Tuesday, January 4, 2011

அழிந்துவிட்ட இந்திய பிராண்டு(Brand)

இந்தியாவில் இருந்து கொக கோலா 1977ஆம் ஆண்டு வெளியேறியது. அப்பொழுது இருந்த வியாபார வாய்ப்புகளால், அதே ஆண்டு பார்லே (Parle) வின் ரமேஸ் சௌஹான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது கோல்டு ஸ்பட் (Gold Spot) என்னும் குளிர் பானம்.

இது ஒரு ஆரஞ்சு சுவை கொண்ட குளிர் பானம். இது விற்பனைக்கு வந்தவுடன் இதன் விற்பனை அதிவேக வளர்ச்சியை கண்டது. இதற்கு போட்டியாக வேறு ஒரு ஆரஞ்சு சுவை கொண்ட குளிர் பானம் சந்தையில் இல்லை. அதுவே இதன் வெற்றிக்கு வழிவகுத்தது.
கோல்ட் ஸ்படின் டக் லைன்(Tag Line)

பின்னர் 1993ஆம் ஆண்டு கொக கோலா மீண்டும் இந்தியாவிற்கு வந்தது. வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் இந்த கோல்டு ஸ்பட்ஐ (Gold Spot) விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள். அதற்கான முதல் காரணம். கோல்டு ஸ்படிற்கு இந்திய சந்தையில் உள்ள பிரபலம் மற்றும் அதன் விநியோகம். இந்த பொருள் பெரும்பாலான கடைகளிலும் கிடைக்கும் படியாக இருந்தது. கிராமப்புரங்களிலும் இந்த குளிர் பானம் கிடைக்கும் படியான விநியோகம் இருந்தது. கொக கோலாவும் அதை பயன் படுத்தி அவர்களின் மற்ற பொருள்களையும் அதன் வழியாகவே வெகு சுலபமாக விற்பனை செய்துகொண்டார்கள். இது கொக கோலாவை இந்தியாவின் நெம்பர் ஒன் விற்பனையாலராக மாற்றியது.
பின்னர் தங்களுடைய சொந்த தயாரிப்பான ஃபன்டாவை(FANTA) விற்பனை செய்வதற்காக கோல்டு ஸ்பட்ஐ நிறுத்திவிட்டார்கள். அத்துடன் கோல்டு ஸ்படின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.

 கோல்டு ஸ்படின் விளம்பரம்.

8 comments:

  1. காளிமார்க் மற்றும் அதன் பானங்களான torino, bovonto கூட அப்படித்தான்... bovonto வை மட்டும் இன்னும் சில இடங்களில் பார்க்க முடிகிறது...

    ReplyDelete
  2. @ Philisophy Prabhakaran.... இந்திய பொருட்கள் பல இது பொல ஒரு சரிவை சந்தித்துள்ளது...இதை பற்றி சமிபத்தில் படித்ததால் எழுதி இருக்கிறேன்....

    ReplyDelete
  3. ஞாபகம் இருக்குங்க ! சின்னப் பிள்ளையாக் இருக்கப்ப இந்த விளம்பரம் லாம் பார்த்துருக்கேனுங்க ! காளி மார்க் இன்னும் சில இடங்களல இருக்குங்க........... ஆனா வெளிநாட்டுக் காரன் முன்னாடி இந்த பிராண்டலாம் போயே போச்சுங்க. இது தான் இந்தியாவின் சுதேசிக் கொள்கையா இருக்குமோ.........

    ReplyDelete
  4. @ஆரோனன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...என்ன பன்னுவது....வெளி நாட்டுல இருந்து வந்து நாம வியாபாரத்த காலிபண்ணிடாங்க.....

    ReplyDelete
  5. பாலோவர் ஆப்ஷன் எங்க இருக்குங்க?

    ReplyDelete
  6. @Lakshmi.... வருகைக்கு நன்றி... எனது வலைப்பூவில் வது ஓரம்...என் வலைப்பூவை பின் தொடர என்னும் வரிகளுக்கு கீழே....Follow பொத்தான் உள்ளது....

    ReplyDelete
  7. Read more about Pepsi and coke

    மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
    http://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/

    --RAJA---

    ReplyDelete
  8. marakka mudiyaadhu naangal indha peyaril oru vilaatu kooda vilayaadiullom.... enna seiya... veli naatu sathi

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி