Sunday, December 12, 2010

தூண்டுதல்

நான் இந்த வலைப்பூவில் பதிவு செய்யவேண்டும் என்று நினைத்ததற்கு சில காரணங்கள் ( தூண்டுதல்) உண்டு.
நான் பிறந்தது ஒரு தமிழ் குடும்பம். தமிழன் என்பதால் மட்டும் அல்ல என் பெற்றோர் தமிழ் ஆசிரியர்கள். என் தாத்தாவும் ஒரு தமிழ் ஆசிரியர். அதுவே எனக்கு தமிழை மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. நான் பள்ளியில் படிக்கும் போதும் கூட எனக்கு மிகவும் பிடித்த பாடங்களில் தமிழும் ஒன்று. 
பொறியியல் முடித்த பிறகு மேல் படிப்பிற்காக இங்கு(கேரளா) வந்துவிட்டேன். மலையாளம் தெரியாததால் பல நேரங்களில் தனிமை என்னை சூழ்ந்துகொண்டது. என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கையில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனின் வலைப்பூவை பார்க்க நேரிட்டது.

(பிரபாகரனின் தத்துபித்துவங்கள்  பெயரில் அந்த நண்பன் வலைப்பூவில் தன் பதிவுகளை செய்துகொண்டிருக்கிறார்)

  அதன் பிறகு எனக்கு ஒரு எண்ணம். நானும் வலைப்பூவில் சேர்ந்து என் கருத்துகளை பதிவு செய்யவேண்டும் என்று. 
சரி தொடங்கலாம் என்று இருக்கையில் கல்லூரியில் பல வலைதடங்களை தடை செய்துவிட்டார்கள். அதில் வலைபூவும் ஒன்று.  மேலும் தினமணி இணையதளத்தில் வலைபூவிற்கு என்று தனியாக ஒரு பகுதி உள்ளது. அதையும் தொடர்து படிக்கையில் என் ஆர்வம் அதிகரித்து இன்றுடன் என் வலைபூவையும் துடங்கிவிட்டேன்.
  
இன்று முதல் நானும் சில பதிவுகளை செய்யலாம் என்று இருக்கிறேன். அதனால் உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு அன்புடன் ,
பாரி.
தா

3 comments:

  1. வா நண்பா... வலைப்பூவுலகிற்கு உன்னை வருக வருக என வரவேற்கிறேன்... உனக்காக ஒரு அறிமுக இடுகையை கூடிய விரைவில் இடுகிறேன்...

    ReplyDelete
  2. முதலில் பின்னூட்டம் போடும்போது வரக்கூடிய word verificationஐ நீக்கிவிடவும்... தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகள் பற்றி உனக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்... தெரியவில்லையெனில் கீழுள்ள இணைப்புகளை பயன்படுத்தி அவைகளில் உனது தளத்தை பதிவு செய்துக்கொள்ளவும்...

    http://ta.indli.com/
    http://tamilmanam.net/

    ReplyDelete
  3. followers widgetல் எதோ கோளாறு இருப்பதால் இப்போதைக்கு இணைய முடியவில்லை... கூடிய விரைவில் இணைந்துவிடுகிறேன்...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி