Sunday, March 6, 2011

பெயர் சரித்திரம்


போன் வாரம் என்னையும் மதிச்சி தொடர்பதிவு எழுத நம்ம தம்பி கூர்மதியன்(பேரில் மட்டுமே தம்பி. உண்மையில் நானே சின்ன பையன், அவரு பெரிய பையன்)

அதாவது எதுக்காக எனக்கு இந்த பேர வச்சாங்க அப்படினு கேட்டிருந்தார். அதாங்க என் பேரோட தரித்திரம் சரி சரித்திரம்.

என்னோட பெற்றோர் தமிழ் ஆசிரியர்கள். அதானலேயே எங்கள் வீட்டில் எல்லோர் பெயரும் தமிழிலேயே இருக்கும்.

நான் பிறந்தவுடன் ஜாதகப்படி எனக்கு ”ப” வில் ஆரம்பமாகும் பெயர் வைக்கவேண்டும் என்பதால் பல பெயர்கள் யோசிக்கப்பட்டது. பின்னர் பாரி என்று வைக்கப்பட்டுவிட்டது

ஆரம்பத்துல எனக்கு என் பெரு பிடிக்கவே இல்லங்க. காரணம். எங்க வீட்டுல எல்லோருக்கும் பெரிய பெரிய பேரு. எனக்கு மட்டும் பாரினு சின்னதா வச்சுட்டங்களேனு கோபம் வருத்தம் எல்லாம். வீட்டுல கூட இத அடிக்கடி கேட்டிருக்கேன். அவங்க எல்லோருக்கும் பெரிய பேரு இருக்கேனு எனக்கு சின்ன பேரு இருக்கட்டும்னு இத வச்சதா சொல்லுவாங்க

சரி அது போகட்டும்னு அப்பிடியே வருசம் கடந்து பொறியியல் மூனாவது வருசம் வந்த பிறகு என்னோட அப்பா பேரான தாண்டவமூர்த்தி ய என் பேருக்கு பின்னால initial இல்லாம பேராவே சேத்துக்கிட்டேன்.

அப்புறம் எனக்கு என் பேரு ரொம்ப பிடிச்சிடிச்சி. சரி அப்படியே நானும் என் பேர தமிழில் எழுதும்போது பாரி தாண்டவமூர்த்தினும், இங்லீஷ்ல எழுதுனா Pari T Moorthy னும் எழுத ஆரம்பிச்சுட்டேன். இதுதாங்க என் பாருக்கு சாரி பேருக்கு பின்னால இருக்குற சரித்திரம்(!!!)…..

சரி இது ஒரு தொடர் பதிவு. அதனால இத தொடர நம்ம Sakthisatudycenter-கருன் அவர்களையும், தமிழ்வாசி பிரகாஷ் அவர்களையும் கூப்பிடுறேன்.

34 comments:

 1. முதல் மழை என்னை நனைத்ததே

  ReplyDelete
 2. நல்ல சரித்திரம்

  ReplyDelete
 3. >>>நம்ம தம்பி கூர்மதியன்(பேரில் மட்டுமே தம்பி. உண்மையில் நானே சின்ன பையன், அவரு பெரிய பையன்)

  ஆமா.. அவ்ரு கூர்மையான அறிவுள்ளவர் ஆச்சே..

  ReplyDelete
 4. நல்ல பெயர் விளக்கம்... தொடர் பதிவுக்கு அழைப்பா? ம்ம்ம்...எழுதிட்டா போச்சு...

  சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

  ReplyDelete
 5. @சி.பி.செந்தில்குமார்....நீங்க ரொம்ப வேகம் சார்....

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார்... பிரபல பதிவரா இருந்து இந்த சின்ன பையன வாழ்தின உங்கள வாழத்த வயதில்லாமல் வணங்குகிறேன்.

  ReplyDelete
 7. @எல் கே...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....எழுத ஒத்துக்கொண்டதற்கு ரொம்ப நன்றி பாஸ்

  ReplyDelete
 9. @சி.பி.செந்தில்குமார்

  //நம்ம தம்பி கூர்மதியன்(பேரில் மட்டுமே தம்பி. உண்மையில் நானே சின்ன பையன், அவரு பெரிய பையன்)

  ஆமா.. அவ்ரு கூர்மையான அறிவுள்ளவர் ஆச்சே..//

  கரக்டு...செம கூர்மையான அறிவு...எவ்வளவு talent ஆ மூணு blog மெயிண்டெயின் பன்றாரு...

  ReplyDelete
 10. பாரு சாரி பேரு காரணம் சூபரு!

  ReplyDelete
 11. @விக்கி உலகம்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... உங்களுக்கும் டங் சிலிப்பா பாஸ்.....

  ReplyDelete
 12. இப்படியெல்லாம் காரணம் இருக்கா?

  ReplyDelete
 13. விரைவில் எழுதுகிறேன் நண்பா..

  ReplyDelete
 14. நீங்கெலாம் நினைக்கிற மாதிரி நான் பெரியவன் கிடையாதுங்க.. இந்த சூலை வந்தா தான் எனக்கு பத்து வயசு ஆகபோகுது..


  //ஆமா.. அவ்ரு கூர்மையான அறிவுள்ளவர் ஆச்சே..//

  @சிபி:Double meaning trouble thatha..

  @பாரி:பாரி அருமையான பேர்.. எல்லாரும் என் பேரு பெருசா இருக்கேன்னு வருத்தப்படுவாங்க நீங்க சின்னதா இருக்கேன்னு வருத்தப்பட்டிருக்கீங்க.. ரொம்ப வித்யாசமானவங்க நீங்க..

  ReplyDelete
 15. முதல் மழை என்னை நனைத்ததே
  March 6, 2011 7:24 AM//

  ஜொள்ளு மழையா பாஸ்..

  ReplyDelete
 16. Pari T Moorthy said...
  @விக்கி உலகம்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... உங்களுக்கும் டங் சிலிப்பா பாஸ்.....
  March 6, 2011 8:13 AM//

  அவரு ஆளே இப்ப சிலிப் ஆகி தான் கிடக்கறாரு...
  எல்லாம் ஒரு போன் செஞ்ச மாயம்...

  ReplyDelete
 17. @வேடந்தாங்கல் - கருன்..வருகைக்கும் தொடர்பதிவு எழுத ஒத்துக்கொண்டதற்கு நன்றி....

  ReplyDelete
 18. @தம்பி கூர்மதியன்...
  //நீங்கெலாம் நினைக்கிற மாதிரி நான் பெரியவன் கிடையாதுங்க.. இந்த சூலை வந்தா தான் எனக்கு பத்து வயசு ஆகபோகுது..//
  எனக்கு இந்த டிசம்பர் வந்த ஏழு முடிஞ்சி எட்டு வயசு ஆரம்பிக்குது பாஸ்...

  //பாரி அருமையான பேர்.. எல்லாரும் என் பேரு பெருசா இருக்கேன்னு வருத்தப்படுவாங்க நீங்க சின்னதா இருக்கேன்னு வருத்தப்பட்டிருக்கீங்க.. ரொம்ப வித்யாசமானவங்க நீங்க.//

  அட நீங்க வேற.. கையெழுத்து போடும் போது எல்லோரும் ஒரு முழத்துக்கு போடும் போது நான் மட்டும் சின்னாதா போடுவேன்.அப்படியே எனக்கு எரியும் பாருங்க....அதலாம் இங்க சொல்ல முடியாது...

  ReplyDelete
 19. @டக்கால்டி said...
  //Pari T Moorthy said...
  @விக்கி உலகம்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... உங்களுக்கும் டங் சிலிப்பா பாஸ்.....
  March 6, 2011 8:13 AM//

  அவரு ஆளே இப்ப சிலிப் ஆகி தான் கிடக்கறாரு...
  எல்லாம் ஒரு போன் செஞ்ச மாயம்...//

  என்னது போனா??? பாஸ் லவ்வா????

  ReplyDelete
 20. ம்.. நானெல்லாம் பேர் இரண்டு அல்லது மூன்றெழுத்தில் இருக்கணும்னு சின்ன வயசில் ஆசைப்பட்டேன்.. அதான் இப்ப சுருக்கி "ஆவி" ... ஹி ஹி ஹி

  ReplyDelete
 21. !நல்ல விளக்கம்!

  ReplyDelete
 22. நிறைய பேர் பெயர் பெரிதாக இருக்கிறதே என்று கவலைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்களே!

  ReplyDelete
 23. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. 'பாரி' கூப்பிடும்போதே அழகாகத்தானே இருக்கு...

  ReplyDelete
 25. வணக்கம் சகோதரம், மனிதர்களினை அடையாளப்படுத்த இவ் உலகில் பெயர்கள் அவசியமாகின்றது. இதனடிப்படையில் உங்களின் பெயரும், அதன் பின்னணியில் உள்ள விடயங்களும், விளக்கிய விதமும் அருமை. பாரி என்றோர் மன்னன் இருந்தான் கேள்விப்பட்டதுண்டா. தமிழுலகில் கொடைக்குப் பெயர் போன மன்னன் பாரி என்று கூறுவார்கள். வாழ்ந்தால் கொடையில் பாரியைப் போல வாழவேணும் என்று ஆன்றோர் கூறுவார்கள்.

  ReplyDelete
 26. பாரியும் நல்லாதானே இருக்கு! என்னையும் மதித்து வலைச்சரத்தில் போட்டமைக்கு நன்றிகள் உங்களையும் தொடர்கிறேன்!

  ReplyDelete
 27. @கோவை ஆவி ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 28. @NIZAMUDEEN...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  ReplyDelete
 29. @ஞாஞளஙலாழன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....தம்பி கூர்மதியனுக்கு சொன்ன அதே பதில் தான் சார் உங்களுக்கும்

  ReplyDelete
 30. @Rathnavel..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 31. @Sriakila .....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 32. @நிரூபன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 33. @கார்த்தி ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி