Friday, December 23, 2011

எனக்கு ஆச்சரியமூட்டிய செய்தி


எனக்கு ஆச்சரியமூட்டிய செய்தி:

நான் வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் இனையதளத்தில் அன்றைய செய்திகளை படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் நான் கீழ்வரும் செய்தியை கண்டேன்.

சரி அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தான் இந்த பதிவு.

**********************************************************************************

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை உருவாக்கிய நம் முன்னேர்கள் அதிபுத்திசாலிகளே...

**********************************************************************************

மேலே உள்ள செய்தி நான் இனையதளத்தில் படித்தது.

அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி.

Thursday, December 1, 2011

அன்புள்ள நண்பர்களுக்கு



அன்புள்ள நண்பர்களுக்கு,



அனைவருக்கும் என் இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. வேலை புதிது மற்றும் வேலைக்கு நான் புதிது ஆகிய இரண்டு காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. இப்பொழுது  தான் வேலை கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டதால் இனி முடிந்த வரை மீண்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

வேலைக்கு சேரும் முன் ”எப்படா வேலைக்கு சேரப்போகிறோம் என்று தான் எப்பொழுதும் எண்ணம் இருக்கும். வீட்டுல இருக்குறவங்க சும்மா இருந்தாலும் பக்கத்துவீட்டுல எதிர்வீட்டுல இருக்குறவங்களாம் ”என்னப்பா இன்னமும் வேலைக்கு போகலனு கேக்கும் போதெல்லாம் ’பப்பி ஷேமா’ இருக்கும், மானம் போகும். இப்பொழுது எப்படா வேலை முடியும், வீட்டுக்கு போகலாம் என்னும் எண்ணம் வந்துவிட்டது. சரி புதியவன் என்பதால் வேலை பழக நேரம் எடுக்கும் அதுவரைக்கும் கொஞ்சம் சிரமம் தான்.

நான் எழுதாத நேரத்திலும் என்னை நினைவில் கொண்டு சில நண்பர்கள் ஏன் எழுதுவதில்லை என்று என்னிடம் விசாரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள் பல. இபோதைக்கு இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் உங்களை அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.   


Wednesday, September 7, 2011

இவங்க தொல்லை தாங்க முடியல



இந்த லோன் கொடுக்குறவங்களோட தோல்லை ரொம்ப அதிகமாயிடிச்சி. முன்னெல்லாம் வங்கிகள் தான் சார் இந்த லோன் எடுத்துக்கோங்க, அந்த லோன் எடுத்துக்கோங்கனு சொல்லுவாங்க. இப்ப எல்லாம் யார்யாரோ, எதோதோ பேர் சொல்லுறாங்க.
அப்படி தான் ஒருநாள் எங்க வீட்டு LANDLINEனுக்கு ஒரு போன் வந்துச்சி. நான் தான் எடுத்தேன். போன்ல ஒரு பொன்னு சார் உங்க பேரு என்ன அப்படினு கேட்டுச்சி. உடனே நான் நீங்க தான் போன் பண்ணீங்க. போன் பண்ணிட்டு என் பேர் கேட்டா எப்படினு சொன்னேன். உடனே அவங்க எதோ ஒரு FINANCIAL INSTITUTION (அதாவது பணம் சம்பந்தமா எதோ பண்றாங்கப்பா ..எனக்கு சரியா தெரியல) பேர சொல்லி. சார் உங்க வீட்டு போன் நம்பருக்கு ஒரு லோன் விழுந்திருக்கு. உங்க பேரு, வீட்டு முகவரி சொன்னா போதும் அப்படினு சொன்னாங்க. (போனுகெல்லாம் லோன் விழுதுப்பா)
நான் படிச்சிட்டு இருக்கேன்னு சொன்னதும் அவங்க உடனே என்னோட அப்பா பேரு, அவர் என்ன பன்றார் அப்படினு கேட்டாங்க உடனே நான் எங்களுக்கு லோன் எதுவும் வேண்டாம் அப்படினு சொல்லிட்டு கட்பண்ணிட்டேன். அப்புறமும் விடாம ரெண்டாவது தெடவையா கால் பண்ணவும் எனக்கு கோபம் வந்து திட்டவும் அப்புறம் போன் காலே வரல.
இதுகூட பரவல்லைங்க லோன் தான். ஆன சில சமயம் இந்த இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து போன் பண்ணி சார் எங்க கம்பனி இன்சுரன்ஸ் ஒன்னு எடுத்திடுங்க அப்படீனு சொல்லி தொல்ல பண்ணுவாங்க. உச்சகட்டமா சார் நீங்க திடீர்னு செத்து போயிட்டாலோ, இல்ல விபத்து ஏற்பட்டு எதாவது ஆயிட்டாலோ இந்த இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவும் அப்படீனு சொல்லுவங்க. எனக்கு அப்படியே ஒரு கோபம் வரும் பாருங்க. 23 வயசுல செத்துபோயிட்டா அப்படீனு சொன்னா எவ்வளவு கோபம் வரும். இவங்களுக்கு எப்படி நம் போன் நம்பர் கிடைக்கும்???. குத்துமதிப்பா ஒரு நம்பர் போட்டு பேசுவாங்கலா இல்ல இந்த போன் கம்பனிகளுக்கு எதாவது காசு கொடுத்து கரக்ட் பண்ணி நம்பர் வாங்கி போன் பண்ணுவாங்களா. எதுவா இருந்தா என்ன இவங்க தொல்லை தாங்க முடியல.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

Tuesday, August 30, 2011

தடுக்கப்படவேண்டிய தற்கொலைகள்



எல்லாவற்றிற்கும் தற்கொலை பதிலாகாது. மற்றவரின் பார்வையை, ஆதரவை தன் பக்கமும் தன் கோரிக்கையின் பக்கமும் திருப்ப இது போல தவறான எண்ணங்களை நாம் ஆதரிக்ககூடாது. முன்னர் முத்துக்குமரன், இப்பொழுது செங்கொடி. நாளை???
.
எதையும் சட்டரீதியாக சந்திக்கவேண்டும். இறந்த அந்த இரண்டு பேருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர்கள் செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் என்ன பாடுபடும்?

இவர்களின் இந்த முடிவு தவறானது என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை. இதை போல அடுத்த சில தற்கொலைகள் ஏற்படும் முன் நாம் இதை தடுத்தாகவேண்டும். இது போல எண்ணங்கள் இளைஞர்களுக்கு வரக்கூடாது.

தற்கொலை செய்து கொள்வது சட்டபடி தவறு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி அது ஒரு குற்றம். இவ்வாறு தற்கொலைக்கு முயல்பவர்களை காவல்துறை கைது செய்துவிடும். இப்பொழுது கூட மதுரையில் பேரரிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுதலை செய்ய சொல்லி மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு முயல அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

வாழ வேண்டிய வயதில் பிரச்சனைகளுக்கு போராடாமல் இது போல தற்கொலைக்கு முயல்வது ஒரு மூடத்தனம். இதை நாம் ஆதரிக்கவே கூடாது. எதையும் சட்டபடி செய்யவேண்டும். நம் செய்கைகள் மற்றவர்களை நல்வழியில் கொண்டு செல்லவேண்டுமே தவர அவர்களியும் தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது. இறந்து போன ஆன்மாக்கள் சாந்தியடைய நாம் பிராத்தனை செய்யும் இந்த நேரத்தில், இது போல எண்ணங்கள் என்றும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதிகொள்ளவேண்டும்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.  

Monday, August 29, 2011

முதலில் நாம் மாறுவோமா?



இன்னைக்கு நம்ம நாட்டுல ரொம்ப முக்கியமான நிகழ்வு அன்னா ஹசாரேவின் போராட்டம். ஒரு வழியா அது முடிஞ்சிபோச்சி. இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவு. சாதாரண மக்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை எல்லோரும் இதற்கு ஆதரவு. எதோ ஊழல ஒழிக்கனும் ஒழிக்கனும்னு கத்திக்கிட்டு இருக்கோம். லஞ்சமா வாங்கின கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வரனும். அதுக்கு வேற ரமணா மாதிரி கணக்கு தராங்க. அந்த பணம் வந்துட்டா நமக்கு 10 வருசம் வரி தேவையில்லையாம், பெட்ரோல் 25 ரூபாய்க்கு தருவாங்கலாம். என்னமா சொல்லுராங்க. சொல்லுரவங்கலை எல்லாம் நான் கேட்டுரேன்(என்னையும் சேர்த்துதான்), நாம எத்தன பேர் இதுவரைக்கு லஞ்சம் வாங்குனதோ கொடுத்ததோ இல்லை. சத்தியமா சொல்லுங்க. குழந்தைகிட்ட கூட நீ இத பண்ணா நான் இதை செய்வேனு சொல்லி எல்லாத்துக்கும் எதாவது கிடைக்கும்னு எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

நம்ம ரேஞ்சுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் வாங்குனா, நம்மள மாதிரி லட்சம் பேரு ஓட்டு போட்டு MLA, MP ஆகுறவங்க அவங்க ரேஞ்சுக்கு கோடியில வாங்குராங்க. அதுக்கும் யார் காரணம். நாமதான். அவனுக்கு ஓட்டு போட கூட நாம அவங்ககிட்ட இருந்து பணம், பொருள்னு எவ்வளவு வாங்கியிருக்கோம். அப்புறம் அவன் எங்க பணத்த சுருட்டிட்டான், முழுங்கிட்டான் அப்படினு போலம்பரது. முதலில் நாம சுத்தமா இருக்கனும்., அப்புறம் மத்தவங்கல பத்தி பேசனும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துல அவருக்கு ஆதரவு தரோம்னு போய் இருந்தவங்கல்ல பலபேருக்கு ஜன் லோக்பால் பத்தி பாதி தெரியாது. அரசாங்கம் என்ன சொல்லியிருக்காங்க, அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால்ல என்ன இருக்கு எதுவுமே தெரியாது. அதனாலதான் அவங்கலே அதை மக்களுக்கு விளக்கி சொன்னாங்க.(எனக்கும் எதுவும் தெரியாது என்பது உண்மை). சும்மா நாமும் அதரவு தரோம்னு சீன் போட்டுகிட்டு போய் உட்கார்ந்துகிறது.

எத்தனபேர் பொறியியல் கல்லூரியிலேயோ, மருத்தவ கல்லூரியிலேயோ, அல்லது வேறு ஏதாவது படிக்கவோ CAPITATION அதாவது DONATION தந்திருக்கோம். நாம மட்டும் தப்பு செய்யலாம் ஆனா மத்தவன் செய்தா நமக்கு வலிக்குது. அது கூட ஏன்னா அவன் நிறைய சம்பாதிக்குறான். நமக்கு கொஞ்சமா கிடக்குதுங்கிற வயித்தெறிச்சல். அதான் காரணம்.. வேர ஒன்னும் இல்லை

இறுதியா நான் என்ன சொல்லுரேன்னா நானும் அன்னா ஹசாரே சொல்லுர மாதிரி ஊழல் ஒழியனும் என்பதை ஒத்துகிறேன். ஆனா அதுக்கு முதலில் நாம மாறனும். அப்புறம் மத்தவங்களுக்கு நாம சொல்லலாம். எல்லாம் மாற்றமும் வீட்டில் இருந்து தான் என்பது என் கருத்து.

ஜெய் ஹிந்த்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மோசடிகள் சில


இது எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது

அமைதியின் நாடாக இருந்த நம் இந்திய நாடு இப்பொழுது மோசடிகளின் நாடாக மாறிவிட்டது.
இங்கே நம் இந்தியாவில் நடந்த  சில மோசடிகள் உங்களுக்காக

இந்த தொகையை பார்த்தால் எனக்கு மயக்கமே வருகிறது. நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

Saturday, July 30, 2011

ரயிலில் ஒரு திகில் அனுபவம்




இது சில நாட்களுக்கு முன்பு எனக்கு நடந்த ஒரு அனுபவம். அன்று நான் எர்னாகுலத்தில் இருந்து காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தேன். ஆலப்புழா எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தேன். மாலை 5.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து ரயில் வண்டி கிளம்பியது. நான் ஏறியதில் இருந்து இரண்டாவது நிறுத்தத்தில் இருந்து ஒரு நபர் வண்டியில் ஏறினார். பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தார்(உண்மையாகவும் இருக்கலாம்.) சிறிது நேரம் கழிந்த பிறகு அவருக்கு சில தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அவரும் தான் பேசுவது யாருக்கு கேட்கக்கு கூடாது என்பதைப்போல மிகவும் மெதுவாக பேசிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல அவர் ஒரு விதமாக நடந்து கொண்டார். கைகடிகாரத்தை பார்ப்பதும் தான் கொண்டுவந்த பையை பார்ப்பதுமாக இருந்தார். பிறகு என்னையும் ஒரு மாதிரி பார்த்தார். திடீரென ஒரு நிறுத்தத்த்ல் அவர் மேல உள்ள பெர்த்தில் இருந்து இறங்கி எங்கோ சென்றுவிட்டார். வண்டி கிளம்பியும் அவர் வரவில்லை. அன்று தான் நான் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் முன்னர் ஏதோ ஒரு இடத்தில் ரயிலில் குண்டு வெடித்ததாக செய்தி படித்திருந்தேன். ரயில் கிளம்பியும் அவர் வராததால் எனக்கு மிகவும் பயம் வந்துவிட்டது.

அப்பொழுது மணி இரவு 7.50. நான் ஒருவேலை சரியாக 8.00 மணிக்கு வெடிப்பது போல வைத்திருப்போரோ என்று எண்ணி மிகவும் பயந்து கொண்டிருந்தான். மணி எட்டை கடந்தது. ஒருவேளை ஒன்பது மணிக்கு வெடிப்பது போல வைத்திருப்ப்பாரோ என்று எனக்குள் ஒரு பயம். எனக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்துவிட்டது. ரயிலில் உள்ள காவலரிடம் இதை பற்றி கூறலாமா என்று கூட யோசித்தேன். மணி ஒன்பதை தாண்டியது. பயம் மேலும் அதிகரித்து விட்டது. அந்த மனிதரும் வரவில்லை. ஒருவேளை பத்து மணிக்கு மேல் வெடிக்குமோ என்று எனக்கு ஒரு எண்ணம். ஏனெனில் அதன் பிறகு ரயில் தமிழகத்திற்குள் வண்டி வந்து கொண்டிருந்தது. எனக்கு மரண பயம். அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு காவலர் வந்தார். அவரிடம் சொல்லலாம் என்று நினைப்பதற்குள் வண்டி ஒரு நிறுத்தத்தில் நின்றது. அவரும் இறங்கிவிட எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இறுதியாக நானே சென்று ஏதாவது ஒரு காவலரை கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து என் மேல் பெர்த்தில் இருந்து கீழே இறங்கியதும் வண்டி கிளம்பிவிட்டது. அந்த நேரம் அந்த பைக்கு சொந்தக்காரரான அந்த மர்ம நபர் நான் இருந்த பெட்டியில் ஏறி தன் பெர்த்தில் படுத்துக்கொண்டார். பின்புதான் என் மனம் நிம்மதி அடைந்தது. அதன் பிறகு நான் தூங்கவே இல்லை.  இந்த திகில் பயணத்தை என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாது.    

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Friday, June 24, 2011

அழிந்து போன ஃபைல்களை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள்


பல நேரங்களில் நாம் மறாதியாக சில தேவையான ஃபைல்களை நம் கண்ணியில் இருந்து அழித்துவிடுவோம். அப்படி தெரியாமலோ, தேவை இல்லை என்று நாம் கருதி அழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் தான் ரெகுவா

இதை ஒருமுறை நம் கணிணி Install செய்துவிட்டால் போதும் அழித்த ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ திரும்ப எடுத்துவிடலாம். ஆனால் ஏற்கனவே இருந்த ஃபோல்டெரை அழித்து விட்டு வேறு ஒரு ஃபோல்டெரையோ ஃபைலையோ அங்கு சேமித்து வைத்திருந்தால் திரும்பப்பெருவது சிரமம் .

            இதை கண்ணியில் Install செய்வதும் உபயோகிப்பதும் மிகவும் எளிது.

உபயோகிக்கும் முறை:


முதல் படியாக தேவையான மொழியை தேர்ந்தெடுக்கவும்

அடுத்த தேவையான ஃபல் வகையை தேர்ந்தெடுக்கவும்




அடுத்து அந்த ஃபைல் அல்லது ஃபோல்டெர் இருந்த இடம் உங்களுக்கு தெரியுமானாலை அதற்கு ஏற்றார்போல் தேவையான option-ஐ தேர்ந்தெடுக்கவும்.





பிறகு மேலே உள்ளது போல ஒரு dialog box வரும். அதில் start அழுத்திவிட்டால் அதன் பிறகு process முடிந்து அழிந்து போன ஃபில் ஃபோல்டர்கள் ஒரு dialog box-இல் வரும். தேவையானவற்றை தேர்வு செய்து Recover என்னும் பொத்தானை அழுத்தினால் அழிந்து போனது திரும்ப வந்துவிடும்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய 


அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி



Friday, June 17, 2011

நான் அடித்த அரைசதம்


 
நானும் அரைசதம் அடிச்சுட்டேன். கிரிக்கெட்ல இல்லைங்க பதிவுலகத்துல. எப்படியோ நானும் நாற்பத்தி ஒன்பது பதிவு போட்டுட்டேன். இது என் ஐம்பதாவது பதிவு. அதான் அரைசதம் பதிவு இது. இத்தனை நாளா எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி.

நானும் எதுவுமே தெரியாமல் அம்பது பதிவு போட்டுட்டேன். இப்ப கொஞ்ச நாளா internet connection இல்ல. அதனால பதிவு எதையும் போட முடியறதில்லை. இனி முடிந்த அளவுக்கு பதிவுகள் இட முயற்சி செய்கிறேன். நான் எழுதாத இந்த நேரங்களிலும் என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்ட அன்பு சகோதரர் தம்பி கூர்மதியன் அவர்களுக்கும், Lashmi அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் நான் ஏன் எழுதறது இல்லைனு சொல்லி என்னை விசாரித்த வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் இந்த அம்பதாவது பதிவில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்காங்க. நான் வலைபூவில் எழுதுவதற்கு முக்கிய காரணமான நண்பன் பிலாசபி பிரபாகர், அரசர்குளத்தான் கஸாலி அவர்கள், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்த எல்.கே அவர்கள் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.  என்னையும் மதித்து வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக்கிய சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அப்படியே இன்னைக்கும் ஒரு பதிவை தேத்திட்டேன். விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.
 
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி