நிகழ்வு ஒன்று:
சில நாட்களுக்கு முன்னே நான் விட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு ஆறு அல்லது ஏழு வயது கொண்ட ஒரு சிறுமி அங்கு உள்ளவர்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். பள்ளிக்குடத்தில் சென்று புத்தகங்களை பிடித்து படிக்கும் வயதில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்த எனக்கு மிகவும் வருத்தமாகவும் அவளின் பெற்றோரை நினைத்து கோபமாகவும் இருந்தது. பெற்றவுடன் தன் கடமை முடிந்து விட்டது என்று இவளின் பெற்றோர் இவளை விட்டு விட்டார்களா? இல்லை பெண் குழந்தை தான் என்று அவளை ஏளனமாக விட்டுவிட்டார்களா? எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகளை அவள் படைக்கும் வாய்ப்பு உள்ளது. இது எப்பொழுதுதான் இந்த சமுதாயத்திற்கு புரியுமோ?... இந்த நிலை எப்பொழுது தான்மாறும் என்று தெரியவில்லை. நான் பார்த்தது அன்று பெண் குழந்தை. ஆனால் பல இடங்களில் ஆண் குழந்தைகளையும் இந்த கோலத்தில் பார்த்திருக்கிறேன். குழந்தைகளை இதுபோல் இரவல் கேட்ட வைப்போரை சட்டம் தண்டிக்காமல் போனால் இந்த நிலைமை மாறவே மாறது. இந்தியாவும் வல்லரசாக முடியாது. ஏனனில் இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள்
நிகழ்வு இரண்டு:
நான் புறப்பட வேண்டிய ரயில் வந்தவுடன் நான் அங்கிருந்து கிளம்பினேன். முன்பே பயண சீட்டை பதிவு செய்திருந்ததால் நான் நேராக சென்று எனக்காக பதிவு செய்த இடத்தில அமர்து கொண்டேன். அது அப்பர் பெர்த்(upper berth). சாயுங்கால நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் சென்றவுடன் கூட்டம் குறைந்தது. அதுவரை அந்த பெட்டியில் அமைதியாக இருந்த ஒரு இளம் ஜோடி மற்றவர்கள் இருப்பதையும் மறந்து விளையாடத் தொடங்க அங்கு இருப்பவர்கள் எல்லோர்க்கும் அது தர்மசங்கடத்தை உருவாக்கியது. பெட்டியில் பல வயதானவர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் இருந்தபோதிலும் அவர்கள் அமைதியாக இல்லை. இது ஐய்யப்ப சுவாமி காலம் என்பதால் பல மாலையிட்டவர்களும் இருந்தனர். அவர்கள் சாமியையும் மாதிக்கவில்லை ஆசாமிகளையும் மதிக்கவில்லை. என்ன தான் புதுமனந் தம்பதியினர் ஆனாலும் பொது இடத்தில அவர்கள் அமைதியுடன் இருக்கலாம் அல்லவா???இனியாவது இவர்கள் திருந்தட்டும்.
நிகழ்வு முன்று:
மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் தந்தது. அனால் அன்று இரவு ரயிலில் நடந்த மற்றொரு நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ரயிலில் உறங்கிகொண்டிருந்த நான் கடிகார அலாரம் அடித்தால் எழுந்தேன். ரயில் அரை மணிநேரம் தாமதமாக சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது என்னை போலவே எழுந்த ஒருவர் தான் இடத்தில இருந்து இறங்கி கழிவறைக்கு சென்று புகை பிடித்துக்கொண்டிருந்தார். ரயிலில் புகை பிடிப்பது தவறு. அதையும் மீறி அவர் புகைப்பதை பார்த்த ஒரு காவலர் அவரை கண்டித்தது மட்டும் அல்லாமல் அவருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தார். இனிமேல் நிச்சயம் அவர் ரயிலில் புகைக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். அந்த காவலருக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் நன்றி. உடனக்குடன் இது போல தண்டனை கிடைத்தால் நிச்சயம் பல தவறுகள் மாறும்.
1. அந்த சிறுமி வேறு ஏதாவது சூழ்நிலையில் பிச்சை எடுக்க நேர்ந்திருக்கலாம்... அவளது தாய் தந்தை இறந்துகூட போயிருக்கலாம்...
ReplyDelete2. நிச்சயம் கண்டிக்க வேண்டிய விஷயமே... தினமும் மாநகர பேருந்துகளிலும் இது போன்ற அக்கப்போர்களை காண நேரிடுகிறது...
3. அபராதமோ லஞ்சமோ சம்பந்தப்பட்ட நபர் இனி ரயிலில் புகைக்காமல் இருந்தால் மகிழ்ச்சிதான்...
பின்னூட்டம் போடுமிடத்தில் வரும் word verificationஐ நீக்கி விடவும்...
ReplyDeleteஅதை அகற்றுவது எப்படி???
ReplyDeleteblogger.com ---> settings ---> comments ---> Show word verification for comments? ---> Select 'NO' radio button and Click on 'Save Settings' Button...
ReplyDelete@ prabha...nanri nanbaa............. how to reply a comment rather than posting??
ReplyDelete