Monday, January 17, 2011

சிறுவனும் நாய்குட்டியும்

இந்த கதை எழுத எனக்கு உதவிய நண்பன் அருண்குமாருக்கு நன்றி

டைகர் நாய் கடை. இது அந்த ஊரில் நாய்கள் விற்பனை செய்யும் கடைகளிலேயே மிகப்பெரிய கடை. அதே போல் அதிகமாக விற்பனை நடக்கும் இடமும் அதுதான். எல்லா விதமான நாய்களும் அங்கு கிடைக்கும். இல்லை என்றாலும் சொன்னால் வெளியே இருந்து வாங்கித்தருவார்கள்.

     அன்று வெளியூர்ல இருந்து அப்படி சில நாய்கள் வந்திருந்தது. அதில் ஒரு நாய் கீழே இறக்கம் செய்யும் போது வெளியே ஓட முயற்சி செய்து தன் காலை உடைத்துக்கொண்டது. கடைகாரர் முயற்சி செய்தும் சரி செய்ய முடியவில்லை. விட்டுவிட்டார்.

     சில நாட்கள் சென்றது. அந்த ஊனமான சின்ன நாயை மட்டும் வாங்க யாரும் வரவில்லை. அது பார்பதற்கு அழகாக இருந்தாலும் கால் உடைந்து உள்ளதால் யாரும் வாங்க முன்வரவில்லை.

     அன்று ஞாயிறுக்கிழமை. வழக்கம் போல கடைக்காரர் கடையை திறந்தார். கூட்டம் வர ஆரம்பித்தது. அப்பொழுது ஒரு சிறுவன் அந்த கடைக்கு வந்தான். எல்லா நாய் குட்டிகளையும் பார்த்துவிட்டு அந்த அடிபட்ட நாய் குட்டி தான் வேண்டும் என்றான். கடைக்காரர் அந்த நாய்க்கு கால் உடைந்துள்ளது என்று சொல்லியும் பிடிவாதமாக அதுதான் வேண்டும் என்று அந்த சிறுவன் பிடிவாதமாக இருந்தான். கடைக்காரரும் தந்துவிட்டார்.

     அந்த குட்டி நாயை வாங்கிக்கொண்டு அந்த சிறுவன் வெளியே நடக்கத்துவங்கினான். அப்பொழுதுதான் கடைகாரர் கவனித்தார் அந்த சிறுவனை. அவன் ஒரு காலை தாங்கித்தாங்கி சாலையில் நடந்துக்கொண்டிருந்தான்.


7 comments:

  1. எங்கோ கேட்ட ஞாபகம்...
    எழுத்து நடைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.. கருத்து ஜூப்பர்..

    ReplyDelete
  2. சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் ரத்தின சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

    ReplyDelete
  3. எங்க கடை பக்கம் வந்த கருத்து எதுவும் சொல்லமாட்டீங்களா?

    ReplyDelete
  4. பதிவுலக நண்பர்களே..
    அருமையான பதிவு
    அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete
  5. @தம்பி கூர்மதியன், sakthistudycentre-கருன் ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    @sakthistudycentre-கருன்... அட என்ன அப்பிடி சொல்லிட்டீங்க...நாங்க ரெகுலர் கஸ்டமர் பாஸ்...கருத்து தான் சொல்றதில்ல...இனி கண்டிப்பா பொட்டுவோம் பாஸ்...

    ReplyDelete
  6. // to allege - குற்றசாட்டு
    Bricklayer - கொத்தனார்
    Brainstorm - சிந்தனை அலசல் //

    நல்லா இருக்கு... உங்க டீடைல்... தொடருங்க...

    ReplyDelete
  7. @Philosophy Prabhakaran...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி