Saturday, July 30, 2011

ரயிலில் ஒரு திகில் அனுபவம்




இது சில நாட்களுக்கு முன்பு எனக்கு நடந்த ஒரு அனுபவம். அன்று நான் எர்னாகுலத்தில் இருந்து காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தேன். ஆலப்புழா எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தேன். மாலை 5.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து ரயில் வண்டி கிளம்பியது. நான் ஏறியதில் இருந்து இரண்டாவது நிறுத்தத்தில் இருந்து ஒரு நபர் வண்டியில் ஏறினார். பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தார்(உண்மையாகவும் இருக்கலாம்.) சிறிது நேரம் கழிந்த பிறகு அவருக்கு சில தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அவரும் தான் பேசுவது யாருக்கு கேட்கக்கு கூடாது என்பதைப்போல மிகவும் மெதுவாக பேசிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல அவர் ஒரு விதமாக நடந்து கொண்டார். கைகடிகாரத்தை பார்ப்பதும் தான் கொண்டுவந்த பையை பார்ப்பதுமாக இருந்தார். பிறகு என்னையும் ஒரு மாதிரி பார்த்தார். திடீரென ஒரு நிறுத்தத்த்ல் அவர் மேல உள்ள பெர்த்தில் இருந்து இறங்கி எங்கோ சென்றுவிட்டார். வண்டி கிளம்பியும் அவர் வரவில்லை. அன்று தான் நான் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் முன்னர் ஏதோ ஒரு இடத்தில் ரயிலில் குண்டு வெடித்ததாக செய்தி படித்திருந்தேன். ரயில் கிளம்பியும் அவர் வராததால் எனக்கு மிகவும் பயம் வந்துவிட்டது.

அப்பொழுது மணி இரவு 7.50. நான் ஒருவேலை சரியாக 8.00 மணிக்கு வெடிப்பது போல வைத்திருப்போரோ என்று எண்ணி மிகவும் பயந்து கொண்டிருந்தான். மணி எட்டை கடந்தது. ஒருவேளை ஒன்பது மணிக்கு வெடிப்பது போல வைத்திருப்ப்பாரோ என்று எனக்குள் ஒரு பயம். எனக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்துவிட்டது. ரயிலில் உள்ள காவலரிடம் இதை பற்றி கூறலாமா என்று கூட யோசித்தேன். மணி ஒன்பதை தாண்டியது. பயம் மேலும் அதிகரித்து விட்டது. அந்த மனிதரும் வரவில்லை. ஒருவேளை பத்து மணிக்கு மேல் வெடிக்குமோ என்று எனக்கு ஒரு எண்ணம். ஏனெனில் அதன் பிறகு ரயில் தமிழகத்திற்குள் வண்டி வந்து கொண்டிருந்தது. எனக்கு மரண பயம். அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு காவலர் வந்தார். அவரிடம் சொல்லலாம் என்று நினைப்பதற்குள் வண்டி ஒரு நிறுத்தத்தில் நின்றது. அவரும் இறங்கிவிட எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இறுதியாக நானே சென்று ஏதாவது ஒரு காவலரை கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து என் மேல் பெர்த்தில் இருந்து கீழே இறங்கியதும் வண்டி கிளம்பிவிட்டது. அந்த நேரம் அந்த பைக்கு சொந்தக்காரரான அந்த மர்ம நபர் நான் இருந்த பெட்டியில் ஏறி தன் பெர்த்தில் படுத்துக்கொண்டார். பின்புதான் என் மனம் நிம்மதி அடைந்தது. அதன் பிறகு நான் தூங்கவே இல்லை.  இந்த திகில் பயணத்தை என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாது.    

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி