் அடித்தது

நித்யானந்தா கைது

காமன் வெல்த் போட்டி மற்றும் ஆசியப்போட்டியில் இந்திய அதிக பதக்கங்களை பெற்றது

ஆந்திரா முதல்வர் Y.S.R. விமான விபத்தில் இறந்தார்.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி டி-3 ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வங்கக்கடலில் விழுந்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் ருபாய் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். பின்பு இவர் நிடுகாலில் நடந்த சோதனையில் ருபாய் 1,800 கோடி மற்றும் 1,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது


மும்பை தாக்குதல் தீவிரவாதி அமீர் கசாப்புக்கு துக்கு தண்டனை விதித்தது.


ஹாக்கி  உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா சாம்பியன். கிரிக்கெட் T20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து சாம்பியன். சதுரங்கப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன் ஆனது. புட்பால் உலகக்கோப்பையில் ஸ்பெயின் சாம்பியன்

கோவையில் செம்மொழி மாநாடு  நடந்தது

இருபது ஆயிரம் பேர் பலிகொண்ட போபால் விஷவாயு கசிவு வழக்கில் திர்ப்பு.


பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆசிய கிரிக்கெட் கோப்பையை வென்றது.


சூரியனை விட 320 மடங்கு பெரிய புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று நிதிபதி கோவிந்தராஜன் குழு அறிவிப்பு.

ருபாய் ஆயிரம் கோடி ரேஷன் மோசடி செய்த அருணாச்சல பிரதேஷ முன்னால் முதல்வர் கெகாங் அபாங் கைது

உலக குத்துச்சண்டை போட்டியில் ஐந்தாவது முறையாக வென்று இந்தியா விராங்கானை மேரி கோம் சாதனை.


வரும் 2016 இல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா திட்டம். அதற்கு மத்தியரசு அனுமதி.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒருநாள் தொடர் வெற்றி.

லலித் லோடி பி எல் லில் பலகோடி மோசடி செய்ததாக பிசிசிஐ குற்றச்சாட்டு

காமன் வெல்த் போட்டி தலைவர் கல்மாடி ஊழல் செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு

மியான்மர் போராளி ஆங் சாங் சூகி வீ ட்டுச்சிறையில் இருந்து விடுதலை.

விக்கிலீக்ஸ் பல தகவல்களை வெளியிட்டது.

Tuesday, December 28, 2010

ரயிலில் ஒரு ஆங்கில அலப்பறை

மீண்டும் ஒரு ரயில் பதிவு. முன்பு பல முறை ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒன்றும் தோன்றியது இல்லை. ஆனால் பதிவுலகில் என் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது முதல் எனக்கு பல எண்ணங்கள் தோன்றுகிறது.
ஆரம்பிக்கும் முன் எனக்கொரு சந்தேகம். ஆங்கிலத்தில் பேசுவதால் நம் அந்தஸ்தோ அல்லது மதிப்போ உயருமா? இல்லை மற்றவர்கள் நம்மை உயர்வாக மதிப்பார்களா? அப்படியெனில் நாம் என் வெள்ளையனை விரட்டினோம்? நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என்று சொல்லவில்லை ஆனால் தேவை இல்லாத இடத்தில அது தேவையா? இப்பொழுதே இந்த பதிவை பற்றி தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு எனக்கு இது இரண்டாவது ரயில் பயணம். இந்த முறை தட்கல்(tatkal) முறையில் டிக்கெட்டை ரிசெர்வ் செய்த நான் ரயில் வண்டி வந்தவுடன் ஏறி அமர்ந்துவிட்டேன். என்னுடன் அதே பெட்டியில் மற்றொரு குடும்பமும் பயணம் செய்துகொண்டிருந்தது. அதில் ஒரு அம்மா இரண்டு மகன்கள் அவர்களில் பாட்டி இருந்தனர்.
ஆரம்பம் முதல் அவர்கள் தமிங்கலத்தில் (அதாங்க தமிழ் + ஆங்கிலம்) பேசிக்கொண்டிருந்தார்கள்எதுக்கு எடுத்தாலும் அந்த பெண்மணி தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார். நான் மட்டும் அல்ல அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் அவர்களை ஒருமாரியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனால் அவர்கள் அதை பற்றி கவலை கொள்ளவில்லைஅந்த நேரம் ரயிலில் சில தின்பண்டங்களை (வடை, பழம்பூரி போன்றவை) விற்றுக்கொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த பெண்மணி எதோ தீண்டதகாததை பார்ப்பது போல சீன்போடுக்கொண்டிருந்தார். மேலும் அவரின் மகன்களிடமும் அதை பற்றி கேவலமாக பேசிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல என்னால் அந்த அளப்பரையை தாங்க முடியவில்லை. ஒருவர் ஒபெனாகவே அவர்களை கிண்டல் செய்தார். அவரை பார்த்து முறைத்து விட்டு மீண்டும் தங்கள் வேலையை (அட தமிங்கலத்தில் பேசுறதை தான் சொன்னேன்) தொடர்ந்தார்கள். இதற்கு நடுவில் யாருக்கோ போன் செய்து can you hear me ? நான் பேசுறது கேக்குதா? என்று மேஜர் சுந்தர்ராஜன் போல எல்லாவற்றையும் தமிழில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஒரு முறை பேசினார். உச்ச கட்டமாக ஒன்று நடந்தது. அவரின் மகன் வடையை கேட்டான் அதற்கு அந்த பெண்மணி வடை சாப்பிட்டால் தலைவலிக்கும்(இதுவும் ஆங்கிலத்தில் தான்) என்று சொன்னார்கள். அதை கேட்டவுடன் நான் மட்டும் அல்ல அங்கு உடன் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டர்கள். அதை பார்த்த பிறகு தான் அந்த பெண்மணி அமைதியானார். தன மகன்களை அவர்களுடைய பெர்த்தில் படுக்க வைத்து விட்டு தானும் உறங்கப்போனார். சரி உறங்குவார் என்று எதிர் பார்த்த நான் அவர் ஒரு ஆங்கில புத்தகத்தை எடுத்துவிட்டார். லைட் ஆப் செய்து தூங்கலாம் என்று இருந்த நான் நொந்தே போனேன். அவர் படிக்கவும் இல்லை. வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு பிறகு அதை முடிவைத்தார். இப்படி வெளியே செல்லும் பொது தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவது தேவையா? அதுவும் ஒழுங்காக இல்லாமல் அரை குறையாக பேசுவது தேவையில்லாதது. இது போல சீன் போட்டுக்கொண்டு திரிபவர்கள் திருந்துவார்களா?... 
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி