Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, September 7, 2011

இவங்க தொல்லை தாங்க முடியல



இந்த லோன் கொடுக்குறவங்களோட தோல்லை ரொம்ப அதிகமாயிடிச்சி. முன்னெல்லாம் வங்கிகள் தான் சார் இந்த லோன் எடுத்துக்கோங்க, அந்த லோன் எடுத்துக்கோங்கனு சொல்லுவாங்க. இப்ப எல்லாம் யார்யாரோ, எதோதோ பேர் சொல்லுறாங்க.
அப்படி தான் ஒருநாள் எங்க வீட்டு LANDLINEனுக்கு ஒரு போன் வந்துச்சி. நான் தான் எடுத்தேன். போன்ல ஒரு பொன்னு சார் உங்க பேரு என்ன அப்படினு கேட்டுச்சி. உடனே நான் நீங்க தான் போன் பண்ணீங்க. போன் பண்ணிட்டு என் பேர் கேட்டா எப்படினு சொன்னேன். உடனே அவங்க எதோ ஒரு FINANCIAL INSTITUTION (அதாவது பணம் சம்பந்தமா எதோ பண்றாங்கப்பா ..எனக்கு சரியா தெரியல) பேர சொல்லி. சார் உங்க வீட்டு போன் நம்பருக்கு ஒரு லோன் விழுந்திருக்கு. உங்க பேரு, வீட்டு முகவரி சொன்னா போதும் அப்படினு சொன்னாங்க. (போனுகெல்லாம் லோன் விழுதுப்பா)
நான் படிச்சிட்டு இருக்கேன்னு சொன்னதும் அவங்க உடனே என்னோட அப்பா பேரு, அவர் என்ன பன்றார் அப்படினு கேட்டாங்க உடனே நான் எங்களுக்கு லோன் எதுவும் வேண்டாம் அப்படினு சொல்லிட்டு கட்பண்ணிட்டேன். அப்புறமும் விடாம ரெண்டாவது தெடவையா கால் பண்ணவும் எனக்கு கோபம் வந்து திட்டவும் அப்புறம் போன் காலே வரல.
இதுகூட பரவல்லைங்க லோன் தான். ஆன சில சமயம் இந்த இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து போன் பண்ணி சார் எங்க கம்பனி இன்சுரன்ஸ் ஒன்னு எடுத்திடுங்க அப்படீனு சொல்லி தொல்ல பண்ணுவாங்க. உச்சகட்டமா சார் நீங்க திடீர்னு செத்து போயிட்டாலோ, இல்ல விபத்து ஏற்பட்டு எதாவது ஆயிட்டாலோ இந்த இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவும் அப்படீனு சொல்லுவங்க. எனக்கு அப்படியே ஒரு கோபம் வரும் பாருங்க. 23 வயசுல செத்துபோயிட்டா அப்படீனு சொன்னா எவ்வளவு கோபம் வரும். இவங்களுக்கு எப்படி நம் போன் நம்பர் கிடைக்கும்???. குத்துமதிப்பா ஒரு நம்பர் போட்டு பேசுவாங்கலா இல்ல இந்த போன் கம்பனிகளுக்கு எதாவது காசு கொடுத்து கரக்ட் பண்ணி நம்பர் வாங்கி போன் பண்ணுவாங்களா. எதுவா இருந்தா என்ன இவங்க தொல்லை தாங்க முடியல.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

Tuesday, August 30, 2011

தடுக்கப்படவேண்டிய தற்கொலைகள்



எல்லாவற்றிற்கும் தற்கொலை பதிலாகாது. மற்றவரின் பார்வையை, ஆதரவை தன் பக்கமும் தன் கோரிக்கையின் பக்கமும் திருப்ப இது போல தவறான எண்ணங்களை நாம் ஆதரிக்ககூடாது. முன்னர் முத்துக்குமரன், இப்பொழுது செங்கொடி. நாளை???
.
எதையும் சட்டரீதியாக சந்திக்கவேண்டும். இறந்த அந்த இரண்டு பேருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர்கள் செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் என்ன பாடுபடும்?

இவர்களின் இந்த முடிவு தவறானது என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை. இதை போல அடுத்த சில தற்கொலைகள் ஏற்படும் முன் நாம் இதை தடுத்தாகவேண்டும். இது போல எண்ணங்கள் இளைஞர்களுக்கு வரக்கூடாது.

தற்கொலை செய்து கொள்வது சட்டபடி தவறு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி அது ஒரு குற்றம். இவ்வாறு தற்கொலைக்கு முயல்பவர்களை காவல்துறை கைது செய்துவிடும். இப்பொழுது கூட மதுரையில் பேரரிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுதலை செய்ய சொல்லி மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு முயல அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

வாழ வேண்டிய வயதில் பிரச்சனைகளுக்கு போராடாமல் இது போல தற்கொலைக்கு முயல்வது ஒரு மூடத்தனம். இதை நாம் ஆதரிக்கவே கூடாது. எதையும் சட்டபடி செய்யவேண்டும். நம் செய்கைகள் மற்றவர்களை நல்வழியில் கொண்டு செல்லவேண்டுமே தவர அவர்களியும் தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது. இறந்து போன ஆன்மாக்கள் சாந்தியடைய நாம் பிராத்தனை செய்யும் இந்த நேரத்தில், இது போல எண்ணங்கள் என்றும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதிகொள்ளவேண்டும்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.  

Monday, August 29, 2011

முதலில் நாம் மாறுவோமா?



இன்னைக்கு நம்ம நாட்டுல ரொம்ப முக்கியமான நிகழ்வு அன்னா ஹசாரேவின் போராட்டம். ஒரு வழியா அது முடிஞ்சிபோச்சி. இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவு. சாதாரண மக்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை எல்லோரும் இதற்கு ஆதரவு. எதோ ஊழல ஒழிக்கனும் ஒழிக்கனும்னு கத்திக்கிட்டு இருக்கோம். லஞ்சமா வாங்கின கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வரனும். அதுக்கு வேற ரமணா மாதிரி கணக்கு தராங்க. அந்த பணம் வந்துட்டா நமக்கு 10 வருசம் வரி தேவையில்லையாம், பெட்ரோல் 25 ரூபாய்க்கு தருவாங்கலாம். என்னமா சொல்லுராங்க. சொல்லுரவங்கலை எல்லாம் நான் கேட்டுரேன்(என்னையும் சேர்த்துதான்), நாம எத்தன பேர் இதுவரைக்கு லஞ்சம் வாங்குனதோ கொடுத்ததோ இல்லை. சத்தியமா சொல்லுங்க. குழந்தைகிட்ட கூட நீ இத பண்ணா நான் இதை செய்வேனு சொல்லி எல்லாத்துக்கும் எதாவது கிடைக்கும்னு எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

நம்ம ரேஞ்சுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் வாங்குனா, நம்மள மாதிரி லட்சம் பேரு ஓட்டு போட்டு MLA, MP ஆகுறவங்க அவங்க ரேஞ்சுக்கு கோடியில வாங்குராங்க. அதுக்கும் யார் காரணம். நாமதான். அவனுக்கு ஓட்டு போட கூட நாம அவங்ககிட்ட இருந்து பணம், பொருள்னு எவ்வளவு வாங்கியிருக்கோம். அப்புறம் அவன் எங்க பணத்த சுருட்டிட்டான், முழுங்கிட்டான் அப்படினு போலம்பரது. முதலில் நாம சுத்தமா இருக்கனும்., அப்புறம் மத்தவங்கல பத்தி பேசனும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துல அவருக்கு ஆதரவு தரோம்னு போய் இருந்தவங்கல்ல பலபேருக்கு ஜன் லோக்பால் பத்தி பாதி தெரியாது. அரசாங்கம் என்ன சொல்லியிருக்காங்க, அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால்ல என்ன இருக்கு எதுவுமே தெரியாது. அதனாலதான் அவங்கலே அதை மக்களுக்கு விளக்கி சொன்னாங்க.(எனக்கும் எதுவும் தெரியாது என்பது உண்மை). சும்மா நாமும் அதரவு தரோம்னு சீன் போட்டுகிட்டு போய் உட்கார்ந்துகிறது.

எத்தனபேர் பொறியியல் கல்லூரியிலேயோ, மருத்தவ கல்லூரியிலேயோ, அல்லது வேறு ஏதாவது படிக்கவோ CAPITATION அதாவது DONATION தந்திருக்கோம். நாம மட்டும் தப்பு செய்யலாம் ஆனா மத்தவன் செய்தா நமக்கு வலிக்குது. அது கூட ஏன்னா அவன் நிறைய சம்பாதிக்குறான். நமக்கு கொஞ்சமா கிடக்குதுங்கிற வயித்தெறிச்சல். அதான் காரணம்.. வேர ஒன்னும் இல்லை

இறுதியா நான் என்ன சொல்லுரேன்னா நானும் அன்னா ஹசாரே சொல்லுர மாதிரி ஊழல் ஒழியனும் என்பதை ஒத்துகிறேன். ஆனா அதுக்கு முதலில் நாம மாறனும். அப்புறம் மத்தவங்களுக்கு நாம சொல்லலாம். எல்லாம் மாற்றமும் வீட்டில் இருந்து தான் என்பது என் கருத்து.

ஜெய் ஹிந்த்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மோசடிகள் சில


இது எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது

அமைதியின் நாடாக இருந்த நம் இந்திய நாடு இப்பொழுது மோசடிகளின் நாடாக மாறிவிட்டது.
இங்கே நம் இந்தியாவில் நடந்த  சில மோசடிகள் உங்களுக்காக

இந்த தொகையை பார்த்தால் எனக்கு மயக்கமே வருகிறது. நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

Friday, June 17, 2011

நான் அடித்த அரைசதம்


 
நானும் அரைசதம் அடிச்சுட்டேன். கிரிக்கெட்ல இல்லைங்க பதிவுலகத்துல. எப்படியோ நானும் நாற்பத்தி ஒன்பது பதிவு போட்டுட்டேன். இது என் ஐம்பதாவது பதிவு. அதான் அரைசதம் பதிவு இது. இத்தனை நாளா எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி.

நானும் எதுவுமே தெரியாமல் அம்பது பதிவு போட்டுட்டேன். இப்ப கொஞ்ச நாளா internet connection இல்ல. அதனால பதிவு எதையும் போட முடியறதில்லை. இனி முடிந்த அளவுக்கு பதிவுகள் இட முயற்சி செய்கிறேன். நான் எழுதாத இந்த நேரங்களிலும் என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்ட அன்பு சகோதரர் தம்பி கூர்மதியன் அவர்களுக்கும், Lashmi அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் நான் ஏன் எழுதறது இல்லைனு சொல்லி என்னை விசாரித்த வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் இந்த அம்பதாவது பதிவில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்காங்க. நான் வலைபூவில் எழுதுவதற்கு முக்கிய காரணமான நண்பன் பிலாசபி பிரபாகர், அரசர்குளத்தான் கஸாலி அவர்கள், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்த எல்.கே அவர்கள் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.  என்னையும் மதித்து வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக்கிய சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அப்படியே இன்னைக்கும் ஒரு பதிவை தேத்திட்டேன். விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.
 

Wednesday, May 25, 2011

பழனியில் நடக்கும் கொள்ளை



கடந்த மாதம் என் நண்பன் ஒருவன் பழனி முருகர் கோயிலுக்கு போயிருந்தான். மனம் உருகி இறைவனை வேண்ட போயிருந்தவனுக்கு அங்குள்ள வியாபரிகள் தந்த தொல்லையில் மனம் நொந்து வந்தான். கோயிலுக்கு போகும் வழியெல்லாம் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களால் தொல்லை ஏற்பட்டதாக மன வருத்தத்துடன் தெரிவித்தான். அங்கு கோயிலுக்கு வரும் நபர்களை முதலில் காலனிகளை விடச்சொல்லுவது பிறகு அவர்களிடன் அர்ச்சனை தட்டு 290 ரூபாய் என்று விற்பது. பிறகு அதற்கு ஒரு ரசிது தந்துவிடுவது. அதற்கு பிறகு அதே போல செருப்பு விடச்சொல்லுபவர்களிடன் அந்த ரசிதைகாட்டவேண்டும் இல்லையேல் மேலும் ஒரு அர்ச்சனை தட்டு வாங்க சொல்லுவது என ஒரே கொள்ளை

அது மட்டும் இல்லாமல் கோயிலுக்கு போகும் வழியில் உள்ள இடங்களிலும் உள்ள சிறு சிறு கோயில்களின் பூசாரிகளும் மக்களை மிரட்டி பணம் கேட்கும் நிலைமை அங்கு உள்ளதாக என் நண்பன் மன வருத்தத்துடன் கூறினான். இது இல்லாமல் நடக்கும் போது ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை போன்ற பொருட்களை மக்களின் விருப்பம் இல்லாமல் அவர்களின் தோலில் போட்டுவிட்டு அதற்கு காசு கேட்பது அங்கு இருப்பதாக தெரிகிறது.

பழனி கோயிலுக்கு சென்றால் நிச்சயம் 500 முதல் 1000 ரூபாய் வரை தேவையில்லாமல் செலவாகும் நிலை உள்ளது. மன சாந்தி அடைய கோயிலுக்கு வரும் பக்தர்களிடத்தில் இது போல செய்வதால் அவர்களின் நிம்மதி குறைந்து மீண்டும் இந்த கோயிலுக்கு வர வேண்டும் என்கின்ற எண்ணமும் அவர்களுக்கு வராது. மேலும் பலரிடம் இதைப்பற்றி சொன்னால் அவர்களும் அங்கு சொல்லும் எண்ணத்தை கைவிட நேரலாம். இதை கோயில் நிர்வாகம் கவனித்து சரி செய்யுமா?. இதுபோல தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றுவார்களா???

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Saturday, April 23, 2011

மீண்டும் நான்



எல்லோருக்கும் வணக்கம்…..

கடந்த ஒரு மாதமாக எனக்கு கல்லூரி மூன்றாம் செமெஸ்டர் தேர்வு நடந்ததால் என்னால் வலைபூவில் எழுதமுடியாமல் போய்விட்டது. அது ஒருவழியாக வரும் திங்கள் கிழமையுடன் முடிவடைகிறது. அதனால இனி மீண்டும் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனியும் எனக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கோள்கிறேன்…..
இன்று திங்கள்கிழமை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பதால்....
வீடியோ மட்டுமே



அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி….
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி