Wednesday, May 25, 2011

பழனியில் நடக்கும் கொள்ளை



கடந்த மாதம் என் நண்பன் ஒருவன் பழனி முருகர் கோயிலுக்கு போயிருந்தான். மனம் உருகி இறைவனை வேண்ட போயிருந்தவனுக்கு அங்குள்ள வியாபரிகள் தந்த தொல்லையில் மனம் நொந்து வந்தான். கோயிலுக்கு போகும் வழியெல்லாம் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களால் தொல்லை ஏற்பட்டதாக மன வருத்தத்துடன் தெரிவித்தான். அங்கு கோயிலுக்கு வரும் நபர்களை முதலில் காலனிகளை விடச்சொல்லுவது பிறகு அவர்களிடன் அர்ச்சனை தட்டு 290 ரூபாய் என்று விற்பது. பிறகு அதற்கு ஒரு ரசிது தந்துவிடுவது. அதற்கு பிறகு அதே போல செருப்பு விடச்சொல்லுபவர்களிடன் அந்த ரசிதைகாட்டவேண்டும் இல்லையேல் மேலும் ஒரு அர்ச்சனை தட்டு வாங்க சொல்லுவது என ஒரே கொள்ளை

அது மட்டும் இல்லாமல் கோயிலுக்கு போகும் வழியில் உள்ள இடங்களிலும் உள்ள சிறு சிறு கோயில்களின் பூசாரிகளும் மக்களை மிரட்டி பணம் கேட்கும் நிலைமை அங்கு உள்ளதாக என் நண்பன் மன வருத்தத்துடன் கூறினான். இது இல்லாமல் நடக்கும் போது ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை போன்ற பொருட்களை மக்களின் விருப்பம் இல்லாமல் அவர்களின் தோலில் போட்டுவிட்டு அதற்கு காசு கேட்பது அங்கு இருப்பதாக தெரிகிறது.

பழனி கோயிலுக்கு சென்றால் நிச்சயம் 500 முதல் 1000 ரூபாய் வரை தேவையில்லாமல் செலவாகும் நிலை உள்ளது. மன சாந்தி அடைய கோயிலுக்கு வரும் பக்தர்களிடத்தில் இது போல செய்வதால் அவர்களின் நிம்மதி குறைந்து மீண்டும் இந்த கோயிலுக்கு வர வேண்டும் என்கின்ற எண்ணமும் அவர்களுக்கு வராது. மேலும் பலரிடம் இதைப்பற்றி சொன்னால் அவர்களும் அங்கு சொல்லும் எண்ணத்தை கைவிட நேரலாம். இதை கோயில் நிர்வாகம் கவனித்து சரி செய்யுமா?. இதுபோல தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றுவார்களா???

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

8 comments:

  1. நான் கல்லூரி பயிலும் போது , இந்த மாதிரி ஆசாமிகளிடம் ஏமாந்த அனுபவம் உண்டு... இன்னும் இது தொடர்கிறது.... பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
  2. விழிப்புணர்வு பதிவு போடுறாராம்.!!

    ReplyDelete
  3. ஏந்தான் இப்படில்லாம் நடந்து பொது மக்களுக்கு கஷ்ட்டம் கொடுக்கராங்களோ?

    ReplyDelete
  4. @மதுரை சரவணன் ...வருகைக்கு நன்றி நண்பரே ....

    ReplyDelete
  5. @தம்பி கூர்மதியன்...ஹிஹிஹிஹி

    ReplyDelete
  6. @Lakshmi...வருகைக்கு நன்றி..கடவுள் தான் காப்பாத்தணும்.........

    ReplyDelete
  7. ஆம். இவையெல்லாம் அங்கு சர்வசாதாரணமாக நடப்பவை தான்.

    பஞ்சாமிர்தம் விற்பனையிலும் பல டூப்ளிகேட் கோல்மால்கள் நடக்கின்றன. அங்கு குருக்கள் வேஷத்தில் ஒருவர் நாங்கள் போனபோது ஸ்வாமிக்கு இன்று அபிஷேகம் செய்து எடுத்த புதுப்பஞ்சாமிர்தம் சீல் செய்து தனியே வைத்துள்ளேன்.

    1 கிலோ டின் இவ்வளவு ரூபாய் ஆகும் என்று சொன்னார். நாங்கள் சம்மதித்ததும், எங்களை ஒரு இடத்தில் அமரச்சொல்லிவிட்டு, கோவிலின் ஏதோ ஒரு பாதையில் நுழைந்து, கடையில் விற்கும் சரக்கையே வாங்கிவந்து ஒரு விலைக்கு இரு விலையாக எங்களிடம் வாங்கப்பார்த்தபோது, எங்களுடன் வந்த ஒருவர், விழிப்புணர்வுடன் கேள்விகள் கேட்டு அவரை மடக்க, முருகன் சந்நிதானத்தில் நான் அவ்வாறெல்லாம் தவறாக நடந்துகொள்வேனா, உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் வாங்கிக்கோங்கோ, இல்லாவிட்டால் ஒன்றும் கட்டாயமில்லை என்று சொல்லி ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார், வேறு பார்ட்டியை இது போல ஏமாற்ற.

    பிரபலமான கோவில்களில் இவ்வாறு பிச்சைக்காரர்களால் தொல்லைகள், வியாபாரிகளால் தொல்லை & கொள்ளை நடைபெறத்தான் செய்கிறது.

    மற்றும் ஒரு சில பிரபலமான கோயில்களில் ஒருசிலர் பக்திமான்களாக வேஷமணிந்து ஸ்பெஷல் தரிசனம் செய்ய டிக்கெட் ஏதும் வாங்காமலேயே குடும்பத்துடன் கூட்டிப்போகிறேன் என்று சொல்லி, தங்கள் செல்வாக்கால் கூட்டியும் போய் தரிஸனம் செய்வித்த பிறகு, 10 பேர்களுக்கு டிக்கெட் வாங்கியிருந்தால் தலைக்கு 50 ரூபாய் வீதம் 500 ஆகியிருக்கும். ஒரு முன்னூறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிப்போய், கோவிலுக்கு நியாயமாக வர வேண்டிய வசூல் பணத்தை கொள்ளையடித்து பங்கு போட்டுக்
    கொள்கின்றனர்.

    கோயிலுக்குச்செல்லும் நாம் தான் இதுபோன்ற ஆசாமிகளிடம் மாட்டாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. நான் சென்னிமலை.. அடிக்கடி பழநி போவேன்.. நீங்க சொல்றது உண்மை தான்

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி