Monday, March 14, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 4


இதன் முதல் பாகம் படிக்க இங்கேவும், இரண்டாம் பாகம் படிக்க இங்கேவும் மூன்றாம் பாகம் படிக்க இங்கேவும் அழுத்தவும்

அந்த குழுவில் மொத்தம் எட்டு பேரில் நான்கு பேர் இடது கை பழக்கம் உடையவர்கள். அவர்களில் ஒருவர் அந்த குழுவில் தலைவர். அவர் விண்கலம் வெடித்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆக மீதி உள்ள மூன்று பேருடன் விசாரனையை துவங்குகிறார் சி.பி.ஐ. அதிகாரி ராஜெஷ்.

அதில் முதலில் இயற்பியல் வல்லுனர் திரு. டிசௌசா அவர்கள். அவர் குறிபிட்ட அந்த காலகட்டத்தில் தன்னுடைய வேலை முடிந்துவிட்டதால் தன்னுடைய மகனின் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றுவிட்டார் என்பது விசாரனையில் தெரியவருகிரது. அதனால் அவர் அந்த சந்தேக பட்டியலில் இருந்து விலக்கப்பட்டார்.

அடுத்து வானவியல் வல்லுநர் திரு. அருண் அவர்கள். அவர் அறிவாளி. ஆனால் அப்பாவி. இன்னமும் வாடகை வீட்டில் உள்ளார். இந்த விண்கல முயற்சி வெற்றி அடைந்தால் இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் இவரைப்பற்றி விசாரித்ததில் இவர் யாருக்கு எந்த வகையிலும் தொந்தரவு செய்யாத மனிதர் என்று தெரியவருகிறது. மேலும் இவர் அந்த காலகட்டத்தில் வலது கரத்தில் ஒரு விபத்தில் அடிபட்டு ஒரு கட்டுடன் இருந்துள்ளார். ஆனால் அந்த வீடியோவில் வந்த அப்படி எந்த கட்டும் இல்லாததால் இவரும் இல்லை என்றூ ஆகிவிட்டது.

அடுத்து மிச்சம் உள்ள ஒருவர் பொறியியல் வல்லுநரான திரு இம்ரான் அவர்கள். இவர் தன் கண்டுபிடிப்புகளை நாட்டுக்காக அர்பணித்தவர். தனக்கு என்று எதுவும் வைத்துக்கள்ளாமல் தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு கொடுத்தவர். திருமணமாகாதவர். இவர் ஆள் கொஞ்சம் குட்டை. ஆனால் அந்த வீடியோ பதிவில் உள்ளவர் நல்ல உயரமான ஆசாமி. அதனால் இவரும் இல்லை என்று ஆகிவிட்டது.

ஆக அந்த மூன்று பேரும் இல்லை என்று ஆகிவிட்டது. அந்த கோப்புகளை வைத்திருந்த இடத்திற்கு அந்த அவர்களைத்தவிர உள்ளே நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. அகையால் சி.பி.ஐ. யே குழம்பிவிட்டது. அப்பொழுது தான் ராஜெஷ் ஒரு விஷயத்தை கவனித்தார். அந்த வீடியோவில் உள்ள நபருக்கு வலது கை மணிகட்டில் ஒரு தழும்பு இருந்ததை. மிகவும் சிறியதாக இருந்ததால் அதை யாரும் இத்தனை நாள் கவனிக்கவில்லை.

     மேலும் விசாரித்த பொழுது ராஜெஷுக்கு தெரியவந்த ஒரு விஷயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




                                  தொடரும்


   
                               அன்புடன்


                          பாரி தாண்டவமூர்த்தி



5 comments:

  1. தொடர்கதை.. அதுவும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் போல

    ReplyDelete
  2. @சி.பி.செந்தில்குமார்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றீ... ஆமாம் சார்...சும்மா ஒரு முயற்சி...

    ReplyDelete
  3. நல்ல வித்தியாசமான சிந்தனை. பதிவுலகத்தில் நான் படித்த வித்தியாசமான கதைகளில் இதுவும் ஒன்று. ஆபரேஷன் இப்பதான் சூடு பிடிக்குது.

    ReplyDelete
  4. @கோவை ஆவி...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி