Monday, August 29, 2011

முதலில் நாம் மாறுவோமா?



இன்னைக்கு நம்ம நாட்டுல ரொம்ப முக்கியமான நிகழ்வு அன்னா ஹசாரேவின் போராட்டம். ஒரு வழியா அது முடிஞ்சிபோச்சி. இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவு. சாதாரண மக்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை எல்லோரும் இதற்கு ஆதரவு. எதோ ஊழல ஒழிக்கனும் ஒழிக்கனும்னு கத்திக்கிட்டு இருக்கோம். லஞ்சமா வாங்கின கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வரனும். அதுக்கு வேற ரமணா மாதிரி கணக்கு தராங்க. அந்த பணம் வந்துட்டா நமக்கு 10 வருசம் வரி தேவையில்லையாம், பெட்ரோல் 25 ரூபாய்க்கு தருவாங்கலாம். என்னமா சொல்லுராங்க. சொல்லுரவங்கலை எல்லாம் நான் கேட்டுரேன்(என்னையும் சேர்த்துதான்), நாம எத்தன பேர் இதுவரைக்கு லஞ்சம் வாங்குனதோ கொடுத்ததோ இல்லை. சத்தியமா சொல்லுங்க. குழந்தைகிட்ட கூட நீ இத பண்ணா நான் இதை செய்வேனு சொல்லி எல்லாத்துக்கும் எதாவது கிடைக்கும்னு எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

நம்ம ரேஞ்சுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் வாங்குனா, நம்மள மாதிரி லட்சம் பேரு ஓட்டு போட்டு MLA, MP ஆகுறவங்க அவங்க ரேஞ்சுக்கு கோடியில வாங்குராங்க. அதுக்கும் யார் காரணம். நாமதான். அவனுக்கு ஓட்டு போட கூட நாம அவங்ககிட்ட இருந்து பணம், பொருள்னு எவ்வளவு வாங்கியிருக்கோம். அப்புறம் அவன் எங்க பணத்த சுருட்டிட்டான், முழுங்கிட்டான் அப்படினு போலம்பரது. முதலில் நாம சுத்தமா இருக்கனும்., அப்புறம் மத்தவங்கல பத்தி பேசனும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துல அவருக்கு ஆதரவு தரோம்னு போய் இருந்தவங்கல்ல பலபேருக்கு ஜன் லோக்பால் பத்தி பாதி தெரியாது. அரசாங்கம் என்ன சொல்லியிருக்காங்க, அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால்ல என்ன இருக்கு எதுவுமே தெரியாது. அதனாலதான் அவங்கலே அதை மக்களுக்கு விளக்கி சொன்னாங்க.(எனக்கும் எதுவும் தெரியாது என்பது உண்மை). சும்மா நாமும் அதரவு தரோம்னு சீன் போட்டுகிட்டு போய் உட்கார்ந்துகிறது.

எத்தனபேர் பொறியியல் கல்லூரியிலேயோ, மருத்தவ கல்லூரியிலேயோ, அல்லது வேறு ஏதாவது படிக்கவோ CAPITATION அதாவது DONATION தந்திருக்கோம். நாம மட்டும் தப்பு செய்யலாம் ஆனா மத்தவன் செய்தா நமக்கு வலிக்குது. அது கூட ஏன்னா அவன் நிறைய சம்பாதிக்குறான். நமக்கு கொஞ்சமா கிடக்குதுங்கிற வயித்தெறிச்சல். அதான் காரணம்.. வேர ஒன்னும் இல்லை

இறுதியா நான் என்ன சொல்லுரேன்னா நானும் அன்னா ஹசாரே சொல்லுர மாதிரி ஊழல் ஒழியனும் என்பதை ஒத்துகிறேன். ஆனா அதுக்கு முதலில் நாம மாறனும். அப்புறம் மத்தவங்களுக்கு நாம சொல்லலாம். எல்லாம் மாற்றமும் வீட்டில் இருந்து தான் என்பது என் கருத்து.

ஜெய் ஹிந்த்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

4 comments:

  1. தெளிவான சிந்தனை...

    ReplyDelete
  2. @Philosophy Prabhakaran,....நன்றி நண்பா.....

    ReplyDelete
  3. தெளிவில்லாத சிந்தனை நண்பா
    மன்னிக்கவும் உங்கள் பார்வை தவறு , காரணம் இந்த ஊழல் என்பதும் லஞ்சம் என்பதும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்கள் தான். வீட்டில் தலைமை சரியாக இருந்தால் அந்த வீடு சரி படும் ரோல் மாடல் , அதற்காக நாம செய்யறது சரின்னு வாதிட வில்லை , நம்மள இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று நீங்கள் பின்னோக்கி ஆராய ஆரபித்தால் , அதன் ஆரம்ப புள்ளியும் தெரியாது முடியும் தெரியாது , இப்போது நடப்பது என்ன ஒருவன் ஊயிர் முக்கியம் அது போல் நாடு முக்கியம் . முதலில் அவசர கால நிவாரணமாக பெரிய பெரிய முதலாளிகள் தரும் பணத்தை வாங்கிகிட்டு நாட்டை அடகு வைக்கும் அரசியல் வாதிகள் மற்றும் நிரந்தர ஊழல் வாதிகளான அரசு அதிகாரிகளை மேல்மட்டத்தில் இருந்து களைய அல்லது குறைக்க பார்ப்போம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் குறைய ஆரபிக்கும் . இதற்க்கு ஒருவர் முன்னெடுக்க தேவை பட்டார் அந்த துணிசல் அன்னா ஹசறேவுக்கு இருந்தது, என் உங்களுக்கு துணிசல் இருந்ததா முதலில் கழிவு நீர் ஆகட்டும் கடை நிலை ஊழியரை உங்களால் எதிர்க்க திராணி உண்டா சொல்லுங்கள் , இந்த எதிர்ப்பு அனைவர் மனதிலும் ஆட்டி படைத்தது தான் , அன்னா ஹசாரே அதற்கு குரல் கொடுத்தார் மக்கள் அதை ஆமோதித்து போராட துணிந்திருகின்றார்கள் . இதை கண்டு நாடும் நானும் என் போன்றோரும் சந்தோஷ பாட்டு குரல் கொடுத்தோம் . நீங்கள் அதை கேலி செய்கின்றீர்கள் . இந்த சட்டத்தில் குறை இருந்தால் அதை சுட்டி காட்டுங்க அதை விடுத்து வித நீ நல்லவனா நான் நல்லவனா என்று யோசிக்க ஆரபித்தீர்கள் என்றால் என்ன நடக்கும் ......... ஐயோ பாவம் நீங்க

    ReplyDelete
  4. @bala...தங்கள் கருத்துகளுக்கு நன்றி.... நான் எழுதியதில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்கவேண்டும் என்று தான் நானும் எழுதியிருக்குறேன். அதற்கு நாமும் மாறவேண்டும் என்பது தான் என் கருத்து....சொல்லுவதை சொல்லிவிட்டு நாம் மாறாமல் மற்றவர்களை மட்டும் மாறுவார்கள் என்று எண்ணுவது தவறு என்பது தான் நான் கூறுவது...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி