எல்லாவற்றிற்கும் தற்கொலை பதிலாகாது. மற்றவரின் பார்வையை, ஆதரவை தன் பக்கமும் தன் கோரிக்கையின் பக்கமும் திருப்ப இது போல தவறான எண்ணங்களை நாம் ஆதரிக்ககூடாது. முன்னர் முத்துக்குமரன், இப்பொழுது செங்கொடி. நாளை???
.
எதையும் சட்டரீதியாக சந்திக்கவேண்டும். இறந்த அந்த இரண்டு பேருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர்கள் செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் என்ன பாடுபடும்?
இவர்களின் இந்த முடிவு தவறானது என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை. இதை போல அடுத்த சில தற்கொலைகள் ஏற்படும் முன் நாம் இதை தடுத்தாகவேண்டும். இது போல எண்ணங்கள் இளைஞர்களுக்கு வரக்கூடாது.
தற்கொலை செய்து கொள்வது சட்டபடி தவறு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி அது ஒரு குற்றம். இவ்வாறு தற்கொலைக்கு முயல்பவர்களை காவல்துறை கைது செய்துவிடும். இப்பொழுது கூட மதுரையில் பேரரிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுதலை செய்ய சொல்லி மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு முயல அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
வாழ வேண்டிய வயதில் பிரச்சனைகளுக்கு போராடாமல் இது போல தற்கொலைக்கு முயல்வது ஒரு மூடத்தனம். இதை நாம் ஆதரிக்கவே கூடாது. எதையும் சட்டபடி செய்யவேண்டும். நம் செய்கைகள் மற்றவர்களை நல்வழியில் கொண்டு செல்லவேண்டுமே தவர அவர்களியும் தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது. இறந்து போன ஆன்மாக்கள் சாந்தியடைய நாம் பிராத்தனை செய்யும் இந்த நேரத்தில், இது போல எண்ணங்கள் என்றும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதிகொள்ளவேண்டும்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.
இறந்த அந்த இரண்டு பேருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர்கள் செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் என்ன பாடுபடும்
ReplyDeleteநல்ல பதிவு.
இதில் அரசியல்வாதிகள் குளிர்காயக் கூடாது.
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு.எப்போதும் தவறாகவே இருக்கும்..
ReplyDeleteஒரு கொலையை நிறுத்த ஒரு தற்கொலை என்பது சரியல்ல.
ReplyDelete//இந்திய அரசியல் ஆசன சட்டப்படி
சாசன சட்டம் என்றுதானே வரவேண்டும்? இல்லை நீங்கள் சரியாத்தான் எழுதி இருக்கீங்களா?
@Rathnavel...வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி ஐயா ......
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! ...வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி நண்பரே........
ReplyDelete@பாலா....வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி..அது என் தவறு தான். சுட்டி காட்டியமைக்கு நன்றி....
ReplyDeleteஆம் தவறான முடிவுகள் இதை யார் ஆதரித்தாலும் கண்டிக்க கூடியவர்களே ! போராட திராணி இல்லாத இது போன்ற கோழை தனமான முடிவுகளை தயவு செய்து யாரும் ஊக்க படுத்தாதீர்கள் , போராட்டமே தூக்கு தண்டனையை உயிர் பலிகளை எதிர்த்து தான் இப்படி உயிர்கள் காக்க படவேண்டும் என்னும் போது உயிர் இழப்பு மிகவும் மனவருத்தத்தை அடைய செய்கின்றது ............. போராடும் குணங்களை வளர்ப்போம் தற்கொலைகளை தவிர்ப்போம் தடுப்போம்
ReplyDelete@bala...தங்கள் கருத்துகளுக்கு நன்றி....
ReplyDelete