Thursday, December 23, 2010

ரொம்ப நல்லவங்க… பாகம்-2


ஜிம்பாவே நாட்டில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணியினர், அந்த தோல்விக்கு பின்னர் அவங்க நாட்டுல ஒன்னு கூடி அத பத்தி விவாதிக்குறாங்க.

காட்சி ஒன்று:

பாண்டிங்: ச்ச அசிங்கமா இருக்கு டா.
கிளார்க்  : எது?
பாண்டிங் : ஜிம்பாவே நாம தோத்தது.
வாட்சன்: என்னடா புதுசா தொகுற மாதிரி பீல் பண்ற. அதான் நாம எங்க போனாலும் தான் தோகறோம்.
பாண்டிங் : இருந்தாலும் ஜிம்பாவே கூடதொத்தது அசிங்கமா இருக்கு.
 
வாட்சன்: விடு என்ன பண்றது நம்ம நெலமே!.
கிளார்க்  : டே ரொம்ப பீல் பண்ணாதிங்க டா.
பாண்டிங் :இன்னொரு முறை அங்க போயி?
கிளார்க்  : தோகுரதுகா? உன்ன கொன்னுடுவேன்.
பாண்டிங் :ஜெயிக்கலாம் நு சொல்லவந்தேன்.
வாட்சன்: சரி விடு தோத்தது தோதாச்சி. அடுத்தது என்ன பண்ண?
பாண்டிங் : அவிங்கள இங்கே குபிடுவோம்.
வாட்சன்: எதுக்கு இங்க தோகவா? உன் வாய முடு.
பாண்டிங் : கொஞ்சம் பாசிடிவா தின்க் பண்ணுங்கடா...
கிளார்க்  : பேசாம கொஞ்ச நாளைக்கு எந்த மட்ச்ளேயும் கலந்துக்க வேண்டாம். நேரா வேர்ல்ட் கப்ல பாத்துக்கலாம்.
பாண்டிங் : அது முடியாது. ஏற்கனவே நம்ம பிரதமர் என்கிட்ட விளக்கம் கேட்டுள்ளார். அதனால ஏதாவது சாக்கு சொல்லிட்டு அந்த ஜிம்பாவே டீமா இங்க கூபிட்டு.....
வாட்சன்: மறுபடியும் இங்க தோக்க போறோம்...அதானே!
பாண்டிங் : ஜெயிக்க டா....'
கிளார்க்  : ஆமாமா ஜெயிச்சிடுதான் மறுவேலை...
பாண்டிங் : சரி விடு... பிரதமர் கிட்ட சொல்ல சில காரணக்கள சொல்லுங்கடா.
அறையில் ஒரே  அமைதி...
பாண்டிங் : இப்ப எவனும் பேசமாட்டிங்கலே.... சொல்லுங்க டா...
கிளார்க்  : நீதான் கேப்டன். அதனாலே நீ தான் சமாளிக்கணும்.
பாண்டிங் : தெரியும் டா கடைசியில என்ன கழட்டிவிட்டுடுவீங்க்னு ...நானே பாத்துக்குறேன்.

காட்சி இரண்டு:

பாண்டிங் பிரதமரிடம் ஏதேதோ விளக்கங்கள் சொல்ல திருப்திபடாத பிரதமர் அந்த டீமா இங்கு கூபிட்டு விளையாட சொல்லிடுறாங்க.

காட்சி மூன்று :

பாண்டிங் : பிரதமர் காரணத ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. கண்டிப்பா அவங்கள இங்க கூபிட்டு விளையாட சொல்லிட்டாரு.
வாட்சன்: அடுத்த தோல்வியா... என்னால முடியல டா.....கொஞ்சம் எனக்கு கேப்(gap) வேணும்.
பாண்டிங் : டேய் என்ன நம்புங்க டா. இந்த முறை நான் century அடிச்சி...
கிளார்க்  :  சும்மா காமெடி பண்ணாதடா... நீ சொல்லறது எப்படி இருக்கு தெரியுமா அரசியல்வாதிகள் நாங்க ஊழல் பண்ண மாட்டோம்னு சொல்லற மாதிரி இருக்கு..
பாண்டிங் : டேய். நான் பிரதமர் கிட்ட ஒகேய்னு சொல்லிட்டேன். இப்ப ஒன்னும் பண்ண முடியாது.

காட்சி நான்கு:

ஜிம்பாவே அணிவீரர்கள் மீண்டும் மிக சந்தோசமாக ஆஸ்திரேலியா செல்கிறார்கள். அங்கு நடந்த மாட்சில் மறுபடியும் ஜிம்பாவே அணியினர் வெற்றி பெற ஜிம்பாவே கேப்டன் பாண்டிங்கிடம் சென்று நன்றி தெரிவித்துவிட்டு தன் அணி வீரர்களுடன் நாட்டுக்கு திரும்புகிறார்.
அப்பொழுது அவர் தன் அணி வீரர்களிடம்  கூறுகிறார் "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்கடா இவங்க நம்மள விட ரொம்ப நல்லவங்கடா".



ரொம்ப நல்லவங்க முதல் பாகம் படிக்க

No comments:

Post a Comment

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி