Wednesday, January 5, 2011

முதியோர் இல்லம்-சிறுகதை

காலை எழுந்தவுடன் ராமு கோபமானான். அன்றும் அவனின் அம்மாவிற்கும் மனைவிக்கும் சண்டை. காலையில் சூரிய ஒளி தாக்கி அவன் எழுந்ததை விட சத்தத்தில் எழுந்தது தான் அதிகம். அது தினமும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. என்ன செய்வது என்று தெரிய வில்லை அவனுக்கு.
ராமுவின் மனைவியின் பெயர் சீதா. அவள் அன்று இரவு தன் கணவனிடம் அவனின் அம்மாவை முதியோர் இல்லதில் சேர்த்து விட சொன்னாள். முதலில் மறுத்த ராமு பின்பு தன் மனைவியின் வற்புறுத்தலால் ஒத்துக்கொண்டான்.
மறுநாள் காலையில் அவனின் அம்மாவின்ன் அதை சொன்னான். அவள் உடைந்தேபோனாள். தன் மகனுக்காக் அவளின் வாழ்க்கையை முழுவதாக அர்பணித்தவள். அவனுக்காகவே வாழ்ந்தவள். வேண்டாம் என்று கெஞ்சினாள். பலன் இல்லை.
அன்று மாலையிலேயே அது நடந்தது. ராமு தன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தான்.
மூன்று நாட்களுக்கு பிறகு ராமு முதியோர் இல்லம் வந்து தன் தாயை வீட்டிற்கு அழைத்துச்சென்றான். அவளுக்கு ஒன்னும் புரியவில்லை. சில நாட்களுக்கும் தனை விட்டுச்சென்ற மகனே வந்து அழைத்து செல்கிறானே என்று.
விட்டிற்கு வந்தவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. எப்பொழுதும் தன்னுடன் சண்டை போடும் மருமகள் இப்பொழுது கனிவுடன் நடந்த்துகொள்கிறாள். அன்புடன் பேசுகிறாள். இந்த திடிர் மாற்றம் ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்தாள். கடவுளுக்கு நன்றி கூறினாள்.
ஆனால் உண்மையில் நடந்தது. அந்த நாளுக்கு முன்னால் இரவில் ராமுவும் சீதாவும் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களின் பத்து வயது மகன் ரவி வந்தான். அவனின் பெற்றோரிடம் சென்று அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று சொன்னான். அவனின் தந்தையும் கேளு என்று சொன்னான். ரவி கேட்ட கேள்வி. “அப்பா நீங்களும் அம்மாவும் வயசான பிறகு, எனக்கு கல்யாணமான பிறகு உங்களையும் அம்மாவையும் நான் முதியோர் இல்லதில் சேர்த்துடனுமாபா?” 

17 comments:

  1. pls visit :http://ragariz.blogspot.com/2010/12/short-story-from-rahim-gazali.html

    ReplyDelete
  2. @ரஹீம் கஸாலி... மன்னிக்கவும்...இது தற்செயலாக நடந்தது.....

    ReplyDelete
  3. கதையின் கான்செப்ட் மட்டும்தானே ஒன்று மற்றபடி ரஹீம் கதையும் இதுவும் வேற வேற தானே...

    ReplyDelete
  4. ஒரே களம். வேறு வேறு விதமாய்.

    ReplyDelete
  5. @Philosophy Prabhakaran...ஆதரவுக்கு நன்றி நண்பா...
    @எல் கே... வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...இப்பொழுதெல்லாம் திரைப்படமே அவ்வாறு தானே உள்ளது...உண்மையில் அவர் எழுதியதை நான் படிக்கவேஇல்லை...

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
    >>>>>
    உதவுங்கள்...

    http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

    காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  7. கதை நன்றாகவுள்ளது.
    பதிவுலகில் சிறக்க வாழ்த்துகிறேன்
    Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்

    ReplyDelete
  8. @விக்கி உலகம் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. தங்கள் லின்கை பார்த்தேன்... தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.... நான் வேலூரை சேர்ந்தவன்.. அதனால் சென்னையை பற்றி தெரியவில்லை...மேலும் இப்பொழுது நான் கேரளாவில்..

    @டிலீப் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி....

    ReplyDelete
  9. நல்லா எழதறீங்க பச்சைத்தமிழன் :)
    தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
  10. @பிரபு எம்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  11. நண்பரே மன்னிப்பெல்லாம் வேண்டாம். நான் என் கதையை பார்க்கத்தான் சொன்னேன். வேறெதுவும் சொல்லவில்லை. ஒரே கரு. பார்வைகள் வேறுவேறு....நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பதிவுலகில் சிறக்க வாழ்த்துகிறேன் :)
    http://harininathan.blogspot.com/

    ReplyDelete
  13. நல்லா எழுதுகிறீர்கள். வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. @ரஹீம் கஸாலி..நன்றி...
    @Harini Nathan, பாரத்... பாரதி... வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. @நா.மணிவண்ணன்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  17. //“அப்பா நீங்களும் அம்மாவும் வயசான பிறகு, எனக்கு கல்யாணமான பிறகு உங்களையும் அம்மாவையும் நான் முதியோர் இல்லதில் சேர்த்துடனுமாபா?” //

    Thunder on head!

    Useful Post for the nuclear family -younger generation.,
    (Sentiment.., tears.........drops!)
    Dear All,
    Pray God, in future, this story hasn't a real one in our Family.
    Keep & Save our Parents and culture!

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி