Wednesday, September 7, 2011

இவங்க தொல்லை தாங்க முடியல



இந்த லோன் கொடுக்குறவங்களோட தோல்லை ரொம்ப அதிகமாயிடிச்சி. முன்னெல்லாம் வங்கிகள் தான் சார் இந்த லோன் எடுத்துக்கோங்க, அந்த லோன் எடுத்துக்கோங்கனு சொல்லுவாங்க. இப்ப எல்லாம் யார்யாரோ, எதோதோ பேர் சொல்லுறாங்க.
அப்படி தான் ஒருநாள் எங்க வீட்டு LANDLINEனுக்கு ஒரு போன் வந்துச்சி. நான் தான் எடுத்தேன். போன்ல ஒரு பொன்னு சார் உங்க பேரு என்ன அப்படினு கேட்டுச்சி. உடனே நான் நீங்க தான் போன் பண்ணீங்க. போன் பண்ணிட்டு என் பேர் கேட்டா எப்படினு சொன்னேன். உடனே அவங்க எதோ ஒரு FINANCIAL INSTITUTION (அதாவது பணம் சம்பந்தமா எதோ பண்றாங்கப்பா ..எனக்கு சரியா தெரியல) பேர சொல்லி. சார் உங்க வீட்டு போன் நம்பருக்கு ஒரு லோன் விழுந்திருக்கு. உங்க பேரு, வீட்டு முகவரி சொன்னா போதும் அப்படினு சொன்னாங்க. (போனுகெல்லாம் லோன் விழுதுப்பா)
நான் படிச்சிட்டு இருக்கேன்னு சொன்னதும் அவங்க உடனே என்னோட அப்பா பேரு, அவர் என்ன பன்றார் அப்படினு கேட்டாங்க உடனே நான் எங்களுக்கு லோன் எதுவும் வேண்டாம் அப்படினு சொல்லிட்டு கட்பண்ணிட்டேன். அப்புறமும் விடாம ரெண்டாவது தெடவையா கால் பண்ணவும் எனக்கு கோபம் வந்து திட்டவும் அப்புறம் போன் காலே வரல.
இதுகூட பரவல்லைங்க லோன் தான். ஆன சில சமயம் இந்த இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து போன் பண்ணி சார் எங்க கம்பனி இன்சுரன்ஸ் ஒன்னு எடுத்திடுங்க அப்படீனு சொல்லி தொல்ல பண்ணுவாங்க. உச்சகட்டமா சார் நீங்க திடீர்னு செத்து போயிட்டாலோ, இல்ல விபத்து ஏற்பட்டு எதாவது ஆயிட்டாலோ இந்த இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவும் அப்படீனு சொல்லுவங்க. எனக்கு அப்படியே ஒரு கோபம் வரும் பாருங்க. 23 வயசுல செத்துபோயிட்டா அப்படீனு சொன்னா எவ்வளவு கோபம் வரும். இவங்களுக்கு எப்படி நம் போன் நம்பர் கிடைக்கும்???. குத்துமதிப்பா ஒரு நம்பர் போட்டு பேசுவாங்கலா இல்ல இந்த போன் கம்பனிகளுக்கு எதாவது காசு கொடுத்து கரக்ட் பண்ணி நம்பர் வாங்கி போன் பண்ணுவாங்களா. எதுவா இருந்தா என்ன இவங்க தொல்லை தாங்க முடியல.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

8 comments:

  1. ஆமாங்க உண்மைதான் இவங்க தொல்லை தாங்கத்தான் முடியல்லே. எப்படி அவாய்ட் பண்ணரது?

    ReplyDelete
  2. இந்த மாதிரி நீங்க டென்சன் ஆகி, உங்களுக்கு இரத்த அழுத்தம் வந்து, அதனால சக்கரை வந்து, அப்டியே படிப்படியா பல வியாதிகள் உங்களுக்கு வந்து மருத்துவமனையில் சேந்திங்கன்னா நிறைய செலவு ஆகும்.அதுக்காகவே எங்க இன்சூரன்ஸ் கம்பெனில ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸி போட்டுகிட்டிங்கன்னா நல்லா இருக்கும்(நான் எனக்கு சொன்னேன்) :)))

    ReplyDelete
  3. இவங்க இம்சை நாளுக்குநாள் அதிகமாகிட்டே தான் வருது. என்ன பண்றது?

    ReplyDelete
  4. @Lakshmi.....தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  5. @தமிழ்வாசி - Prakash...ரொம்ப பாவங்க....

    ReplyDelete
  6. @N.H.பிரசாத் ..நம்மலால ஒன்னும் பன்ன முடியாது....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி