Thursday, January 6, 2011

ஏர்டெலின் மறுஅடையாளச்சூடு(Rebranding) தேவையா?

இது என் தனி ஒருவனின் கருத்து. தங்கள் கருத்து இதில் இருந்து வேறுபடலாம். முதலில் ஏர்டெலை பற்றி ஒரு சிறு பார்வை.


சுனில் பாரதி மிட்டல் 1983ஆம் ஆண்டு பாரதி குழுவை ஆரம்பித்தார். ஜெர்மனின் சிமென்ஸ்(Siemens) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய தேவைக்கான புஷ்(push) பொத்தான் தொலைப்பேசிகளை உற்பத்தி செய்யதுவங்கினார்கள். பின்னர் 1986ஆம் ஆண்டு பாரதி தொலைதொடர்பு நிறுவனம்(Bharthi Telecom Limited) நிறுவப்பட்டது.அவர்கள் தான் இந்தியாவின் முதல் ஃபக்ஸ்(Fax) இயந்திரத்தை தயார்செய்தவர்கள்.

பின்னர் 1995ஆம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் தங்கள் செவையை துவங்கினார்கள். படிப்படியாக மற்ற நிறுவனங்களை வாங்கியும், சொந்தமாக துவங்கியும் இந்தியா முழுவதிலும் தங்கள் நிறுவனத்தை வளர்த்தார்கள். இப்பொழுது இந்தியாவில் முதலாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் 3G அறிமுகமானது (இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று எனக்கு தெரியவில்லை. விரைவில் செய்திகளை எதிர்பார்கிறேன் என்பது வேறு செய்தி). சமிபகாலமாக பல நிறுவனங்கள் தங்களை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டுசெல்ல அவர்களின் நிறுவனங்களை மறுஅடையாளச்சூடு(Rebranding) செய்தார்கள்.

மறுஅடையாளச்சூடு(Rebranding) என்பது தங்கள் நிறுவனங்களின் பெயர், நிறுவனத்தின் குறி(logo) மாற்றுதல், டக்(tag line) மாற்றுதல் போன்ற காரியங்களை செய்து மக்கள் மத்தியில் தங்கள் பெயரின் எண்ணத்தை மாற்ற செய்வது. பொதுவாக வர்த்தகத்தில் தொல்வியோ அல்லது தங்கள் நிறுவனங்களின் பெயரில் மக்கள் மத்தியில் உள்ள எண்ணத்தை மாற்றவே இதை உபயோகிப்பார்கள்.

ஏர்டெலுக்கு தேவையா?
ஏர்டெல் இந்திய மக்கள் இடையில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம். அதற்கு பல சாட்சிகள். அவர்கள் தான் இந்தியாவில் நெம்பர் 1. இந்த நிலையில் உலக அளவிற்கு செல்ல திட்டமிட்ட அவர்கள் ஆப்பிரிகாவில் zoin telecom என்னும் நிறுவனத்தை வாங்கினார்கள். குறிப்பு: zoin telecom ஆப்பிரிகாவில் 10 நாடுகளில் முதல் இடத்திலும், 5 நாடுகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் அவர்களுக்கு மறுஅடையாளச்சூடு(Rebranding) தேவையா?? 300 கோடி செலவு செய்ய அவசியமா?.

அவர்கள் இந்தியாவில் பல பிரச்சனைகள். ஒழுங்கான சேவைஇல்லை. பல நேரங்களில் network பிரச்சனைகள். ஒழுங்கான வாடிக்கையாளர் சேவை இல்லை என்று மக்கள் குறை. Technical பிரச்சனைகள். தேவை இல்லாமல் 300 கோடி சேலவு செய்ததற்கு குறைகளில் அக்கறை காட்டியிருந்தால் அவர்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ந்திருக்கும்.
மேலும் அவர்களின் புதிய குறி(லொகொ-logo) மற்ற நிறுவனங்களின் இருந்து காப்பி அடித்ததாக ஒரு கருத்து. கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

பல கோடிகள் செலவு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் அல்லவா. இந்தியாவில் தொலைதொடர்பு மிக வேகமாக வளர்கிற்து.

தற்பொழுது உள்ளது பொல இரண்டு மூன்று மடங்கு வளர்ச்சி இருக்க





வாய்ப்பு உள்ள நிலையில் ஏர்டெலின் இந்த முயற்சி தேவையா?. என் கருத்து அவர்கள்  மறுஅடையாளச்சூடு(Rebranding) செய்ததற்கு பதிலாக அவர்களின் தற்போதய சேவையை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சிகள் எடுத்திருக்கலாம். 

24 comments:

  1. அட வந்து படிச்சிட்டு அப்படியே போனா எப்படி... உங்க கருத்த அப்படியே சொல்லிட்டு போங்க.... நான் முன்னேற உதவியா இருக்குமுல.....கொஞ்சம் மேல சொல்லிட்டு போங்க.....
    //

    கேட்டதால சொல்றேன்...
    கவர்ன்மெண்டே சொல்லியிருக்கு.. ”தகுந்த இடைவெளி விடவும்”னு

    அதனாலே..


    ப்ளீஸ்..
    ப்ளீஸ்..

    ஒரு பாரா-க்கும் அடுத்த பாரக்கும் இடைவெளி விடுங்க சார்..

    ப்ளீஸ்....

    ReplyDelete
  2. @பட்டாபட்டி....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நிச்சயமா சத்தியமா....இனிமே இடைவெளி விட்டுவிடுகிறேன் சார்....

    ReplyDelete
  3. இப்ப படிக்க ஏதுவா இருக்கு பாஸ்..

    தொடர்ந்து கலக்குங்க..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அத எல்லாம் அவனுங்க எங்க பண்ண போறானுங்க விளங்காத பசங்க, பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  5. சிறந்த அலசல் நண்பரே.. பிரபாகர் மூலமே தங்கள் தளத்தில் இருக்கிறேன்.. இந்தியாவின் நம்பர்.1னாக இருக்கும் ஏர்டெல் இதுபோன்ற விசயங்களை யோசிக்காமல் இருக்காது என நினைக்கிறேன்.. அவர்களின் இம்மாற்றத்துக்கு வேறு ஏதாவது உள்காரணம் இருக்ககூடும் என்பது என் கருத்து.. அது இருக்கட்டும் நீங்க இவ்வளவு கஷ்டபட்டு தேடி கண்டுபுடிச்சு எழுதுனதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. உங்க பதிவுலகம் ரொம்ப பச்சையா இருக்கு... கலர் மட்டும் தாங்கோ..!!!

    ReplyDelete
  7. தோழர் பிரபா தங்கள் பதிவை பற்றி அறிமுகம் செய்ததன் விளைவாக இத்தளத்தில் நுழைந்தேன். இது போன்ற சில தகவல் பதிவுகளை பிரபல பத்திரிக்கைகள் மற்றும் நாளேடுகள் அனுமதியின்றி 'அபேஸ்' செய்கின்றன. பாரி, உஷார்!!!

    ReplyDelete
  8. அட்லீஸ்ட் மெசேஜ் அனுப்பி அடிக்கிற கொள்ளையாவது குறைச்சி இருக்கலாம் என்ன நான் சொல்றது , நேரடியாகவே நிறைய பாதிக்கிறவன் நான். ஏன்னா airtell கஸ்டமர் நான்

    ReplyDelete
  9. @ பட்டாபட்டி....,இரவு வானம் , தம்பி கூர்மதியன், சிவகுமார் , bala ...அனைவரின் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி....

    @தம்பி கூர்மதியன்.. யோசிச்சு இருப்பாங்க..இருந்தாலும் அவங்களோட குறைய முதல்ல சரி செய்திருக்களாம்...

    @சிவகுமார்...எச்சரிக்கைக்கு நன்றி...

    @bala... நானும் தான் பாஸ்..ரொம்பவே...

    ReplyDelete
  10. அருமையான அலசல் நண்பா..
    இலங்கையிலும் ஏர்டெல் தனது சேவையை வழங்கி வருகிறது.ஆனாலும்
    அதன் சேவை மந்தகதியே.கவரேஜ் சுத்தமாக இல்லை
    வீட்டு மொட்ட மாடியோ அல்லது மரத்தின் மேலே ஏற வேண்டும் கவரேஜ் பெற்றுகொள்ள..

    என்ன கொடுமை சார்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நண்பரே ஒவ்வொரு பதிவும் போடும் பொழுதும் அவ் பதிவின் முதல் பந்தியை மட்டும் போட்டு விட்டு அதன் மற்றைய பந்தியை Break பண்ணுங்கள்.பதிவின் நீளத்தால் வாசகர்களின் வருகை குறைவடைய வாய்ப்புப்புள்ளது பாரி

    ReplyDelete
  13. ஹ்ம்ம் ....இன்று ஒரே நாளில் நிறைய பாலோவர்ஸ் வந்துட்டாங்க இனிமேல் கலக்குங்க .......
    வாழ்த்துக்கள் .............

    ReplyDelete
  14. @டிலீப் , அஞ்சா சிங்கம் ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...@டிலீப்...தங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி...@அஞ்சா சிங்கம்.. எல்லாம் பிரபாகரன் செயல்...

    ReplyDelete
  15. மறுஅடையாளச்சூடு(Rebranding) செய்ததற்கு பதிலாக அவர்களின் தற்போதய சேவையை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சிகள் எடுத்திருக்கலாம்.//


    customer care is too worst in airtel. This is from my personal experience.

    ReplyDelete
  16. அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  17. இங்கே பின்தொடர்பவர்களாக இணைந்திருப்பவர்களை பதிலுக்கு பின்தொடர மறந்துவிடாதே... மேலும் அவர்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் போடவும்... இது கொஞ்சம் கடினமான செயல்தான்... ஆனால் அவசியமானது...

    ReplyDelete
  18. @டக்கால்டி ,இளம் தூயவன்....வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.....
    @Philosophy Prabhakaran..நிச்சயம் நண்பா.....

    ReplyDelete
  19. நல்லா எழுதுறீங்க!!!!!!

    தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  20. @ஆமினா....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  21. நல்ல ஆராய்ச்சி மற்றும் அலசல்!
    வாழ்த்துக்கள், பாரி!

    ReplyDelete
  22. @NIZAMUDEEN..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  23. I admire this article for the well-researched content and excellent wording. I got so involved in this material that I couldn’t stop reading. I am impressed with your work and skill. Thank you so much. new company names

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி