Monday, May 23, 2011

எங்க ஊருக்கு வந்த காதல் சின்னம்


     காதல் சின்னம்னு சொன்னா எல்லாருக்கு நினைவுக்கு வருவது தாஜ்மகாலும் ரோஜாவும் (நான் ரோஜாபூவ சொன்னேன். யாராவது வேர நினைசீங்கன்னா அதுக்கு கம்பனி பொறுப்பாகாது). ரோஜா எல்லா ஊரிலேயும் இருக்கும் ஆனா தாஜ்மகால் ஆக்ராவில் மட்டும் தான் இருக்கும். ஆனா இப்ப அது வேலூருக்கும் வந்துருச்சி     வேலூர் கோட்டையில் ஒரு பெரிய மைதானம் இருக்கு. எப்ப எந்த கட்சி கூட்டம் வேலூர்ல நடந்தாலும் அது அங்க தான் நடக்கும். சாதாரணமா அங்க எப்ப இந்த பள்ளிக்கூட லீவு விடுர நாள் வந்தாலும் பொருட்காட்சி வச்சிடுவாங்க. ஆனா இந்த முறை அங்க கூடுதலா தாஜ்மகால் மாதிரிய செஞ்சி வச்சியிருக்காங்க. நல்லா இருக்குங்க. உண்மையான தாஜ்மகால நான் எப்ப பார்ப்பேன்னு தெரியாது. ஆனா அது வரைக்கும் இந்த தாஜ்மாகலின் நினைவு இருக்குங்க. என்ன சாதாரனமா 5 ரூபா வாங்குர துக்கு பதிலா இப்ப முப்பது ரூபா வங்குராங்க அது தான் வருத்தமா இருக்கு. பரவாயில அப்படியோ நானும் தாஜ்மகால பாத்துட்டேன். அது பக்கத்துல இருந்து போட்டோ எடுத்துக்கிட்டேன். இது போல வரலாற்று சிறப்புமிக்க தலங்களின் மாதிரிகளை செய்து வைப்பது சிறப்பான ஒரு ஐடியா தான். நிச்சயமா இதுவரை சம்பாதித்ததில் இந்த முறை தான் அந்த நிர்வாகம் அதிகமான லாபம் ஈட்டியிருக்கும். இதே போல மற்ற இடங்களிலும் பொருட்காட்சி போடுபவர்கள் பின்பற்றலாம்.அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி.

15 comments:

 1. பாரி... ரொம்ப நாளா ஆளவே காணோம். இந்த தாஜ்மஹால் செட்டுக்கு உதவி செய்ய போயிருந்திங்களா?


  எனது வலைப்பூவில்:
  மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

  ReplyDelete
 2. @தமிழ்வாசி - Prakash...படிச்சி முடிச்சாச்சி..அதான் வேலைக்கி சில எக்சாம் எழுத வேண்டி இருந்தது...அப்புறம் வீட்டில் நெட் இல்ல...அதான்...

  ReplyDelete
 3. எங்க ஊர்லயும் பொருட்காட்சி நடக்குது.. ஆனா முகப்புல விளம்பரதாரர்கள் ஆக்ரமிச்சிருப்பாங்க.

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash...அது இங்கேயும் உண்டு....கூடவே இந்த தாஜ்மகாலும்...

  ReplyDelete
 5. நல்ல பதிவு.
  வேலூர் தாஜ்மஹால் நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்லதொரு பயனுள்ள யோசனைதான்.
  எல்லா ஊர்களிலும் இதை கடைபிடிக்கலாம்.
  ஏற்கனவே எங்கள் ஊர் திருச்சியில் முன்னொரு காலத்தில் தாஜ்மஹால் படம் மிகப்பெரியதாக வரையப்பட்ட துணியை சுவற்றில் ஒட்டி, அதன் முன்பு வருவோரை நிற்க வைத்து போட்டோ எடுத்து வந்தனர்.

  முரட்டு பைக் ஒன்றும் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருக்கும். அதன் மேல், கணவன், மனைவி, குழந்தைகள் எல்லோரும் அமர்ந்து பைக் ஓட்டுவது போலவே போட்டோ எடுத்துத்தருவார்கள். பின்புறம் ஹெவி ட்ராஃபிக் போலவே ஸ்க்ரீன் செட்-அப் செய்திருப்பார்கள். போட்டோவுக்கு மட்டும் காசு வசூலிப்பார்கள். அந்த ப்ளாக் & ஒயிட் போட்டோவைப்
  பார்த்தால் உண்மையாகவே பைக்கில் குடும்பத்துடன் வேகமாகச் செல்வது போலவே இருக்கும். தங்கல் பதிவைப்பார்த்ததும் அந்த ஞாபகமே வந்தது.

  ReplyDelete
 7. ok ok ellam sari nalla padam kaaturaanka velore la naanum oru rendu murai vanthirukken ippa parunka vara mudiyala .......... varuththanthan

  ReplyDelete
 8. வணக்கம் .. நண்பா ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. @தம்பி கூர்மதியன்...நன்றி நண்பா...

  ReplyDelete
 10. @Rathnavel....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

  ReplyDelete
 11. @வை.கோபாலகிருஷ்ணன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...........

  ReplyDelete
 12. @bala...வாங்க சார்...கண்டிப்பா வாங்க...

  ReplyDelete
 13. @!* வேடந்தாங்கல் - கருன் *! .....வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி....

  ReplyDelete
 14. நம்ம ஊருல எத்தன தாஜ் மஹால் வந்தாலும் நம்ம ஊரு காதல் மட்டும் சாதரணமா ஜெயிக்காது
  எவனாவது ஒருத்தன் ஜாதி மதம் காரணமா காட்டி பிரிச்சுருவான்

  ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி