Saturday, December 18, 2010

விருதகிரி விமர்சனம்

நான் எழுதும் முதல் திரை பட விமர்சனம். குறை இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பிடித்திருந்தால் அதையும் தெரியப்படுத்தவும்.
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயக்கி நடித்த முதல் படம். வழக்கமான விஜயகாந்த் படம் . படத்தின் துவக்கத்தில் கதை திரைக்கதை இயக்கம் விஜயகாந்த் என்று போட்டிருந்தனர். நானும் தலைவர் சுயமாக சிந்தித்து இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைத்தேன். இந்த படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் .  படம் ஆரம்பித்து முதல் பாதி வரை அரசியல் நெடி. எல்லா இடத்திலும் அரசியல். மற்ற படங்களை விட இந்த படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம். மக்களிடத்தில் நானும் அரசியலில் இருக்கிறேன் என்று நினைவு படுத்த இந்த படம் எடுத்திருப்பாரோ!!!. தெரியவில்லை இருக்கலாம்.
 படத்தின் முதல் காட்சியிலேயே மலேசியாவில் ஒரு ஆங்கிலேய காவல் உயர் அதிகாரி தமிழில் பேசுவதை போல் காட்டியிருப்பார்கள். அதை தவிர்த்திருக்கலாம். அல்லது அவர்கள் ஆங்கிலத்தில் பேசும்பொழுது அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளை திரையில் இட்டு இருக்கலாம். இன்னும் எத்தனை படங்களில் தான் இவர் மற்ற நாட்டு காவலர்களை முட்டாள்கள் என்றும் நாம் மிகவும் அறிவாளிகள் என்றும் காட்டுவாரோ தெரியவில்லை. கர்ப்பிணி பெண்கள் காலில் ஹீல்ஸ்(heels) வைத்த காலணிகள் போடமாட்டர்கள் என்று நம் கேப்டன் விடும் வசனங்களும், அதை வைத்து அவர் கடத்தல்காரர்களை கண்டுபிடித்ததாக அவர் சொல்லுவதும் அதை அந்த நாட்டு காவலர்களும் ஏற்றுக்கொண்டு நம் காவலர்களை பெருமையாக பேசுவதும் கொடுமை கொடுமையிலும் கொடுமை. இது போல சில இடங்களை நீக்கியிருக்கலாம். கேப்டன் இயக்குனராக அவதாரம் எடுத்ததை பாராட்டலாம். ஆனால் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் வழக்கமான தன் படங்களை போலவே இதையும் எடுத்திருக்கிறார்.  
30 நிமிடம் கழிந்த பிறகு கதை முற்றிலும் ஆங்கில படமான டேகேன்(taken)  படத்தை தமிழில் மொழி மாற்றம் (ரீமேக் என்று சொல்ல விரும்பவில்லை) செய்து இருப்பதை உணர்தேன். நான் பார்த்த ஆங்கிலப் படங்களில் எனக்கு பிடித்த படங்களில் taken னும் ஒன்று. குறிப்பாக அதில் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள பாசம். தன்  மகளை காப்பாற்ற தந்தை எடுக்கும் பல ஆபத்தான காரியங்களை அதில் மிகவும் சிறப்பாக கட்டியிருப்பார்கள். அதை அப்படியே தமிழில் எடுத்துள்ளார் நம் கேப்டன். ஆனால் அந்த நடிப்பு இதில் missing. அந்த பரபரப்பு இதில் missing. அரசியல் வசனங்கள் தயார் செய்ய கேப்டன் அவர்கள் காட்டிய அக்கறையை இந்த படத்தின் திரைகதையில் காட்டியிருக்கலாம்.

படத்தின் +
1. படத்தின் மூலக்கதை (“TAKEN” story)    
2. தனியாக ஒரு இளம் கதாநாயகி இல்ல.
3. டூயட் என்னும் சுவிசர்லாந்து, ஸ்வீடன் செல்லும் பாடல்கள் இல்லை.


படத்தின் -
1. திரை கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
2. முதல் பாதியில் தேவையில்லாத பல வசனங்களை குறைத்திருக்கலாம்.
3. படத்தில் இன்னும் உணர்வையும்  வேகத்தையும் சேர்த்திருக்கலாம்.

விருதகிரி- மற்றொரு கேப்டன் படம் (சொல்ல வேறு ஒன்றும் இல்லை)

5 comments:

  1. // இந்த படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் . //

    எந்தப் படம்ன்னு சொல்லு பங்கு... taken...?

    ReplyDelete
  2. // தனியாக ஒரு இளம் கதாநாயகி இல்ல //

    இது ப்ளஸ் இல்லை... மைனஸ்...

    ReplyDelete
  3. ஆமா ....அது taken என்கிற படம்...

    அவர் கட்டிபுடிச்சி ஆடுறத பாக்கவேண்டாம்-ல...அதான் பிளஸ்-னு சொன்னேன்.

    ReplyDelete
  4. பாரி பாஸ்.. மலேசியாவில் பல தமிழர்கள் இருக்கிறார்கள் அதனால் ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுவதாக காண்பித்ததில் தவறில்லை என நினைக்கிறேன்.. மற்ற நாட்டு காவலர்களோடு நமது காவலர்களுக்கு திறமை அதிகம் தான்.. குற்றவாளியை பிடிப்பதிலும் சரி லஞ்சம் வாங்குவதிலும் சரி.. அதிலும் தவறில்லை.. இது நல்லா காமெடியா விமர்சிக்க கூடிய படம்.. என்ன போலவே ஓ.கே., ரகத்தில் விமர்சிச்சிருக்கீங்க.. வாங்க ரெண்டு பேரும் சேந்து எழுதுவோம்.. நம்ம ரெண்டு பேருக்குமே ப்ராபகர் தான் முன்னோடி.. அவர சீக்கிரமா ஓவர் டேக் பண்ணிடுவோம்..

    ReplyDelete
  5. @தம்பி கூர்மதியன்....கருத்திற்கும் வருகைக்கும் நன்றி பாஸ்...இப்ப தான ஆரம்பித்திருக்கோம்... பாத்துக்கலாம்....ஆனா பிரபாகர் விட நல்லா பண்ணுறது கஷ்டம்...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி