Monday, February 14, 2011

வகுப்பறையில் இன்று


"Rich get richer and poor get poorer" - இது சிவாஜி படத்தில் ரஜினி அவர்கள் பேசிய வசனம். அவர் மட்டும் அல்ல நான் படிக்கும் கல்லூரியில் வேலை செய்யும் ஒரு பேராசிரியரும்  சொல்லும் வசனமும் கூட.

இது பாடங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனிலும் அவர் பல முறை கூரியவை. அவர் எங்களுக்கு பாடங்கள் கற்பித்ததைவிட வெளியெ போன பிறகும் நாங்கள் வாழும் வாழ்க்கையை பற்றி கூறியது அதிகம்.

குறிப்பாக அவர் இன்று(14-2) வகுப்பறையில் அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

முடியாதவர்களை பார்த்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்வார்களா என்று நாம் எதிர்பார்கிறோமே ஒழிய நாம் உதவுவதில்லை.(அதற்கு அவரது வாழ்விலேயே ஒரு உதாரணம் சொன்னார்.) அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

     நாமெல்லாம் 2020இல் இந்தியா வல்லரசாகும், 2050 பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலாவதாக இருக்கும் இரண்டாவதாக இருக்கும் என்று பேசுகிறோம். அதற்கான முயற்சிகளை செய்வதாக அரசாங்கள் சொல்கிறது. ஆனால் இன்றைய நிலைமையை மறந்துவிடுகிறோம். தினமும் இரண்டு வேலை உணவில்லாமல் பலர் உள்ளார்கள். அவர்களை மறந்து விடுறோம். அவர்களுக்கு நம் உதவி தேவை.

     நாம் அரசாங்கத்திற்கு கட்டிய வரிகள் நமக்கு நல்லதை செய்ததைவிட பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளூக்கு சென்றது அதிகம். அவர்களுக்கு நல்லது செய்தது அதிகம். நாம் மிகச்சிறிய அளவில் தவறு செய்தால் தண்டிக்க ஆயிரம் சட்டங்கள். அதுவும் உடனுக்குடன் பெரும்பாலும் கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் ஊழல், லஞ்சம் செய்யும் ஆரசியல் வியாதிகளை தண்டிக்க பல தடைகள். அவர்களைக்காக்க பல பெருந்தலைகள் பல வழிகளில் செயல்படுகிறார்கள்.

     அவர் இன்று சொன்ன ஒவ்வொரு கருத்தும் உண்மை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்தால் பலருக்கு சென்றடைய உதவுங்கள். அப்படியே உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்கள்.
      

12 comments:

  1. அவர் சொன்னது மிக மிக சரி ... நன்றி :)

    ReplyDelete
  2. @S.Sudharshan...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  3. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. @Philosophy Prabhakaran....நான் இன்னமும் மாணவன் தான் பிரபா.....

    ReplyDelete
  5. @sakthistudycentre-கருன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  6. @நா.மணிவண்ணன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  7. நாம் அரசாங்கத்திற்கு கட்டிய வரிகள் நமக்கு நல்லதை செய்ததைவிட பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளூக்கு சென்றது அதிகம்.//
    TRUE!!

    ReplyDelete
  8. @இராஜராஜேஸ்வரி .....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  9. @மதுரை சரவணன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி