Monday, January 31, 2011

தமிழன் – ஒரு புரியாத புதிர்


இலங்கையில் எம் மக்கள் அடிபட்டு, உதைபட்டு சாகிறார்கள். அவர்களைக்காக்க டெல்லிக்கு செல்லாமல் இங்கிருந்து நெஞ்சம் பொறுக்கவில்லை, கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது என்று நீலிக்கண்ணீருடன்  கடிதம் போடுகிறார் ஒரு தமிழினத்தலைவர்(அவரே சொல்லிக்கிறார்.) ஆனால் தன் மகளுக்கு மந்திரிப்பதவி(அட…கனிமொழிக்கு தாங்க) கிடைக்கவேண்டும், கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் மட்டும் இங்கிருந்து பேசுவதில்லை. அதற்கு மட்டும் நேரடையாக டெல்லிக்கே புறப்பட்டு சென்று வரமுடிகிறது அவரால். இது ஆளும் கட்சியின் நிலை.

எதிர்கட்சி மட்டும் என்ன செய்தது தமிழனுக்கு. ராஜாவை கைது செய்தால் காங்கிரசுக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு தருவதாக செல்வி.ஜெயலலிதா சொல்லுகிறார். அது நடக்காது என்று தெரிந்தவுடன் அதே கட்சியை ஊழல் கட்சி என்று திட்டுகிறார். போரென்றால் சில மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர் தானே இந்த அம்மையார். இவருக்கு சொம்படிப்பதற்காகவே சிலர் உள்ளார்கள்.

இன்னும் சில கட்சிகள் உள்ளது தமிழகத்தில், தேர்தலின் போது மட்டும் அவர்கள் வருவார்கள். கூட்டணி என்னும் பெயரில் காசு பார்பதற்காக. சிலர் தன் மகனையும், மகளையும் மந்திரி ஆக்குவதற்காகவே கட்சி நடத்துகிறார்கள். இது போதாமல் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் சிலர் கட்சியை ஆரம்பித்து தொண்டர்களை உசுப்பேத்திவிட்டு அவர்கள் குளிர்காணுகிறார்கள்.

இத்தனை கட்சிகள் இருந்தும் என்ன நடந்தது என் தமிழனுக்கு. அவனை மற்ற நாட்டில் (இலங்கையில்) கொல்லும் போது காப்பாற்றவில்லை. தமிழகத்திலேயே(மீனவர்கள்) அவர்கள் துயரம் படும்போதும் காப்பாற்ற யாரும் இல்லை.

இத்தனையும் நடக்கும் போது மட்டும் தமிழன் குரல் கொடுப்பான். சில நாட்கள் கழித்து இலவசமாக கொடுப்பதையெல்லாம் வாங்கிக்கொள்வான். அவர்கள் எதோ சொந்தக்காசில் தனக்கு செய்கிறார்கள் என்று நினைப்பான், அது தன் காசு தான் என்று தெரியாமல்.

சில நாளில் எல்லாம் மறந்து, எந்த கட்சி மாநாடு நடத்தினாலும் ஒரு பிளேட்டு பிரியாணிக்கும், ஒரு குவாட்டருக்கு எல்லா மாநட்டுக்கும் போவான். அதைச்செய்கிறோம், இதைச்செய்கிறோம் என்று சொல்வார்கள். எல்லோரின் பேச்சுக்கும் கைத்தட்டுவான் புரிந்தாலும் புரியாவிட்டாலும்... 
அவர்கள் பேசுவதும் மட்டும் அல்ல, தமிழனும் ஒரு புரியாத புதிர் தான். 

கருத்து பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்

10 comments:

 1. உங்கள் பங்களிப்பிற்கு நன்றி நண்பா... தொடர்ந்து போராடுவோம்...

  ReplyDelete
 2. @Philosophy Prabhakaran ... நிச்சயம் நண்பா.....

  ReplyDelete
 3. எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதே தமிழக உறவுகளின் இன்றைய தலைவலி. ஐந்து ரூபாய்க்கு இலவசங்களைக் கொடுத்து 1000 ரூபாய்களை கொள்ளையடிக்கும இந்த வியாதிகளை என்று இனம் காணப் போகின்றீர்கள். 400க்கும் மேற்பட்ட மீனவ உறவுகள் மடியும் வரை மெளனமாய் இருந்து விட்டு இப்போது எழுச்சி கொண்டிருப்பதும் அரசியல் வியாதிகளின் சதியா? நாளை கிரிக்கட் தொடங்கிய பின் அதுவும் மறந்து போவார்கள் இந்த தமிழர்கள்.

  ReplyDelete
 4. @அனானி அவர்கள்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
  //நாளை கிரிக்கட் தொடங்கிய பின் அதுவும் மறந்து போவார்கள் இந்த தமிழர்கள்//....
  உண்மை தான்...கிரிக்கெட்டின் முன்பு போரட்டம் மறந்து போகும் தான்...

  ReplyDelete
 5. தங்களின் பங்களிப்பிற்கு நன்றி நண்பா... தொடர்ந்து போராடுவோம்...

  ReplyDelete
 6. அருமையான பதிவு !!! நிச்சயம் நம்மை போன்ற எண்ணாம் கொண்டோர் தமிழ்நாட்டில் பலர் இருப்பதை #tnfisherman ஆதரவுக் களத்தில் கண்டேன் ! இக்கூட்டத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைக்க வேண்டும் !!! புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் ! ஊழல் செய்தவனை கோவணத்தோடு நாட்டை விட்டு விரட்ட வேண்டும் !!! துனிசியா எகிப்தில் நடுவர்க்க மக்கள் புரட்சி அரசியல் சாராதது,உண்மையானது, எந்த மதம் மொழி இனம் சாராதது, அப்படியான ஒருக் கூட்டம் தமிழகத்தில் சேருமா??? அதற்கு வலைப்பதிவர் எழுத்தில் பேச்சிலும் சொல்லிலும் செயலிலும் என்னச் செய்யப் போகின்றோம் >>>

  ReplyDelete
 7. நல்ல பதிவு நண்பரே! ஓட்டுக்களும் போட்டுள்ளேன்!

  ReplyDelete
 8. @sakthistudycentre-கருன்,இக்பால் செல்வன்,மாத்தி யோசி....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 9. தொடர்ந்து போராடுவோம் மக்கா.............

  ReplyDelete
 10. @MANO நாஞ்சில் மனோ ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்....நிச்சயம் போராடுவோம்...

  ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி