Tuesday, January 25, 2011

குடியரசு தினம்- ஒரு பார்வை

குடியரசு தினம்- ஒரு பார்வை

குடியரசு தினம் என்பது எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். மற்ற நாடுகளில் எந்த தினத்தில் இது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தவும்

இந்தியாவின் குடியரசு தினம்

நம் இந்தியாவில் ஜனவரி இருபத்தி ஆறாம் (26th January) குடியரசு தின நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாம் அருபத்தி இரண்டாம் ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம். அதாவது ஆயிரத்தி தொல்லாயிரத்தி ஐம்பதாம் வருடம் ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி (26th January, 1950) நம் இந்தியா குடியரசு நாடாக மாறியது.  அதாவது இந்தியா ஆயிரத்தி தொல்லாயிரத்தி நாற்பத்தி ஏழாம் வருடம் ஆகஸ்டு பதினைந்தாம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் 1935 ஆண்டின் சட்டம் மாற்றப்பட்டு புதிய இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்டது. ஆனாலும் ஆயிரத்தி தொல்லாயிரத்தி ஐம்பதாம் வருடம் ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி (26th January, 1950) முதல் இது அமலாக்கப்பட்டது
-------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியலமைப்பு :- இந்தியாவின் தலைமைச் சட்டத் தொகுப்பாகும். இந்தியாவின் அடிப்படை அரசியல் கொள்கைகளை, கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் அதன் கடமைகளை அதன் அரசுக்கும் அதன்மூலம் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்குகின்ற வகையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால்நவம்பர் 26, 1949ல் அறிமுகப்படுத்தப்பட்டு சனவரி 26, 1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுகாரும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக, தன்னாட்சி கொண்ட நாடாக, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் மூன்று கொள்கைகளாக பொதுவுடமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை (preamble), இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் (salient features) 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
                                                விக்கிபீடியாவில் இருந்து
       --------------------------------------------------------------------------------------------

ஜனவரி இருபத்தி ஆறின் நாள் காரணம்(January 26th)

      நம் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடந்துக்கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி, அப்போதைய காங்கரசால் பூரன ஸ்வராஜ்(முழுமையான சுதந்திரம்) அறிவிக்கப்பட்டது. அன்று தான் முதல் முறையாக லாகூரில் உள்ள ரவி நதிக்கரையில் நேரு அவர்களால் இந்தியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் காரணமாகவே நாம் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் 1935 ஆண்டின் சட்டம் மாற்றப்பட்டு புதிய இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்டாலும் ஜனவரி 26, 1950 ஆம் நாள் தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

     இந்த வருட கலை நிகழ்ச்சிகளை நேரடியாகப்பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


இந்நாளில் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகொள்வோம். மேலும் வரும் 2020 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உறுதிகொள்வோம்.   

6 comments:

  1. ஜனவரி 26 குடியரசு தினம் என மாற்றி எழுதவும். தவறு சுட்டிக் காடியதற்கு மன்னிக்கவும். நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @மதுரை சரவணன்- அட அதற்காக மன்னிப்பெல்லாம் வேண்டாம் நண்பரே... தவறு என்பது சுட்டிக்காட்டுவதற்காகத்தானே.... தலைப்பில் மாற்றம் செய்ய சொல்கிறீர்களோ?.....

    ReplyDelete
  3. ம்ம்ம் நடக்கட்டும்... குடியரசு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க...

    http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_26.html

    ReplyDelete
  5. குடியரசு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. @ Philosophy Prabhakaran , sakthistudycentre-கருன்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி