Friday, February 25, 2011

Operation ஆரியபட்டா



நான் தூக்கத்தில் கண்ட கனவில் என் கற்பனையையும் சேர்த்து இப்பொழுது உங்கள் முன் கதையாக.

2040 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அந்த நிகழ்வு நடந்தால் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய நாடாக மாறும். அழிக்க முடியாத, மறுக்க முடியாத சக்தியாக ஆகும். பல நாடுகள் இது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு பொறாமை இந்தியா உலக அளவில் மிகச்சிறந்த நாடாக மாறிவிடும் என்று.

அந்த நிகழ்வு, நம் பூமியை போலவே உள்ள வேறு கிரகத்திற்கு நாம் விண்கலம் அனுப்புகிறோம். அந்த விண்கலத்தின் பெயர் ஆரியபட்டா. அதுவும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான விண்கலம் மூலமாக நம் விஞ்ஞானிகள் அங்கு செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக சில நாடுகள் இந்த முயற்சி எடுத்தும் அது தோல்வியில் போய் முடிந்துவிட்டது. அதனால் அந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் முயற்சியும் தோல்வியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் இந்தியாவும் 20 ஆயிரம் கோடி செலவு செய்து அந்த விண்கலத்தை தயார் செய்துகொண்டிருக்கிரார்கள். அந்த விண்கலத்தை தயார் செய்ய எட்டு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படுகிறார்கள். அவர்களில் இருவர் இயற்பியல் வல்லுனர்கள், இருவர் வானவியலில் வல்லுனர்கள், இருவர் பொறியியல் வல்லுனர்கள், ஒரு கணித வல்லுனர். இவர்களுக்கு ஒரு தலைவர்.

பணிகள் சரியாக சென்றுகொண்டிருந்தது. இரவு பகல் எனப்பார்க்காமல் உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வருட உழைப்பிற்கு பிறகு அனைத்தும் செய்தாகிவிட்டது. எல்லா பகுதிகளும் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும் பணி நடந்தது. அதுவும் முடிந்தவுடன் மிக பெருமையாக இந்திய அரசு அந்த விண்கலத்தை விண்ணில் ஏவ ஆகஸ்டு 15ஆம் தேதியை முடிவு செய்தது. இந்தியாவைவிட மற்ற நாடுகள் இதை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.  இதில் மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் பயணம் செய்கிறார்கள்.

எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. உலகமே இந்தியாவை பார்த்துக்கொண்டிருந்தது. பிரதமர் தன்னுடைய சுதந்திர தின விழா உரையை முடித்துவிட்டு அங்கிருந்த படியே பெருமையாக விண்கலத்தை ஏவ signal  கொடுக்கிறார்.

விண்கலமும் புறப்பட்டு விட்டது. முதல் கட்டத்தை தாண்டியது ஆனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடந்தார்கள். அப்பொழுது அந்த நிகழ்வு நடந்தது........
                                        தொடரும்......
*****************************************************************************************

என்றும் அன்புடன்,
பாரி.தா

பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள்......

19 comments:

  1. ஆரியபட்டா ஒரு சிறந்த கணிதமேதை ..அவருடைய பெயரை வைத்திருக்கிறீர்கள் ..நல்ல கதை ..தொடருங்கள்
    நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

    ReplyDelete
  2. ம் ம் கல்கியில் அமரர் சுஜாதா இதே பெயரில் ஒரு தொடர் எழுதினார் என நினைக்கிறேன். அதே போல் ஹிட் ஆக வாழ்த்துகிறேன் சார்

    ReplyDelete
  3. அன்பின் பாரி - நல்ல துவக்கம் - தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. நல்ல முயற்சி, சஸ்பென்சை ஏற்றுங்கள்

    ReplyDelete
  5. தொடருங்கள்....

    எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்...

    ReplyDelete
  6. நல்ல கதை ..தொடருங்கள் ....

    ReplyDelete
  7. see.,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  8. @S.Sudharshan.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நானும் அவரை மனதில் நினைத்து தான் இந்த பெயரை வைத்தேன்....

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....அய்யோ இவ்வளவு பெரிய பாராட்டா...

    ReplyDelete
  10. @cheena (சீனா)...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..

    ReplyDelete
  11. @balak.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ...முயற்சி செய்கிறேன் நண்பரே....

    ReplyDelete
  12. @பாலா...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  13. @வேடந்தாங்கல் - கருன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.......

    ReplyDelete
  14. நல்ல துவக்கம். தொடருங்கள்.

    ReplyDelete
  15. இதுவரை எழுதிய இடுகைகளில் இதை சிறந்தது என்று கூறலாம்...

    ReplyDelete
  16. @Lakshmi...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  17. @Philosophy Prabhakaran....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா....

    ReplyDelete
  18. Nalla thogukireergal valaichcharaththil... PARATTUKKAL.

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி