Monday, January 31, 2011

பதிவுலகின் எழுச்சி-நம்மால் முடியும்


என் கடந்தப்பதிவில் (தமிழன்ஒரு புரியாத புதிர்திரு. இக்பால் செல்வன் அவர்கள் கருத்துரையில் ஒன்று சொல்லியிருந்தார்.


இக்கூட்டத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைக்க வேண்டும் !!! புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் ! ஊழல் செய்தவனை கோவணத்தோடு நாட்டை விட்டு விரட்ட வேண்டும் !!!துனிசியா எகிப்தில் நடுவர்க்க மக்கள் புரட்சி அரசியல் சாராதது,உண்மையானது, எந்த மதம் மொழி இனம் சாராதது, அப்படியான ஒருக் கூட்டம் தமிழகத்தில் சேருமா??? அதற்கு வலைப்பதிவர் எழுத்தில் பேச்சிலும் சொல்லிலும் செயலிலும் என்னச் செய்யப் போகின்றோம் >>>

பேனாவின் முனை வாளைவிடக்கூர்மையானது என்று சொல்வார்கள். எழுதி சாதித்தவர்கள் பலர் உண்டு.

பலரின் அரசியல் வெற்றிக்கு பேனாவே காரணமாக இருந்திருக்கிறது. இப்பொழுது அந்த பேனாவின் புதுவடிவம் தான் நம் வலைப்பூ. நாளுக்கு நாள் இதில் சேருபவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது. மேலும் பலர் வலைப்பூக்களை பின்தொடர்கிறார்கள். தவறாமல் படிக்கிறார்கள். பதிவர்களின் கருத்து அவர்களுக்கு ஒரு மாற்றத்தை தந்திருக்கிறது. குறிப்பாக மீனவர்களுக்காக நம்மவர்கள் போராட்டம் ஒரு மிகப்பெரிய அலையை எழுப்பியுள்ளது. இது நின்றுவிடக்கூடாது. தொடரவேண்டும்.

எந்த ஒருவரின் வெற்றியையும் தீர்மானிக்கும் சக்தியாக வலைப்பூக்கள் உள்ளது. ஒரு படத்தின் வெற்றி கூட வலைப்பூவால் திர்மானிக்கமுடியும். அதே போல் தேர்தலிலும் சாதிக்கமுடியும். அரசியல்வாதிகளின் போலி முகமூடிகளை நாம் கழற்றி எறிவோம். சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க நினைப்பவர்களை மக்களிடமிருந்து ஒதுக்கவேண்டும். அவர்களை ஒடுக்கவேண்டும். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரியவைக்கவேண்டும். அப்படி நடந்தால் திரு. இக்பால் செல்வன் சொன்னது போல ஒரு மாற்றத்தை நம்மால் உருவாக்கமுடியும்.

கருத்து பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்.

4 comments:

  1. மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம் ! நம் என்பது சுயத்தை மட்டுமின்றி ! நம் குடும்பம் ! உறவு ! உற்றார் ! சுற்றார் ! என அடுத்தடுத்து உள்ள வட்டங்களுக்கு பெரிதாக்குவோம் ! ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு ! துனிசியர் இதனை நிருபித்து விட்டார்கள் ! அவர்களால் முடியும் என்றால் நம்மால் முடியாதா என்ன? எனது சிறுக் கருத்தை கோட் செய்தமைக்கு நன்றி பாரி !!! DUPLICATING THE THOUGHTS STRENGTHEN US !!!

    ReplyDelete
  2. அணில் போல நம் முயற்சி சிறு மாற்றத்தை கொண்டுவந்தாலே போதும்.

    ReplyDelete
  3. @இக்பால் செல்வன்......வருகைக்கு நன்றி...நிச்சயம் செய்வோம்.
    @Philosophy Prabhakaran... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா...தொடருவோம்....
    @விக்கி உலகம்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நிச்சயம் கொண்டு வருவோம்...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி