Friday, January 7, 2011

காதல் என்றால் என்ன

துவங்கும் முன்பு நண்பர் பிரபாகரனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை பற்றி ஒரு தனி பதிவே போட்டவர்.

நான் பல நாளா இந்த கவிதை எழுதுபவர்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும். என்ன யோசித்தாலும் வராது. சரி நான் ஞானசூன்யம் என்று முடிவு செய்துவிட்டேன். சரி சும்மா எழுதி தான் பார்ப்போமே என்று சில வரிகளை எழுதினேன். அட ஆயிரம் பேர கொன்னாதான் அரை வைத்தியன். நாமளும் கொஞ்சம் கவிதையை கொன்னு எப்படியாவது ஒரு கவிஞன் ஆக முயற்சி செய்யலாம்னு முடிவு செய்து இந்த பதிவ பொட்டிருக்கேன்.

சரி கவிதைக்கு போவோம்


காதல் என்றால் என்ன
என் நண்பனிடம் கேட்டேன்
அது சொன்னால் புரியாது உணரவேண்டும் என்றான்
முயற்சி செய்தேன் முடியவில்லை
மீண்டும் கேட்டேன் அவனிடம்
காதல் எப்படி இருக்கும் என்று
அதற்கு உருவம் இல்லை உணர்வு மட்டுமே என்றான்
அது எப்படி வரும் என்றேன்
ஒருவரைப் பார்த்தால் தானாக வரும் என்றான்
உத்துப்பார்த்தேன்; முறைத்துப்பார்த்தேன்
மேலே பார்த்தேன்; கிழே பார்த்தேன்
வரவில்லை எனக்கு
மீண்டும் அவனிடம் சென்றேன்
இம்முறை என்னை திட்டிவிட்டான்; என்னை
உணர்ச்சியில்லாதவன் என்று கூறிவிட்டான்
எத்தனை முயன்றும் புரியவில்லை
காதல் எனக்கு தெரியவில்லை
அது என்ன என்றும் நான் அறியவில்லை

அட ஒரு வழியா எழுதிவிட்டேன்… கவிதை எழுதறதுல கன்னி முயற்சி… அதனால படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க…    

7 comments:

  1. காதல் என்றால் என்ன
    என் நண்பனிடம் கேட்டேன்
    அது சொன்னால் புரியாது உணரவேண்டும் என்றான்
    முயற்சி செய்தேன் முடியவில்லை
    மீண்டும் கேட்டேன் அவனிடம்
    காதல் எப்படி இருக்கும்
    அதற்கு உருவம் இல்லை உணர்வு மட்டுமே
    அது எப்படி வரும்
    ஒருவரைப் பார்த்தால் தானாக வரும்
    உத்துப்பார்த்தேன்; முறைத்துப்பார்த்தேன்
    மேலே பார்த்தேன்; கிழே பார்த்தேன்
    வரவில்லை எனக்கு
    மீண்டும் அவனிடம்
    இம்முறை என்னை திட்டிவிட்டான்; என்னை
    உணர்ச்சியில்லாதவன் என்று கூறிவிட்டான்
    எத்தனை முயன்றும் புரியவில்லை
    காதல் எனக்கு தெரியவில்லை
    அது என்ன என்றும் நான் அறியவில்லை...//////////////////


    மீண்டும் கேட்டேன் அவனிடம்
    வயது வரவேண்டும் என்றான்.
    இடுப்பில் இருந்து என்னை இறக்கியபடி......................

    ReplyDelete
  2. மொட்டையாக இருப்பது போல உணர்கிறேன்.. என்னமோ எங்கோ இடிக்கிறது.. அஞ்சா சிங்கத்தின் முடிவு பாராட்டும்படியாக இருக்கிறது.. ஆனால் அவரது படைப்பில் நண்பனுக்கு பதில் வேறு உபயோகிக்க வேண்டும்.. ஆனால் உங்களுக்குள்ளும் திறமை இருக்கிறது பச்ச.. தகுந்த வரி அமைப்பு, குறியீடுகளில் கவனம் செலுத்தினால் சிறந்த கவிக்கான வாய்ப்பு உண்டு.. நமக்கு விமர்சிக்க தான் தெரியும்.. உடனே நீ பெரிய இவனா இவ்வளவு சொல்றன்னு நீங்க நினைக்கலாம்.. தட்ஸ் ஆல் இன் கேம்..

    என்னோட காதல் கவிதை இது.. கொஞ்சம் பாருங்க.. http://kirukaninkirukals.blogspot.com/2010/11/blog-post_26.html.. மொக்கையா இருந்தா சாரி..

    ReplyDelete
  3. @அஞ்சா சிங்கம் ,தம்பி கூர்மதியன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
    @அஞ்சா சிங்கம்...நீங்க பெரிய கவிஞரா இருப்பிங்க போல...
    @தம்பி கூர்மதியன்...விமர்சனத்திற்கு நன்றி நண்பரே....மாற்றிக்கொள்கிறேன்... உங்க கவிதைய பாத்தேன்...நல்ல இருக்குங்க.....

    ReplyDelete
  4. நீ பார்த்தது மொக்கை பிகரா இருக்கும் மச்சி... அதான் காதல் வரலை... வேற ஏதாவது நல்ல பிகரா பார்த்து ட்ரை பண்ணு...

    ReplyDelete
  5. @ Philosophy Prabhakaran, பட்டாபட்டி.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    @Philosophy Prabhakaran..இருக்கலாம் நண்பா..

    @பட்டாபட்டி.... கிண்டல் பன்றிங்க போல....முடிவு பன்னிட்டேன் பாஸ்...நம்க்கும் கவிதைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது

    ReplyDelete
  6. //அட ஆயிரம் பேர கொன்னாதான் அரை வைத்தியன். நா//
    சீக்கிரமே பெரிய ஆளா வருவீங்க ;)

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி