Tuesday, December 14, 2010

என்னை அழவைத்த கருவாச்சி காவியம்

வர்த்தக நிர்வாகம் படிக்கும் மாணவன் நான். பல நேரங்களில் தனிமையில் இருப்பவன். பொறியியல் படிக்கும் பொது பிடிக்காத பல விசையங்கள் எனக்கு இப்பொழுது பிடிகிறது. அதில் ஓன்று புத்தகங்கள் படிப்பது. சிறிது சிறிதாக இந்த பழக்கத்தை வரவைத்து கொண்டேன்.

அப்படி ஒருநாள் சில புத்தகங்களை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் பொது ஒரு வலைப்பூவில் வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கருவாச்சி காவியத்தை பார்த்தேன். அவர் மேல் உள்ள மதிப்பால் அதை உடனே பதிவிறக்கம் செய்தேன்.

சரி படிக்கலாம் என்று ஆரம்பித்த நான் அன்று இரவு தூக்கத்தையும் மறந்து அதை படித்து கொண்டிருந்தேன். ஐயாவின் அருமையான படைப்பு. ஒவ்வொரு அத்யயமும் அருமை. நான் படித்த சில புத்தகங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது  இதுதான். திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ  அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை  மாற்றிவிட்டது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த  கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

துவக்கதிலேயே கருவாச்சியும்  ஆவரின் கணவனும் பிரிப்பதற்காக பஞ்சாயத்து குடுகிறது. அது முதல் பல தொல்லைகளை கருவாச்சி அனுபவிக்கிறாள். அவளின் கணவன் அவளுக்கு கொடுக்கும் தொல்லைகளை பார்த்தால் நமக்கே அவனை வெட்டவேண்டும் போல் தோன்றுகிறது. அதை சோகங்களையும் தாண்டி வாழும் அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மறுமணம் செய்து கொள்கிறான் காருவாச்சியின் கணவன். வந்தவள் மனதில் கொடுரமான எண்ணம் உள்ளவள். கணவனை மட்டும் அல்லாமல் நாடகமாடி ஊரில் உள்ள எல்லோரும் அவளை நல்லவள் என்று நம்ப வைத்துவிடுகிறாள் . கருவச்சியின் மகனையும் தன் வசப்படிதிக்கொள்கிறாள் . அவனை கருவாச்சியிடமிருந்தே பிரித்துவிடுகிறாள்.

இதனை சோகங்களையும் கடந்து கருவாச்சி வாழ்கையை நடத்துகிறாள். காலம் செல்ல செல்ல கருவச்சியின் கணவனுக்கு வந்தவளை பற்றிய உண்மைகள் தெரியவர கருவச்சியின் பெருமையை அவன் உணர்கிறான்.அத்துடன் கதை அல்ல காவியம் முடிகிறது.

அருமையாக எழுதியிருகிறார் ஐயா அவர்கள். அவரை வாழ்த்த தகுதி இல்லாததால் வணக்குகிறேன். என்னவொரு வார்த்தை நடை. அய்யாவிற்கு நிகர் அய்யாதான்.நாமும் இந்த காவியத்தில் வாழ்வதை  போல் உணர்வை ஏற்படுத்தும் வார்த்தைகள். அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார்


கருவாச்சி கற்றுக்கொடுத்த சில:

௧. எத்தனை தடைகள் வந்தாலும் சோர்ந்துவிடக்கூடாது
௨. தன்னம்பிக்கை தான் வாழ்கையில் முக்கியம்
௩. நமக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கும் நாம் நல்லதே செய்தால் நிச்சயம் ஆவர்களும் மாறுவார்கள்



படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வாள் இந்த கருவாச்சி.

4 comments:

  1. சில அத்தியாயங்கள் மட்டும் படித்திருக்கிறேன்... முழுமையாக படித்ததில்லை...

    ReplyDelete
  2. வைரமுத்து அவர்களின் எழுத்துக்கு தீவிர வாசகன் நான். கருவாச்சி காவியம் அவரின் காலத்தை வென்ற படைப்பு என்பது என் தாழ்மையான அபிப்ராயம். அந்த கதையில் கவுசாச்சி தனக்கு தானே பிரசவம் பார்க்கும் அத்தியாயத்தை படித்துவிட்டு அன்றிரவு தூக்கம் தொலைத்தவன் நான்.

    ReplyDelete
  3. @ prabhakar... படிக்கவேண்டிய ஒரு புத்தகம்......

    @ரஹீம் கஸாலி.... தங்கள் கருத்துக்கு நன்றி....ஐயாவின் எழுத்துக்கள் எப்பொழுதும் அருமை தான்....

    ReplyDelete
  4. இது கருவாச்சி காவியத்தின் லிங்க்... இதிலிருந்து அதை பதிவிறக்கம் செய்யலாம்...

    http://www.mediafire.com/?z2zwzwjdmgc

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி