Sunday, December 19, 2010

ரொம்ப நல்லவங்க....

சில படங்களில் வந்த காட்சிகள் இணைத்து நகைசுவைக்காக ஒரு கற்பனை...
ஜிம்பாவே நாட்டின் மட்டை பந்து(cricket) வளர்ச்சிக்காக அங்கு ஏதாவது போட்டி  நடத்தலாம் என்று அந்த நாட்டு தலைவர்கள் எண்ணினார்கள். அதனால் அந்த நாட்டு தலைவர்கள் மட்டை பந்து குழுவின்(டீம் கேப்டன்தலைவரிடம் எதாவது அணியை இங்கு வரவைத்து போட்டி நடத்துங்கள் என்று சொன்னர்கள்.

காட்சி ஒன்று:

பிரதமர்: ஹலோ கேப்டன்.... வாங்க.. எப்படி இருக்கீங்க.. நம்ம நாட்டுல கிரிகெட்டை வளர்ச்சி அடைய எதாவது செய்யணும். பேசாம நீங்க ஏதாவது டீமா கூபிட்டு சில டெஸ்ட் மேட்ச் இல்ல ஒருநாள் மேட்ச் விளையாடுங்க
கேப்டன்: சரிங்க பிரதமர். மத்த வீரர்களுடன் பேசிட்டு நான் சொல்லறேன்.
பிரதமர்: சரி போயிட்டு வாங்க.

காட்சி இரண்டு:

கேப்டன்: நம்மள மத்த டீமோட நம்ம நாட்டுல விளையாட சொல்லராங்க.
பிளேயர் 1 : முடியாது
பிளேயர் 2 : கண்டிப்பா... மத்த நாட்டுக்கு பொய் தோத்தா பரவல்ல ஏதாவது சாக்கு சொல்லலாம் இங்கேயே தோத்தா??
பிளேயர் 1 : நம்மள யாரும் மதிக்கவே மாட்டனுங்க
கேப்டன்: இப்ப மட்டும் எவன் மதிக்கிறான்??
பிளேயர் 2 : அதுக்காக ??
கேப்டன்: இது பிரதமர் உத்தரவு நாம விளையாடித்தான் ஆகணும்
பிளேயர் 1 : சரி சரி ஏதாவது சப்ப டீமா கூபிடுங்க.
பிளேயர் 2 :இந்தியா, சவுத் ஆப்ரிக்கா ஏதாவது??
பிளேயர் 1 : ஏன்டா இந்த கொலைவெறி. அவனுங்க வந்து நாரடிகவா?? அதுவும் இந்தியா வந்தா நம்மள எதோ கொசுவ அடிக்கிற மாதிரி அடிச்சுடுவாங்க.
கேப்டன்: சரி அப்பா என்ன பண்ண??
பிளேயர் 2 : ஏதாவது நல்ல ஐடியா தா டா..
பிளேயர் 1 : பேசாம நம்ம ஆஸ்திரேலியாவை கூபிடுவோம். அவனுங்க தான் டிசண்ட வந்து தோத்துட்டு போயிடுவாங்க
கேப்டன்: கரெக்ட்டு. நாமளும் ஜெயிச்ச மாறியும் இருக்கும் ஊர்ல தலை நிமிர்த்து நடக்குற மாறியும் இருக்கும்
பிளேயர் 2 : ஆமா இதுதான் கரெக்ட் ஐடியா.
கேப்டன்: சரி. அப்ப நான் போய் இந்த செய்திய பிரதமர் கிட்ட சொல்லிட்டு  வந்துடறேன்.

காட்சி முன்று:
எதிர் பார்த்தது போலவே ஜிம்பாவே அணி வென்றுவிட்டது,
வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசாங்கம் பரிசு மழை. அந்த பாராட்டு விழாவில்
பிரதமர்:சபாஸ் கேப்டன் ஜெயிச்சதுக்கு வாழ்த்துகள்.
கேப்டன்: ரொம்ப நன்றி பிரதமர். எல்லா பெருமையும் அணி வீரர்களை தான் சேரும்.
பிளேயர் 1 : அவிங்க இவ்வளவு நல்லவனுக்களா இருப்பாங்கனு தெரியாமபோச்சே.
கேப்டன்: இனிமே அப்பப்ப அவங்களை இங்க விளையாட கூபிட வேண்டியதுதான்.
பிளேயர் 2 : ஆமா. நாமளும் ஜெயிச்ச மாறியும் இருக்கும் அரசாங்ககிட்ட இருந்து ஏதாவது வாங்கன மாறியும் இருக்கும்.
பிளேயர் 1 : அவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்கட…..அவங்க ரொம்ப நல்லவங்க.....

7 comments:

  1. ஏன் இந்த கொலைவெறி.............

    ReplyDelete
  2. @ தாரிஸன் : கருத்துக்கு நன்றி...... சும்மா ஒரு ஜாலிக்கு தான்.....

    ReplyDelete
  3. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  4. இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி