Wednesday, January 19, 2011

அலைப்பேசி எண் பெயர்வுத்திறன்(Mobile Number Portability-MNP)



      இன்னும் சில தினங்களில் இந்த வசதி நம் எல்லோருக்கும் கிடைக்கப்போகிறது. 

      அதாவது நம்முடைய அலைப்பேசி வலையமைப்பை இப்பொழுது உள்ள அலைப்பேசி நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம். 

     எளிய முறையில் சொல்லவேண்டுமெனில் அதாவது உங்களுக்கு உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் அலைபேசி எண் மாறாமல் உங்களுக்கு பிடித்த வேறு ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் சேவைக்கு நீங்கள் மாறிக்கொள்ளலாம்.

     இதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வெறும் ரூபாய் 19 மட்டுமே. இதற்காக ஏழு நாள் காத்திருக்கவேண்டியிருக்கும்.(இந்தியாவில் தான் இது அதிகம். எதிர்காலத்தில் இது குறையலாம்) வரும் ஜனவரி இருபதாம் தேதியிலிருந்து இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த சேவை ஹரியானாவில் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

     இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் சில,
1.   பிடிக்காத அலைப்பேசி நிறுவனத்துடன் நீங்கள் இனி இருக்க வேண்டாம்.
2.   மக்களுக்கு பல புது சேவைகளைத்தந்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து நிறுவனங்களும் போராடும்.
3.   தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள எல்லா நிறுவனங்களும் தங்கள் சேவையை சிறப்பான முறையில் தரும்.
4.   மற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒருவருக்கு ஒருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நல்ல திட்டங்களை மக்களுக்கு தருவார்கள்.
5.   வாடிக்கையாளர் சேவையில் எல்லா நிறுவனங்களும் சிறப்பாக செய்ய நினைப்பார்கள். இல்லையேல் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கவேண்டியிருக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.  

இந்த சேவை பல நாடுகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இந்த சேவை இலவசமாக கிடைக்கப்பெறுகிறது. எதிர்காலத்தில் நாமும் நம்நாட்டில் இந்த சேவையை இலவசமாக பெற வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இனி சேவை சரியில்லை என்று நாம் புலம்பவேண்டியதில்லை.
 
இது செயல் படும் விதத்தை கீழே உள்ள படத்தில் காணவும்


மேலும் இதைப்பற்றி அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


9 கருத்துகள்:

sakthistudycentre-கருன் said...

பயனுள்ள தகவல்,நன்றி.

sakthistudycentre-கருன் said...

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
kkarun09,010அப்படின்னு ஓட்டு போடரது நான்தான்.

Anonymous said...

which is best in TAMIL NADU AND WHY

தம்பி கூர்மதியன் said...

நல்ல பதிவு..

டக்கால்டி said...

Nice post...

பாரத்... பாரதி... said...

இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.

Pari T Moorthy said...

@ sakthistudycentre-கருன், தம்பி கூர்மதியன்,டக்கால்டி,பாரத்... பாரதி... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

Maligaikadu Hanan said...

இவ்வலைப்பதிவில் வெளியாகுவன மிகவும் பயனுள்ளவை -நன்றி பச்சைத்தமிழனே-

Pari T Moorthy said...

@Maligaikadu Hanan...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

Post a Comment

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி

என்னை பலருக்கு அறிமுகப்படுத்தியவை