நேற்று இரவு வழக்கம் போல சாப்பாடு முடிந்துவிட்டு மடிக்கணிணியை எடுத்துவைத்து உட்கார்ந்தேன். நான் முன்பே சொன்னது போல எங்கள் கல்லூரியில் உள்ள இனையதள வறைமுறை தூதுவர் மூலமாக ஒரு நன்பனிடமிருந்து ஒரு வீடியோ வந்தது. அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சரி அப்படி என்ன அதில் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அதை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். பார்த்தவுடன் அதை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். நிக் வுஜிசிக்(NICK VUJICIC) என்பவரின் வீடியோ அது.
நிக் வுஜிசிக்(NICK VUJICIC):
நிக் வுஜிசிக் பிறக்கும் போதே டெட்ரா அமீலியா(Tetra Amelia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் இல்லாமல் பிறந்தார். நல்ல திடமான உடம்புடன் பிறந்தவர்களுக்கே வாழ்க்கயில் பல பிரச்சனை. அப்படியிருக்க இவரை நினைத்துப்பாருங்கள்.
சிறு வயதில் இவர் வாழ்க்கையை நொந்து பல முறை தற்கொலைக்கு முயன்றவர். பிறகு தன்னை பார்த்து பலர் மாறுவதைக்கண்ட அவர் அந்த முயற்சியை கைவிட்டார். தன்னைபோல உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடிவுசெய்தார்.
வளர்ந்த பிறகு LIFE WITHOUT LIMBS என்னும் தன் ஆர்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பல இடங்களுக்கு சென்று மக்களால் செய்யமுடியும் என்று ஊக்கபடுத்துகிறார். குறிப்பாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடம் முடியும் என்னும் தன்னம்பிக்கையை வளர்த்துவருகிறார்.
மேலும் அவரை பற்றி படிக்க
சினிமா நடிகர்களை பற்றி தெரிந்துகொண்டுள்ள நாம் இதுபோல சாதிக்கும் சிலரை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமே. இவரின் சில கருத்துக்கள் உங்களுக்கு பிடிகாமலிருக்கலாம் ஆனால் கை, கால் இல்லை என்று மனம் தளராமல் சாதிக்கும் இவரின் மனவலுவை நிச்சயம் பாராட்டதான் வேண்டும்…
பிடித்திருந்தால் பலரை சென்றடைய உங்கள் ஓட்டை போடவும். அப்படியே உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டுபோகவும்…
super... vaalththukkal
ReplyDelete@மதுரை சரவணன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDeleteநன்றி நண்பா! உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது!
ReplyDeleteஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்.
ReplyDeleteநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
@sakthistudycentre-கருன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே....
ReplyDeleteநல்ல தன்னம்பிக்கை பதிவு
ReplyDelete//சினிமா நடிகர்களை பற்றி தெரிந்துகொண்டுள்ள நாம் இதுபோல சாதிக்கும் சிலரை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமே//
ReplyDeleteடச்சிங் பன்ச்.............
சாதிக்க நினைக்கும் மனிதர்கள்க்கு உலகம் என்றும் கைகொடுக்கும்...
ReplyDeleteநல்ல பதிவு..
இனி தொடர்ந்து வருவேன்..
@நா.மணிவண்ணன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ...வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி...
ReplyDelete@# கவிதை வீதி # சௌந்தர்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....வருக வருக என உங்களை வரவேற்கின்றேன்....
ReplyDeleteநம்பிக்கையூட்டும் பதிவு.... நன்றி...
ReplyDeleteசாதிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி. சிறந்த பதிவு.
ReplyDelete@Philosophy Prabhakaran..,நன்றி நண்பா....
ReplyDelete@Lakshmi.... வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி...
ReplyDelete