Tuesday, December 28, 2010

ரயிலில் ஒரு ஆங்கில அலப்பறை

மீண்டும் ஒரு ரயில் பதிவு. முன்பு பல முறை ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒன்றும் தோன்றியது இல்லை. ஆனால் பதிவுலகில் என் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது முதல் எனக்கு பல எண்ணங்கள் தோன்றுகிறது.
ஆரம்பிக்கும் முன் எனக்கொரு சந்தேகம். ஆங்கிலத்தில் பேசுவதால் நம் அந்தஸ்தோ அல்லது மதிப்போ உயருமா? இல்லை மற்றவர்கள் நம்மை உயர்வாக மதிப்பார்களா? அப்படியெனில் நாம் என் வெள்ளையனை விரட்டினோம்? நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என்று சொல்லவில்லை ஆனால் தேவை இல்லாத இடத்தில அது தேவையா? இப்பொழுதே இந்த பதிவை பற்றி தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு எனக்கு இது இரண்டாவது ரயில் பயணம். இந்த முறை தட்கல்(tatkal) முறையில் டிக்கெட்டை ரிசெர்வ் செய்த நான் ரயில் வண்டி வந்தவுடன் ஏறி அமர்ந்துவிட்டேன். என்னுடன் அதே பெட்டியில் மற்றொரு குடும்பமும் பயணம் செய்துகொண்டிருந்தது. அதில் ஒரு அம்மா இரண்டு மகன்கள் அவர்களில் பாட்டி இருந்தனர்.
ஆரம்பம் முதல் அவர்கள் தமிங்கலத்தில் (அதாங்க தமிழ் + ஆங்கிலம்) பேசிக்கொண்டிருந்தார்கள்எதுக்கு எடுத்தாலும் அந்த பெண்மணி தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார். நான் மட்டும் அல்ல அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் அவர்களை ஒருமாரியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனால் அவர்கள் அதை பற்றி கவலை கொள்ளவில்லைஅந்த நேரம் ரயிலில் சில தின்பண்டங்களை (வடை, பழம்பூரி போன்றவை) விற்றுக்கொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த பெண்மணி எதோ தீண்டதகாததை பார்ப்பது போல சீன்போடுக்கொண்டிருந்தார். மேலும் அவரின் மகன்களிடமும் அதை பற்றி கேவலமாக பேசிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல என்னால் அந்த அளப்பரையை தாங்க முடியவில்லை. ஒருவர் ஒபெனாகவே அவர்களை கிண்டல் செய்தார். அவரை பார்த்து முறைத்து விட்டு மீண்டும் தங்கள் வேலையை (அட தமிங்கலத்தில் பேசுறதை தான் சொன்னேன்) தொடர்ந்தார்கள். இதற்கு நடுவில் யாருக்கோ போன் செய்து can you hear me ? நான் பேசுறது கேக்குதா? என்று மேஜர் சுந்தர்ராஜன் போல எல்லாவற்றையும் தமிழில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஒரு முறை பேசினார். உச்ச கட்டமாக ஒன்று நடந்தது. அவரின் மகன் வடையை கேட்டான் அதற்கு அந்த பெண்மணி வடை சாப்பிட்டால் தலைவலிக்கும்(இதுவும் ஆங்கிலத்தில் தான்) என்று சொன்னார்கள். அதை கேட்டவுடன் நான் மட்டும் அல்ல அங்கு உடன் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டர்கள். அதை பார்த்த பிறகு தான் அந்த பெண்மணி அமைதியானார். தன மகன்களை அவர்களுடைய பெர்த்தில் படுக்க வைத்து விட்டு தானும் உறங்கப்போனார். சரி உறங்குவார் என்று எதிர் பார்த்த நான் அவர் ஒரு ஆங்கில புத்தகத்தை எடுத்துவிட்டார். லைட் ஆப் செய்து தூங்கலாம் என்று இருந்த நான் நொந்தே போனேன். அவர் படிக்கவும் இல்லை. வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு பிறகு அதை முடிவைத்தார். இப்படி வெளியே செல்லும் பொது தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவது தேவையா? அதுவும் ஒழுங்காக இல்லாமல் அரை குறையாக பேசுவது தேவையில்லாதது. இது போல சீன் போட்டுக்கொண்டு திரிபவர்கள் திருந்துவார்களா?... 

2 comments:

  1. நேரில் பார்த்த உணர்வு .அத்தனை தெளிவாக எழுதி உள்ளீர்கள்.சிலரின் இப்படி அலப்பரையை சகிக்கத்தான் முடியவில்லை.

    ReplyDelete
  2. @ஸாதிகா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி