Tuesday, December 21, 2010

அல்ட்ரா சர்ப் (ultra surf) - ஒரு proxy மென்பொருள்


நான் முன்பு  ஒரு பதிவில் எழுதி இருந்தது போல எங்கள் கல்லூரியில் பல வலை தடங்களை தடை செய்து விட்டனர். கூகுள் (google) போன்ற தேடு பொறியில் கூட சில வார்த்தைகளை தடை செய்து விட்டார்கள். உதாரணமாக தேடு பொறியில் வீடியோ (video) என்று type செய்தால் தவறு (error) என்று வந்து விடும். அதனால் பல நேரங்களில் தேவையான செய்திகளை கூட நம்மால் பெற முடியாது . இது போல் பல இடங்களில் நமக்கு தேவையான வலைதடங்களையோ அல்லது தேடு பொறியில் சில சொற்களையோ தடை செய்திருப்பார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும்.

என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் முலமாக நான் அறிந்து கொண்ட ஒரு மென்பொருள் ULTRA SURF.

இந்த ULTRA SURF என்பது ஒரு proxy மென்பொருள். இதை உபயோகித்தல் அந்த மென்பொருள் proxy ஆகா செயல் பட்டு உங்களை நீங்கள் விரும்பும் வலைதடத்திர்க்கு உங்களை கொண்டு செல்லும். இதன் முலம் எந்த தடையும் இல்லாமல் உங்களுக்கு வேண்டிய வலை தடங்களுக்கோ அல்லது உங்களுக்கு தேவையான வார்த்தைகளை கூகுள் போன்ற தேடு பொறியில் இட்டு தேவையான செய்திகளை எடுத்துக் கொள்ள முடியும். இனி தடை இல்லாமல் நீங்கள் மேலோடல் செய்யலாம். எனக்கு உதவிய இந்த மென் பொருள் உங்களுக்கும் உதவும் என்று நினைகிறேன்.

2 comments:

  1. அலுவலகத்தில் வலை வீசுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்... screenshots இணைத்திருக்கலாமே... கருத்துப்பெட்டகம் என்ற வலைப்பூவின் பெயரை மாற்றலாம் என்பது எண்ணம்... வேறு ஏதாவது புதுமையான பெயர் வைக்க முயற்சி செய்யலாம்...

    ReplyDelete
  2. @ philosophy prabhakaran: கருத்துக்கு நன்றி...நிச்சயம் அடுத்த முறை செய்கிறேன்.

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி