Thursday, June 14, 2012

மலிவு விலையில் ஆபத்து.

 அன்பு நண்பர்களுக்கு



அனைவருக்கும் என் இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு இது தான் என் முதல் பதிவு. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. மேலும் நான் தங்கியுள்ள இடமும் அலுவலகமும் சிறிது தொலைவாக உள்ளதால் அதுவும் ஒரு காரணமாகிவிட்டது. ஒரு வழியாக நான் மீண்டும் இந்த பதிவை இடுகிறேன்.

நாம் பல நேரம் பல பொருட்களை மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி அதை வாங்கி நாம் உபயோகித்துவிடுகிறோம் ஆனால் அப்படி மலிவான பொருட்களால் பல பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நாம் அர்ப்பமாக நினைக்கும் பல பொருட்களால் நமக்கு தீங்குகள் நேரிடும் என்பதை நாம் மற்ந்துவிடுகிறோம்.

அப்படியான ஒரு பொருள் தான் காதுகளை சுத்தம் செய்ய நாம் உபயோகிக்கும் பட்ஸ்(Budds).

தேவையில்லாத போது நாம் இது போன்ற பொருட்களை உபயோகிக்கக்கூடாது. சிலருக்கு பட்ஸை தொடர்ந்து உபயோகிக்க பழகி அது இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலைமையை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். இதை தொடர்ந்து உபயோகிக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் கூட சொல்லுகிறார்கள்.
ஆனாலும் நாம் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து உபயோகிக்கிறோம்.

இரயில் நிலையங்களிலோ பேருந்து நிலையங்களிலோ மலிவான விலையில் பட்ஸ் விற்கிறார்கள். அவர்களில் பெரும்பானவர்கள் கண் தெரியாதவர்கள். நாமும் அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டு அவர்களிடமிருந்து பட்ஸ் வாங்கிவிடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த வேரு எதாவது பொருட்களை வாங்கலாம். ஆனால் பட்ஸ் அல்ல. ஏனெனில் அது மருத்துவமைனைகளில் இருந்து வெளியே தூக்கி எரியப்படும் பஞ்சுகளை சுத்தம் செய்து அதில் இருந்து உருவாக்கப்படுவதாக ஒரு செய்தி அறிக்கை சொல்கிறது. அவர்களுக்கு உதவுவதகாக் நாம் நம்மை தண்டித்துக்கொள்கிறோம். மற்றவர்களுக்கு நாம் உதவலாம். அதுமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியமாக உதவலாம் ஆனால் அதனால் நமது உடலுக்கே தீங்கு வந்தால் யோசிக்கவேண்டிய விசயம்.

அதனால் ஒரு பொருளை வாங்கும் போது தன் விலையை விட அதன் தரம் மிகவும் முக்கியம்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி. 

10 comments:

  1. என்ன, மருத்துவமனைக் கழிவு பஞ்சிலிருந்து "மொட்டுகள்" (BUDS) தயாரிக்கிறார்களா?
    பொருளின் தரம் பார்த்து வாங்க வேண்டும். எச்சரிக்கைக்கு நன்றி.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

    காதுகளை சுத்தம் செய்யும் முன் இந்தத்தகவல்களை அனைவரும் காதில் போட்டுக்கொண்டால் நல்லது.

    ReplyDelete
  3. வணக்கம்
    விழிப்புணர்வு மிக்க அருமையான தகவல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அன்புடையீர்,

    வணக்கம்.

    தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்து எழுதியிருந்தீர்கள்.

    என்னைப்பற்றிய இவ்வாறான வலைச்சர அறிமுகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டதனால், இப்போது என் வலைத்தளத்தினில் அவற்றைபற்றிக் குறிப்பிட்டும், என்னை அறிமுகம் செய்துள்ள வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியும் ஒருசில தொடர்பதிவுகளாக இப்போது வெளியிட்டு வருகிறேன்.

    இன்றைய பதிவினில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

    நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/2-of-16-2-6.html

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in

    ReplyDelete
  5. அன்புள்ள ‘பச்சைத்தமிழன்’ பாரி தாண்டவமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (07.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/7.html

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (07/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  7. தங்களின் வலைத்தளம் இன்று ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  8. காயப்படுத்தல் கிருமித்தொற்று செவிப்பறைப்பாதிப்பு
    என பல ஆபத்துகள்
    விலை அதிகமோ குறைவோ
    வேண்டாமே இயர் பட்ஸ்

    ReplyDelete
  9. நல்ல விழிப்பு உணர்வு பதிவு.. நம்மில் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்திருப்பதில்லை. இனியாவது கவனத்துடன் இருக்க வேணும் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி