Friday, December 31, 2010

புலம்பல்

நாளை புத்தாண்டு என்பதால் இன்றே புலம்பிவிடலாம் என்று நினைத்தேன். அநேகமாக நெறைய பேர் இது போல புலம்பியிருப்பிர்கள்.......அதான் இந்த பதிவு........

மொதல்ல தேர்தல பத்தி பாப்போம். இன்னும் அஞ்சு மாசத்துல வர போது. வழக்கம் போல எல்லா தலைவர்களும் நான் இதை செய்றேன் எனக்கு வோட்டு போடுங்க நான் அதை செய்றேன் எனக்கு வோட்டு போடுங்க நு சொல்லுவாங்க. நாமளும் அதை நம்பி வோட்டு போட்டுகிட்டு தான் வரோம் ஆனாலும் எதுவும் நடக்கறது இல்ல. சரி இந்த கட்சி தான் ஒன்னும் செய்யலன்னு இன்னொரு கட்சிக்கு வோட்டு போட்ட அவிங்களும் ஒன்னும் செய்றது இல்ல. கேட்ட போன ஆட்சி எல்லாத்தையும் காலி பணிடாங்க. நாங்க இனிமே தான் எல்லாம் உருவாக்கி உங்களுக்கு செய்யணும் நு சொல்றாங்க. ஆனா எல்லோரும் ஒன்னு மட்டும் ஒழுங்க செய்றாங்க அதாங்க  ஊழல் சொன்னேன். அதுக்கு மட்டும் எப்படி காசு எங்கிருந்து வருதுன்னு தான் தெரியமாட்டேன்குது. எப்படித்தான் செயரான்கனே தெரிய மாட்டேங்குது. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம செய்றானுங்க. முன்பெல்லாம் லட்சத்துல பண்ணவங்க பின்னாடி கோடியில பண்ண ஆரம்பிச்சானுங்க அப்புறம் ஆயிரம் ரெண்டாயிரம் கோடின்னு செய்தானுங்க இப்ப லட்சம் கோடின்னு போய்டாங்க . ஆனா நாம மட்டும் இனாமும் பிச்ச தான் எடுக்குறோம். இந்த கட்சி வந்த அந்த கட்சியா திட்றாங்க அவிங்க வந்த இவிங்கள திட்றாங்க. அவங்களுக்கு நடுவுல வோட்டையும் போட்டு நாமதான் ஏமாந்து கிடகுறோம்

அடுத்து இந்த விலைவாசி உயர்வு. இத பத்தி சொல்லவே தேவை இல்ல. தினமும் வெல வாசி ஏறுது கால் கிலோ அர கிலோ வாங்கிகிட்டு இருந்த மக்கள்  இப்ப நுறு கிராம் அம்பது கிராமுனு வாங்குறாங்க. பாக்கவே கொடுமையா இருக்கு. போற போக்குல பாத்தா மக்கள் ஒரு காய் ரெண்டு காய்னு வாங்க வேண்டியதுதான். கொடுமையிலும் கொடுமை. கடவுளே இந்த அரசியல்வாதிங்க தான் காப்பாத்த மாட்டேன்குறாங்க நீங்களாவது எங்க மக்களை காப்பாத்தனும்.

 அடுத்து லஞ்சம்.. ஏற்கனவே சொன்ன ஊழல் போல தான் இதுவும்.நம்ம நாட்டையே அழிசிட்டு இருக்கு எல்லாத்திலேயும் லஞ்சம். என்ன பண்றதுனே தெரியல வெவஸ்தேயே இல்லாம எல்லோரும் வாங்குறாங்க. அஞ்சாயிரம் சம்பளம் வாங்குரவங்களிருந்து  அஞ்சு லட்சம் வாங்குறவன் வரைக்கும் எல்லோரும் வெட்கமே இல்லாம வாங்குறாங்க. என்னத்த பண்றது. என்ன பன்னாலும் இது மட்டும் நம்மள விடு போக மாட்டேங்குது. நமக்கு சாபக்கேடு மாதிரி நம்மகுடையே சுத்துது.
 
கடவுளே இந்த மக்களை நீங்கதான் காப்பாத்தணும். வர போற புது வருசமாவது எல்லாம் மாறி மக்களுக்கு ஒரு நல்லவருடமா இற்கு நீங்க தான் ஒரு வழி செய்யணும் 
வருஷ வருஷம் தவறாம நாம புலம்பரதுதான் ஆனா ஒண்ணுமே நடக்காதுகிறது வேற விஷயம் இருந்தாலும் நம்ம கடமை. நாம கடமையிலிருந்து தவறியதா சரித்திரமே கிடையாது.. தெரியுமில்ல...

2 comments:

  1. இந்த அரசியல் வாதிகளை என்னபண்ணினா தேவலை. விலைவாசி உயர்வு, லஞ்ச லாவண்யம் எதையுமே அவர் களால் கட்டுப்படுத்த முடியலைனா எதுக்கு ஆட்சிக்கட்டிலில் விடாம அமர்ந்திருக்கனும்?
    விலகி நல்லவர்களுக்கு வழி விடலாம் இல்லியா?

    ReplyDelete
  2. @Lakshmi...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...என்னங்க பன்னுறது...கடவுள் தான் நம்மள காப்பாத்தானும்...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி