Monday, January 31, 2011

பதிவுலகின் எழுச்சி-நம்மால் முடியும்


என் கடந்தப்பதிவில் (தமிழன்ஒரு புரியாத புதிர்திரு. இக்பால் செல்வன் அவர்கள் கருத்துரையில் ஒன்று சொல்லியிருந்தார்.


இக்கூட்டத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைக்க வேண்டும் !!! புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் ! ஊழல் செய்தவனை கோவணத்தோடு நாட்டை விட்டு விரட்ட வேண்டும் !!!துனிசியா எகிப்தில் நடுவர்க்க மக்கள் புரட்சி அரசியல் சாராதது,உண்மையானது, எந்த மதம் மொழி இனம் சாராதது, அப்படியான ஒருக் கூட்டம் தமிழகத்தில் சேருமா??? அதற்கு வலைப்பதிவர் எழுத்தில் பேச்சிலும் சொல்லிலும் செயலிலும் என்னச் செய்யப் போகின்றோம் >>>

பேனாவின் முனை வாளைவிடக்கூர்மையானது என்று சொல்வார்கள். எழுதி சாதித்தவர்கள் பலர் உண்டு.

பலரின் அரசியல் வெற்றிக்கு பேனாவே காரணமாக இருந்திருக்கிறது. இப்பொழுது அந்த பேனாவின் புதுவடிவம் தான் நம் வலைப்பூ. நாளுக்கு நாள் இதில் சேருபவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது. மேலும் பலர் வலைப்பூக்களை பின்தொடர்கிறார்கள். தவறாமல் படிக்கிறார்கள். பதிவர்களின் கருத்து அவர்களுக்கு ஒரு மாற்றத்தை தந்திருக்கிறது. குறிப்பாக மீனவர்களுக்காக நம்மவர்கள் போராட்டம் ஒரு மிகப்பெரிய அலையை எழுப்பியுள்ளது. இது நின்றுவிடக்கூடாது. தொடரவேண்டும்.

எந்த ஒருவரின் வெற்றியையும் தீர்மானிக்கும் சக்தியாக வலைப்பூக்கள் உள்ளது. ஒரு படத்தின் வெற்றி கூட வலைப்பூவால் திர்மானிக்கமுடியும். அதே போல் தேர்தலிலும் சாதிக்கமுடியும். அரசியல்வாதிகளின் போலி முகமூடிகளை நாம் கழற்றி எறிவோம். சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க நினைப்பவர்களை மக்களிடமிருந்து ஒதுக்கவேண்டும். அவர்களை ஒடுக்கவேண்டும். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரியவைக்கவேண்டும். அப்படி நடந்தால் திரு. இக்பால் செல்வன் சொன்னது போல ஒரு மாற்றத்தை நம்மால் உருவாக்கமுடியும்.

கருத்து பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்.

தமிழன் – ஒரு புரியாத புதிர்


இலங்கையில் எம் மக்கள் அடிபட்டு, உதைபட்டு சாகிறார்கள். அவர்களைக்காக்க டெல்லிக்கு செல்லாமல் இங்கிருந்து நெஞ்சம் பொறுக்கவில்லை, கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது என்று நீலிக்கண்ணீருடன்  கடிதம் போடுகிறார் ஒரு தமிழினத்தலைவர்(அவரே சொல்லிக்கிறார்.) ஆனால் தன் மகளுக்கு மந்திரிப்பதவி(அட…கனிமொழிக்கு தாங்க) கிடைக்கவேண்டும், கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் மட்டும் இங்கிருந்து பேசுவதில்லை. அதற்கு மட்டும் நேரடையாக டெல்லிக்கே புறப்பட்டு சென்று வரமுடிகிறது அவரால். இது ஆளும் கட்சியின் நிலை.

எதிர்கட்சி மட்டும் என்ன செய்தது தமிழனுக்கு. ராஜாவை கைது செய்தால் காங்கிரசுக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு தருவதாக செல்வி.ஜெயலலிதா சொல்லுகிறார். அது நடக்காது என்று தெரிந்தவுடன் அதே கட்சியை ஊழல் கட்சி என்று திட்டுகிறார். போரென்றால் சில மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர் தானே இந்த அம்மையார். இவருக்கு சொம்படிப்பதற்காகவே சிலர் உள்ளார்கள்.

இன்னும் சில கட்சிகள் உள்ளது தமிழகத்தில், தேர்தலின் போது மட்டும் அவர்கள் வருவார்கள். கூட்டணி என்னும் பெயரில் காசு பார்பதற்காக. சிலர் தன் மகனையும், மகளையும் மந்திரி ஆக்குவதற்காகவே கட்சி நடத்துகிறார்கள். இது போதாமல் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் சிலர் கட்சியை ஆரம்பித்து தொண்டர்களை உசுப்பேத்திவிட்டு அவர்கள் குளிர்காணுகிறார்கள்.

இத்தனை கட்சிகள் இருந்தும் என்ன நடந்தது என் தமிழனுக்கு. அவனை மற்ற நாட்டில் (இலங்கையில்) கொல்லும் போது காப்பாற்றவில்லை. தமிழகத்திலேயே(மீனவர்கள்) அவர்கள் துயரம் படும்போதும் காப்பாற்ற யாரும் இல்லை.

இத்தனையும் நடக்கும் போது மட்டும் தமிழன் குரல் கொடுப்பான். சில நாட்கள் கழித்து இலவசமாக கொடுப்பதையெல்லாம் வாங்கிக்கொள்வான். அவர்கள் எதோ சொந்தக்காசில் தனக்கு செய்கிறார்கள் என்று நினைப்பான், அது தன் காசு தான் என்று தெரியாமல்.

சில நாளில் எல்லாம் மறந்து, எந்த கட்சி மாநாடு நடத்தினாலும் ஒரு பிளேட்டு பிரியாணிக்கும், ஒரு குவாட்டருக்கு எல்லா மாநட்டுக்கும் போவான். அதைச்செய்கிறோம், இதைச்செய்கிறோம் என்று சொல்வார்கள். எல்லோரின் பேச்சுக்கும் கைத்தட்டுவான் புரிந்தாலும் புரியாவிட்டாலும்... 
அவர்கள் பேசுவதும் மட்டும் அல்ல, தமிழனும் ஒரு புரியாத புதிர் தான். 

கருத்து பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்

Thursday, January 27, 2011

உங்கள் பொன்னான ஓட்டுகளை


தேர்தல் வந்துவிட்டது. வழக்கம் போல நான் அதை செய்கிறேன் எனக்கு ஓட்டு போடுங்க. நான் இதை செய்கிறேன் ஓட்டு போடுங்கனு சொல்லிக்கிட்டு வந்திருவாங்க. ஆன இவங்கெல்லாம் சொன்னத செய்ததா சரித்திரமே இல்ல.. இனியும் செய்ய மாட்டானுங்க….அது வேற விசயம். இவங்கலுக்கெல்லாம் வெக்கம், மானம், சூடு, சொரன எல்லாம் இல்லையா. இல்ல எல்லா தடவையும் இவனுங்கல நம்புர நமக்கு இல்லையா. சத்தியமா எனக்கு புரியல.

எத்தன நாலா நாம இவங்கல பாத்து மனு கொடுக்க அலைந்திறுப்போம். இவனுங்க நம்மல கண்டுக்கல. ஆனா இப்ப பாருங்க. வீட்டுக்குவந்து நம்ம தலையில அடிச்சு சத்தியம் பன்னுவாங்க. நிச்சயமா இந்த தடவ மட்டும் எங்கள ஜெயிக்க வையுங்க, அப்புறம் பாருங்க மொத வேளையா உங்க கோரிக்கைய நெரவேத்துவோம்னு சொல்லுவாங்க. அட அப்ப கூட இவங்க உசாருங்க… நம்ம தலயில தான் அடிச்சு சொல்லுவாங்க. அப்பாதான செய்யாம விட்டுடலாம். இதுகூட பரவாயில்லீங்க, நம்மாளுங்களுக்கு இவனுங்க ஒரு கெட்ட பழக்கத்த சொல்லி கொடுத்துட்டானுங்க. அதாங்க காசு மேட்டர். இப்பல்லாம், ஒரு கட்சிய விட இன்னொரு கட்சி கம்மிய காசு கொடுத்த ஒப்பனா அத கேக்க ஆரம்பிச்சுட்டானுங்க நம ஆளுங்க. என்னங்க அந்த கட்சி இவ்வளவு தராங்க நீங்க என் இவ்வளவுதான் தரிங்கன்னு. ரொம்ப கேவலமா இருக்குங்க சொல்லுரதுக்கே.

சரி மெட்டருக்கு வருவோம். வேர ஒன்னும் இல்லீங்க.. தயவு செய்து இந்த முறையாவது இந்த கட்சி இவ்வளவு கொடுத்தானுங்க, அவனுங்க இவ்வளவு கொடுத்தானுங்கனு சொல்லுரத விட்டுட்டு மனசாட்சி சொல்லுர படி கேட்டு ஓட்டு போடுவோம். இன்னொன்னு நம்ம சாதிகார பயபுல நிக்குதுனு சொல்லிப்புட்டு ஓட்டு போட்டுடாதீங்க. சத்தியமா யாராவது ஒரு நல்லவரு உங்க தொகுதியில நிப்பாரு. அவர் எந்த கட்சியிலும் நிக்கலனாலும் பரவாயில, தயிரியமா, மத்தவங்ககிட்ட பிச்ச எடுக்காம சுயேட்சையா நிக்குர அவருக்காவது ஒட்டு போடுங்க.. ஏன்னா, என்ன சொன்னாலும் எவனுக்கு ஓட்டு போட்டாலும் எவனும் நமக்கு ஒன்னும் செய்ய போறது இல்ல.
     
குறைந்த பட்சம் நல்லவங்கலுக்காவது அவங்க கட்டுன டெபாசிட் பணமாவது திரும்ப கிடைசிடும். அதனாலதான் சொன்னேன். சரி எனக்கு என்ன தோணிச்சோ அத சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம்.      

Tuesday, January 25, 2011

குடியரசு தினம்- ஒரு பார்வை

குடியரசு தினம்- ஒரு பார்வை

குடியரசு தினம் என்பது எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். மற்ற நாடுகளில் எந்த தினத்தில் இது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தவும்

இந்தியாவின் குடியரசு தினம்

நம் இந்தியாவில் ஜனவரி இருபத்தி ஆறாம் (26th January) குடியரசு தின நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாம் அருபத்தி இரண்டாம் ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம். அதாவது ஆயிரத்தி தொல்லாயிரத்தி ஐம்பதாம் வருடம் ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி (26th January, 1950) நம் இந்தியா குடியரசு நாடாக மாறியது.  அதாவது இந்தியா ஆயிரத்தி தொல்லாயிரத்தி நாற்பத்தி ஏழாம் வருடம் ஆகஸ்டு பதினைந்தாம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் 1935 ஆண்டின் சட்டம் மாற்றப்பட்டு புதிய இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்டது. ஆனாலும் ஆயிரத்தி தொல்லாயிரத்தி ஐம்பதாம் வருடம் ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி (26th January, 1950) முதல் இது அமலாக்கப்பட்டது
-------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியலமைப்பு :- இந்தியாவின் தலைமைச் சட்டத் தொகுப்பாகும். இந்தியாவின் அடிப்படை அரசியல் கொள்கைகளை, கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் அதன் கடமைகளை அதன் அரசுக்கும் அதன்மூலம் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்குகின்ற வகையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால்நவம்பர் 26, 1949ல் அறிமுகப்படுத்தப்பட்டு சனவரி 26, 1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுகாரும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக, தன்னாட்சி கொண்ட நாடாக, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் மூன்று கொள்கைகளாக பொதுவுடமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை (preamble), இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் (salient features) 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
                                                விக்கிபீடியாவில் இருந்து
       --------------------------------------------------------------------------------------------

ஜனவரி இருபத்தி ஆறின் நாள் காரணம்(January 26th)

      நம் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடந்துக்கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி, அப்போதைய காங்கரசால் பூரன ஸ்வராஜ்(முழுமையான சுதந்திரம்) அறிவிக்கப்பட்டது. அன்று தான் முதல் முறையாக லாகூரில் உள்ள ரவி நதிக்கரையில் நேரு அவர்களால் இந்தியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் காரணமாகவே நாம் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் 1935 ஆண்டின் சட்டம் மாற்றப்பட்டு புதிய இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்டாலும் ஜனவரி 26, 1950 ஆம் நாள் தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

     இந்த வருட கலை நிகழ்ச்சிகளை நேரடியாகப்பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


இந்நாளில் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகொள்வோம். மேலும் வரும் 2020 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உறுதிகொள்வோம்.   

Sunday, January 23, 2011

இனையதள வறைமுறை தூதுவர்(Internet Protocol messenger) மென்பொருள்

இனையதள வறைமுறை தூதுவர் (Ip messenger) என்பது ஒரே நுகர்வி(server) கீழே வேலை செய்யும் எல்லா கணிணிகளையும் ஒன்றினைக்க உதவும் மென்பொருளாகும். அதாவது கல்லூரிகளிலோ, அலுவலகத்திலோ எல்லா கணிணிகளையும் ஒரே நுகர்வியில்(server) இணைத்திருப்பார்கள்.

அப்படி இணைத்திருந்தால், கல்லூரிகளிலோ, அலுவலகத்திலோ இருவேறு இடங்களில் இருப்பவர்கள் இந்த மென்பொருள் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் chatting செய்துக்கொள்ளலாம். இதற்கு internet வசதி தேவை இல்லை. அதாவது சில இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே internet வசதி இருக்கும். ஆனால் எல்லா கணிணிகளும் நிச்சயமாக ஒரே சர்வரில்(server) தான் இணைத்திருப்பார்கள். அங்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் சில நேரங்களில் அலுவலகத்தில் உள்ள எல்லோருக்கும் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டியிருக்கும். அந்த நிலைமையில் இந்த மென்பொருள் மூலமாக எல்லோருக்கும் தெரிவிக்கலாம். அதாவது எல்லோரின் பெயரையும் தேர்வு செய்து செய்திகளை அனுப்பலாம்.

எல்லோருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்றாலும் தனியாக ஒருவரின் பெயரை மட்டும் தேர்வு செய்து செய்தி அனுப்பலாம்.


இல்லையேல் ஒரு சிலர் ஒன்றினைந்து ஒரு குழு ஒன்றை உருவாக்கலாம். அப்படி உருவாக்கி அந்த குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் செய்திகளையோ, தேவையான ஃபைல்(FILE)களையோ அனுப்பிக்கொள்ளலாம்.

ஃபைல்களை இதில் சேர்க்க குறிப்பிட்ட ஃபைலை(file) இழுத்து இதில் விட்டால் போதும். அதில் சேர்ந்துவிடும்.

சில நேரங்களில் சிலர் இதன் மூலமாக தொடர்ந்து எதையாவது அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அதுபோல நேரங்களில், task barஇல் தோன்றும் ip messenger optionஇல் right click செய்து Absence mode என்னும் option தேர்வு செய்தால் வரும் செய்திகள் எல்லாம் lock ஆகிவிடும். பிறகு நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் lockஐ நீக்கினால் அதுவரை அனுப்பப்பட்ட எல்லா செய்திகளயும் நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

இதை படிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
http://ipmsg.org/archive/ipmsg211.zip


Wednesday, January 19, 2011

அலைப்பேசி எண் பெயர்வுத்திறன்(Mobile Number Portability-MNP)



      இன்னும் சில தினங்களில் இந்த வசதி நம் எல்லோருக்கும் கிடைக்கப்போகிறது. 

      அதாவது நம்முடைய அலைப்பேசி வலையமைப்பை இப்பொழுது உள்ள அலைப்பேசி நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம். 

     எளிய முறையில் சொல்லவேண்டுமெனில் அதாவது உங்களுக்கு உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் அலைபேசி எண் மாறாமல் உங்களுக்கு பிடித்த வேறு ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் சேவைக்கு நீங்கள் மாறிக்கொள்ளலாம்.

     இதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வெறும் ரூபாய் 19 மட்டுமே. இதற்காக ஏழு நாள் காத்திருக்கவேண்டியிருக்கும்.(இந்தியாவில் தான் இது அதிகம். எதிர்காலத்தில் இது குறையலாம்) வரும் ஜனவரி இருபதாம் தேதியிலிருந்து இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த சேவை ஹரியானாவில் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

     இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் சில,
1.   பிடிக்காத அலைப்பேசி நிறுவனத்துடன் நீங்கள் இனி இருக்க வேண்டாம்.
2.   மக்களுக்கு பல புது சேவைகளைத்தந்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து நிறுவனங்களும் போராடும்.
3.   தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள எல்லா நிறுவனங்களும் தங்கள் சேவையை சிறப்பான முறையில் தரும்.
4.   மற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒருவருக்கு ஒருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நல்ல திட்டங்களை மக்களுக்கு தருவார்கள்.
5.   வாடிக்கையாளர் சேவையில் எல்லா நிறுவனங்களும் சிறப்பாக செய்ய நினைப்பார்கள். இல்லையேல் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கவேண்டியிருக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.  

இந்த சேவை பல நாடுகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இந்த சேவை இலவசமாக கிடைக்கப்பெறுகிறது. எதிர்காலத்தில் நாமும் நம்நாட்டில் இந்த சேவையை இலவசமாக பெற வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இனி சேவை சரியில்லை என்று நாம் புலம்பவேண்டியதில்லை.
 
இது செயல் படும் விதத்தை கீழே உள்ள படத்தில் காணவும்


மேலும் இதைப்பற்றி அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி