சென்ற வாரம் FACEBOOK இல் ஒருவரைப்பற்றி படித்தேன். அதை உங்களுடன் நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
நாகா நரெஷ் கருடுர(Naga Naresh Karutura) என்னும் மாணவரைப் பற்றிய பதிவு இது. இவர் சென்னை IIT யில் பயின்று கூகுளில்(Google) வேலை செய்ய தேர்வாகியுள்ளார். இது பெரிய சாதனையா என்று நீங்கள் கேட்கலாம். பலர் இதை செய்திருக்கமுடியும்.
இவரின் பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள். தங்கள் மகன் படிக்கவேண்டும் என்று அவருக்கு முழு துனையாக இருப்பவர்கள். இதுவும் பெரிய சாதனை இல்லை. ஏனெனில் பல படிப்பறிவில்லாதவர்கள் இதை செய்துள்ளார்கள்.
இவர் அடிக்கடி சொல்வது ”இறைவன் எனக்கு எல்லாம் சரியாக செய்து கொடுத்துள்ளார். எனக்கு என்ன தேவையோ அதை அவர் சரியான நேரத்தில் தந்துள்ளார்” என்பது தான்.
இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். சிறுவயதில் மற்ற பிள்ளைகளைப்போல இவரும் ஓடியாடி விளையாடியவர்தான். ஆனால் விதி லாரி ரூபத்தில் வந்தது. ஒரு நாள் இவரின் தந்தையின் நன்பரின் லாரியில் சென்றுகொண்டிருக்கும் போது கதவை இவர் சரியாக மூடாததால், லாரியின் வேகத்தில் அது திறந்து இவர் வெளியே வீசி எரியப்பட்டார். அப்போது அந்த வண்டியில் பின்னே இருந்த கம்பி இவரின் காலை தாக்கியது. உடனே அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர்கள் இதை விபத்து என்று கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
அங்கிருந்து வேறு ஒரு மருத்துமனைக்கு எடுத்து செல்லும் முன் அவரின் கால் செல்கள் உயிரிழந்துவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அதை அகற்றிவிட்டார்கள்.
முதலில் இவர் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் மனம் தளரவில்லை. அவருக்கு தன்னை யாராவது பரிதாபமாக பார்த்தால் பிடிக்காது. பெற்றோர் மற்றும் சகோதரியின் உதவியோடு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் IIT-JEE கோசிங் படித்தார். பின்னர் தேர்வில் வெற்றிபெற்று இவர் IIT-Chennai யில் சேர்ந்தார். அங்கு உள்ள மாணவர்களின் உதவியுடன் தன் படிப்பை தொடர்ந்தார். இவரின் சீனியர் மானவர்கள் இவருக்காகவே ஒரு விஷேச wheelchair ஒன்றை செய்து தந்தார்கள். விடாமுயற்சியுடன் படித்து இப்போது கூகுளில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். கால்கள் இல்லை என்று முடங்கிப்போகாமல் உழைத்து வளர்ந்துள்ள இவர் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துவோமாக…
என்றும் அன்புடன்
பாரி. தா
பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை முன்னேற உதவும்....
முத வெட்டு
ReplyDeleteகண்ணை பறிக்கும் லேஅவுட்.. கலக்கல் கலர் பேக் க்ரவுண்ட்.. ம் ம்
ReplyDeleteபதிவு உபயோகமானது.
முயற்சி திருவினையாக்கும் என்பதை நிருபித்திருக்கிறார்
ReplyDeleteஅருமை யான பதிவு .. நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளது.. சரி பார்க்கவும் நேரமிருப்பின் ..
ReplyDeleteஅருமையான தன்னம்பிக்கை பதிவு சூப்பர்...
ReplyDeletenice.,
ReplyDeleteஅருமையான பதிவு....
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html
தன்னம்பிக்கைக்கு மற்றொரு உதாரணம்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
ReplyDelete@யோ வொய்ஸ் (யோகா)....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி......
ReplyDelete@Srinivasan .....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....நிச்சயம் சரி பார்க்கிறேன்....
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ.......வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDelete@வேடந்தாங்கல் - கருன்......வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDelete@பாலா ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும்.
ReplyDelete