Saturday, March 12, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 3


முதல் பாகம் படிக்க இங்கேவும் இரண்டாம் பாகம் படிக்க இங்கேவும் அழுத்தவும்.

அவருக்கு அளிக்கப்பட்ட அந்த தண்டனையால் அவருடைய குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. அதற்கு முன் அவர்கள் அந்த கணித மேதை நிச்சயம் தவறு செய்திருக்கமாட்டர் என்று எழுதிவைத்துவிட்டு அவர்கள் மடிந்துவிடுகிறார்கள்.

அடுத்தடுத்து வந்த அதிர்ச்சியில் அந்த கணித வல்லிநரும் உடைந்து போய்விடுகிறார். சிறைச்சாலையில் உள்ள அவர் காண அவரின் நெருங்கிய நண்பரும் சி.பி.ஐ அதிகாரியுமான டிடெக்டிவ் ராஜேஷ் வருகிறார். அவரிடம் கணித வல்லிநர் அந்த தவறை தான் செய்யவில்லை என்று அழுகிறார். ராஜேஷும் பல நாளாக இவரை அறிந்திருப்பதால் இவர் இதை செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறார்.

அதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முரையீடு செய்கிறார். மேலும் இந்த விசாரனையை செய்ய சி.பி.ஐ க்கு உத்தரவிடும்படி வேண்டுகோண்டிடுக்கிறார். அவரது வேண்டுகோலை ஏற்று சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடுகிறது உச்சநீதிமன்றம்.

சி.பி.ஐ யும் இந்த விசாரனைக்கு ராஜேஷை தலைமை தாங்கி நடத்தவிடுகிறது. அதற்கு அவர்கள் வைத்த பெயர் ”OPERATIONS ஆரியபட்டா”. முதல் கட்ட விசாரனையில் தவறு என்று சொல்லப்பட்ட கணக்கீடுதல் (calculation) பகுதியை சோதனை செய்தபோது அதில் சில இடங்களில் சில எண்கள் பின்னாளில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனாலும் வேறு எதுவும் சரியாக இல்லை என்பதால் அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அந்த கணித வல்லுநரே பின்னாளில் அதை செய்திருக்கலாம் என்று ஒரு வாதம் வருகிறது. எழுத்துக்களை ஆராய்ச்சி செய்யும் நிபுனரின் உதவியுடன் அதை எந்த நாளில் எழுதியிருக்கலாம் என்று ஒரு தோராயமான ஒரு கால கட்டம் கண்டுபிடிக்கப்படுகிறது.

அடுத்த கட்ட விசாரனைக்கு அந்த கால கட்டத்தில் விண்கலம் தயார் செய்ய வரைப்படத்தை வரைந்து முடித்து பத்திரமாக வைத்திருந்த இடத்தில் உள்ள காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சி.பி.ஐ.க்கு கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட காலத்தில் அங்கு ஒரு உருவம் வந்து வரைபடத்தில் எதையோ எழுதுவது தெரிகிறது. அந்த முகம் மூடியிருப்பதால் அது யார் என்று தெரியவில்லை. ஆனால் அது நிச்சயம் அந்த கணித மேதையில்லை என்று உறுதியாகிறது, ஏனெனில் அந்த உருவம் எழுத இடது கையை உபயோகப்படுத்துகிறது ஆனால், அந்த கணித மேதை வலது கை பழக்கம் உடையவர். அப்பொழுது விசாரனை சூடிபிடிக்கிறது.

                                       தொடரும்...
                                       அன்புடன்
                                 பாரி தாண்டவமூர்த்தி

பிடித்திருந்தால் ஓட்டு போடவும். அப்படியே உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கள்.....

11 comments:

  1. நல்ல சுவாரஸ்யமாக போய்கொண்டு இருக்கிறது.. தொடருங்கள்...

    ReplyDelete
  2. @வேடந்தாங்கல் - கருன்....அட நீங்க ரொம்ப வேகங்க.....

    ReplyDelete
  3. ம்ம்ம்..நல விறு விறு சுறு சுறு தொடர்.

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    ReplyDelete
  4. @சி.பி.செந்தில்குமார் ....வருகைக்கும் கருத்திற்உம் நன்றி....

    ReplyDelete
  5. @தமிழ்வாசி - Prakash....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  6. @ரஹீம் கஸாலி....என்ன சார்னு சொல்லிட்டீங்க... நான் இன்னமும் ஸ்டுடெண்ட் தான்....

    ReplyDelete
  7. கதை சுருக்கம் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது..

    ReplyDelete
  8. வாழ்த்துக்களும், வாக்குகளும்..

    ReplyDelete
  9. டும்டும்...டும்டும்...

    அடுத்த கதையை விரைவில் தொடங்குங்கள்...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி