Saturday, October 28, 2017

அன்புடன் வணக்கம்

அன்பு நண்பர்களுக்கு,
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு.

இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இழப்புகள். பல மகிழ்ச்சியான தருணங்கள். பல துயரங்கள்.

மாணவனாக இந்த உலகத்தில் எந்தொரு பெரிய அனுபவமும் இல்லாமல், கடமைகள் இல்லாமல் சுதந்திரமாக திரிந்த பொது இருந்த நிறைய விடயங்கள் இப்போது இல்லை.

வேலைக்கு செல்லவேண்டும். சம்பாதிக்க வேண்டும். ஒரு மகனாக தாய்க்கு செய்யவேண்டிய கடமைகள். ஒரு கணவனாக மனைவிக்கு செய்யவேண்டியவை. தந்தையாக மகனுக்கு செய்யவேண்டிய கடமைகள். அவர்களின் எதிர் காலத்திற்கு, நம் எதிர்காலத்திற்கு என நாம் சேமிக்க வேண்டியவை என நம் கடமைகளின் எண்ணிக்கை முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கால கட்டத்தில் கடந்து செல்லவேண்டிய பாதை.


 கயல் படத்தில் ஒரு காட்சி வரும். மனித வாழ்க்கை பறவைகளை போல இருக்க வேண்டும் என. கேட்டு ரசிப்பதற்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு நிச்சியமாக அது சரிபட்டு வரும் என தோன்றவில்லை. தேவைகளை குறைக்க வேண்டும் என நினைத்தாலும் அது நடக்காது. நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் அது நீண்டு கொண்டே இருக்கிறது.

வாழ்கைக்கு பணம் முக்கியமில்லை என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை, பணம் மட்டும் முக்கியமில்லை என்று சொல்லலாமே தவிர பணமும் நிச்சயமாக முக்கியமான இன்றியமையாத ஒன்று. அது இல்லாமல் வாழ்கையில் எந்த ஒரு நிகழ்வும் நடப்பதில்லை. எதோ ஒரு வடிவில் பணம் நிச்சயமாக  நமக்கு தேவை. அதை நோக்கி தான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

கிட்ட தட்ட வாழ்க்கை இயந்திரமாக மாறிவிட்டது. காலையில் எழுந்து தயாராகி, வேலைக்கு சென்று, அன்றாட வேலைகளை பார்த்துவிட்டு, வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்குவது என வாழ்க்கை ஒரு அட்டவணை வாழ்க்கையாகிவிட்டது

இந்த இயந்திர வாழ்கையில் இருந்து ஒரு சிறு மாற்றத்திற்காக தான் இந்த பதிவு.மீண்டும் தொடர்ந்து எழுதும் முயற்சியின் ஒரு தொடக்கம் இது    
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

Thursday, June 14, 2012

மலிவு விலையில் ஆபத்து.

 அன்பு நண்பர்களுக்கு



அனைவருக்கும் என் இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு இது தான் என் முதல் பதிவு. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. மேலும் நான் தங்கியுள்ள இடமும் அலுவலகமும் சிறிது தொலைவாக உள்ளதால் அதுவும் ஒரு காரணமாகிவிட்டது. ஒரு வழியாக நான் மீண்டும் இந்த பதிவை இடுகிறேன்.

நாம் பல நேரம் பல பொருட்களை மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி அதை வாங்கி நாம் உபயோகித்துவிடுகிறோம் ஆனால் அப்படி மலிவான பொருட்களால் பல பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நாம் அர்ப்பமாக நினைக்கும் பல பொருட்களால் நமக்கு தீங்குகள் நேரிடும் என்பதை நாம் மற்ந்துவிடுகிறோம்.

அப்படியான ஒரு பொருள் தான் காதுகளை சுத்தம் செய்ய நாம் உபயோகிக்கும் பட்ஸ்(Budds).

தேவையில்லாத போது நாம் இது போன்ற பொருட்களை உபயோகிக்கக்கூடாது. சிலருக்கு பட்ஸை தொடர்ந்து உபயோகிக்க பழகி அது இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலைமையை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். இதை தொடர்ந்து உபயோகிக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் கூட சொல்லுகிறார்கள்.
ஆனாலும் நாம் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து உபயோகிக்கிறோம்.

இரயில் நிலையங்களிலோ பேருந்து நிலையங்களிலோ மலிவான விலையில் பட்ஸ் விற்கிறார்கள். அவர்களில் பெரும்பானவர்கள் கண் தெரியாதவர்கள். நாமும் அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டு அவர்களிடமிருந்து பட்ஸ் வாங்கிவிடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த வேரு எதாவது பொருட்களை வாங்கலாம். ஆனால் பட்ஸ் அல்ல. ஏனெனில் அது மருத்துவமைனைகளில் இருந்து வெளியே தூக்கி எரியப்படும் பஞ்சுகளை சுத்தம் செய்து அதில் இருந்து உருவாக்கப்படுவதாக ஒரு செய்தி அறிக்கை சொல்கிறது. அவர்களுக்கு உதவுவதகாக் நாம் நம்மை தண்டித்துக்கொள்கிறோம். மற்றவர்களுக்கு நாம் உதவலாம். அதுமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியமாக உதவலாம் ஆனால் அதனால் நமது உடலுக்கே தீங்கு வந்தால் யோசிக்கவேண்டிய விசயம்.

அதனால் ஒரு பொருளை வாங்கும் போது தன் விலையை விட அதன் தரம் மிகவும் முக்கியம்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி. 
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி